"யாதும் ஊரே திட்டம் "
- உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான "யாதும் ஊரே" திட்டத்தையும் வலைதளத்தையும் அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
- நியூயார்க்கில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
- அதன் வாயிலாக தமிழகத்தில் 2,780 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் உறுதியளித்துள்ளன.
- ஹல்டியா பெர்ரோகெமிக்கல்ஸ் தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை சுமார் ரூ.50,000 கோடி செலவில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
- இது தவிர, சான் பிரான்சிஸ்கோ நகரில் 2,300 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் போடப்பட்டன.
ஒப்பந்தங்கள் : இந்தியா - ஜப்பான்
- இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான வருடாந்திர சந்திப்பிற்காக ஜப்பானுக்குப் பயணம் செய்துள்ளார்.
- இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஜப்பான்-இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னதாக வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவை அடங்கிய முதலாவது சந்திப்பை (2 + 2) நடத்துவதற்கான தங்களின் விருப்பத்தை அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.
உச்சி மாநாடு : 20 வது இந்தியா - ரஷ்யா
- விளாடிவாஸ்டாக் நகரில் இந்தியா, ரஷ்யா 20-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
- ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிராந்தியத்திற்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
- இந்த மாநாட்டில் 2025 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 30 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.
- சென்னை மற்றும் விளாடிவோஸ்டாக் ஆகிய நகரங்களுக்கிடையே ஒரு முழுமையான கடல் வழியைக் கொண்டிருப்பதற்கான நோக்கம் சார்ந்த ஒப்பந்தம் ஒன்று இந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
- “தேசிய நாணயங்களில் பணவழங்கீடுகளை" மேற்கொள்வதற்கான பரஸ்பரத் தீர்வுகளை ஊக்குவிக்கும் பணி தொடரும் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
உலகளாவிய நிதி - எய்ட்ஸ், காச நோய் & மலேரியா
- 6வது நிதி கொடுத்தல் சுழற்சி முறைக்காக (2020-22 ஆம் ஆண்டு) எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா ஆகியவற்றிற்கான உலகளாவிய நிதிக்கு (Global Fund for AIDS, TB and Malaria - GFTAM) இந்தியா 22 மில்லியன் டாலர் பங்களிப்பை அறிவித்துள்ளது.
- எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா ஆகியவற்றின் தடுத்தல், சிகிச்சை மற்றும் பராமரிப்புத் திட்டங்களின் உலகின் மிகப்பெரிய நிதியாளர் அமைப்பு உலகளாவிய நிதி ஆகும்.
- 2002 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய நிதியத்துடன் ஒரு நிலையான பங்குரிமையை இந்தியா பகிர்ந்து வருகின்றது. அந்த அமைப்பில் இந்தியா பெறுநராகவும் நன்கொடையாளராகவும் உள்ளது.
- இதன் தலைமையகம்: சுவிட்சர்லாந்து.
ஹாங்காங்
- சர்ச்சைக்குரிய "நாடு கடத்தல் மசோதாவை” திரும்பப் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகமான இந்த மசோதாவானது கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் “ஜனநாயக சார்பு” தொடர்பான பேரணிகளைத் தூண்டியது.
- முன்மொழியப்பட்ட இந்த மசோதாவானது குற்றவியல் தொடர்பான சந்தேக நபர்களை சீனாவின் முக்கிய நிலப்பகுதிக்கு நாடு கடத்த அனுமதிக்கும்.
- 1842 ஆம் ஆண்டில் முதல் அபின் போரின் முடிவில் சீனாவின் குயிங் வம்சம் ஹாங்காங் தீவை "விட்டுக் கொடுத்த" பின்னர் ஹாங்காங் ஆங்கிலப் பேரரசின் காலனியாக அது மாறியது.
- சிலபல கூடுதல் பிரதேசங்களுடன், பிரிட்டன் 1898 ஆம் ஆண்டில் புதிய பிரதேசங்களை 99 ஆண்டுக் குத்தகைக்குப் பெற்றது. 1997 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி சீனாவுக்கு மாற்றப்பட்டது.
- ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப் பகுதி சீனாவின் பிரதான நிலப் பகுதியிலிருந்து "ஒரு நாடு, இரண்டு நிர்வாகங்கள்" என்பதின் கீழ் தனித்தனி நிர்வாக மற்றும் பொருளாதார அமைப்புகளைப் பராமரிக்கின்றது.
புலிகள்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘உயரமான சுற்றுச்சூழல் நிலப் பகுதிகளில் புலி வாழ்விடங்களின் நிலை’ குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இந்த ஆய்வானது உலகளாவியப் புலிகள் மன்றம் (GTF - Global Tiger Forum), இயற்கைக்கான உலகளாவிய நிதியம், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) புலிகளுக்கான ஒருங்கிணைந்த வாழ்விடப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இந்தியா, நேபாளம் & பூடான் ஆகிய அரசாங்கங்கள் ஆகியவற்றினால் மேற்கொள்ளப் பட்டன.
- அதிஉயர சுற்றுச் சூழல் அமைப்பு கூட புலிகளின் வளர்ச்சிக்கு ஒத்துப் போகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
- உலகில் புலிகளைக் கொண்டுள்ள 13 நாடுகளில் பரவியிருக்கும் புலிகளின் மீதமுள்ள 5 துணை இனங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பிரச்சாரம் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான ஒரே சர்வதேச அமைப்பு GTF ஆகும்.
- GTF 1993 இல் உருவாக்கப்பட்டது. 1997 இல் இது ஒரு சுயாதீன அமைப்பாக உருவெடுத்தது. அதன் செயலகம் புது தில்லியில் உள்ளது.
10:10:10 - டெல்லி டெங்குப் பிரச்சாரம்
- 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தில்லி அரசு “டெங்கு மற்றும் சிக்குன்குனியா” ஆகியவற்றிற்கு எதிராக 10 வார கால அளவுள்ள மிகப் பெரிய கொசு எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
- இந்தப் பிரச்சாரம் கொசுக்களின் பரவலைத் தடுப்பதில் குடியிருப்பாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முன்னெடுப்பானது ‘10 ஹப்தே, 10 பாஜே, 10 நிமிடம் - ஹர் ரவிவர், டெங்கு பார் வார் ’என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
- இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெங்குக் கொசுக்களை ஒழிப்பதற்காக தில்லி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு 10 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் தேங்கி இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை
- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தனது அமைச்சகம் மற்றும் அதன் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து வகையான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை இந்த மாதம் 15 முதல் தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
பக்வீட் - சிம்போசியம்
- மேகாலயாவில், “உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான உணவு முறைகளை பல்வகைப்படுத்துதல்” என்ற கருப்பொருளுடன் பக்வீட் குறித்த நான்கு நாள் சர்வதேச சிம்போசியம், ஷில்லாங்கின் வட கிழக்கு ஹில்ஸ் பல்கலைக்கழகத்தால் 2019 செப்டம்பர் 3 முதல் 6 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
- கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்திற்கான இந்திய யாத்ரீகர்களின் விசா இல்லாத பயணத்திற்கு நம்பிக்கையின் அடிப்படையில் எந்த தடையும் இன்றி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன.
- அத்தாரியில் நடைபெற்ற கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி
- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ரஷ்யா சிறப்பு முத்திரையை வெளியிட உள்ளதாகவும் மேலும் யோகாவை பிரபலப்படுத்துவதற்கான ஒரு புதுமையான பயன்பாடும் திறக்கப்படும் என்று மாஸ்கோவுக்கான இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார்
போபிடோரா வனவிலங்கு சரணாலயம்
- அசாமில் உள்ள இரண்டு கோயில் குளங்களில் வளர்க்கப்படும் அரிய பிளாக் சாஃப்ட்ஷெல் மற்றும் இந்திய சாஃப்ட்ஷெல் ஆமைகளின் சுமார் 70 குஞ்சுகள் குவாஹாட்டிக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.
- இந்தியாவில் ஆமை பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை அஸ்ஸாம் அதிக ஆமை இனங்கள் நிறைந்த மாநிலமாகும்.
தங்கம் - அமெரிக்கா
- தங்கத்தின் இருப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நெதர்லாந்தை பின்னுக்கு தள்ளி முதல் பத்து இடங்களுக்குள் கால்பதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், தனிப்பட்ட கடன் , வீட்டுவசதி அல்லது ஆட்டோ கடனாக இருந்தாலும், வங்கிகள் தங்களின் புதிய கடன் தயாரிப்புகள் அனைத்தையும் பாலிசி ரெப்போ வீதம் போன்ற வெளிப்புற அளவுகோலுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
சைபர் கிரைம்
- சைபர் கிரைம் விசாரணை மற்றும் சைபர் தடயவியல் தொடர்பான முதல் தேசிய மாநாட்டை புதுடில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா தொடங்கி வைத்தார். இரண்டு நாள் மாநாடு மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச ரீதியான மாற்றங்களுடன் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐயின் கட்டளைகளில் ஒன்றை உள்ளடக்கியது.
சென்னை-விளாடிவோஸ்டாக்
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் வர்த்தக மற்றும் முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கடல் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
- முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராகவும், தலைமை தேர்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் , வகார் யூனிஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- டேபிள் டென்னிஸில், மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.