Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 7th April 20 Notes


உலக சுகாதார தினம் (World Health Day)

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
  • மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.
  • உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம்.
  • இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
  • இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு

  • கொரோனா வைரஸைத் தடுக்க INO - 4800 என்ற தடுப்பூசியை பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை செய்ய உள்ளது.
  • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இனோவியா பார்மாசூட்டிக்கல் நிறுவனம் INO4800 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த தடுப்பூசியை இன்று பில்கேட்ஸுடைய அறக்கட்டளை பரிசோதனை செய்ய உள்ளனர்.
  • இந்த தடுப்பூசி சோதனைக்கு திடகாத்திரமான உடல்நலம் கொண்ட 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்காவில் சோதனை செய்யப்படும் இது 2வது தடுப்பூசியாகும். மசாசூசேட்சை சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே தடுப்பூசி சோதனையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி

  • உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மருந்து தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்தது.
  • அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுக்கொள் விடுத்துள்ளார். மருந்தை ஏற்றுமதி செய்யாவிடில் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்றார்.
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
  • அதில், அமெரிக்கா கேட்டதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  • மேலும், இந்தியாவை நம்பியுள்ள அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • குறிப்பிட்ட அளவில் பாரசிட்டமால் மாத்திரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு விதிப்பு - வாட்ஸ் ஆப்

  • கொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்-பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
  • அதிக முறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவர் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

காட்டுத்தீயால் 25 ஏக்கர் மரங்கள் நாசம் - தீர்த்தமலை

  • மூணாறு அருகே தீர்த்தமலை பகுதியில் பரவிய காட்டுத்தீயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த அரிய வகை மரங்கள் கருகி சேதமடைந்தன.
  • கேரள மாநிலம், மூணாறு அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை வனப்பகுதி. இப்பகுதி மறையூர் சந்தன காடுகளுக்கு உட்பட்டது.
  • இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பயங்கரமாக காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் கோரத்தாண்டவம் காரணமாக சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் புல்மேடுகள் தீயில் கருகின.
  • தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் தீயால் மரங்கள் எரிந்து நாசம் - தேனிமலை

  • திருவண்ணாமலை- தேனிமலை மலையில் நேற்று மாலை 6 மணி அளவில் லேசாக தீப்பற்றியது. பின்னர், காற்று பலமாக வீசியதால் கிடுகிடுவென மலை முழுவதும் தீ பரவியது.
  • இதனால், தேனி மலையில் இருந்த ஏராளமான மரம், செடி கொடிகள் கொழுந்துவிட்டு எரிந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மலையின் பெரும்பகுதியை தீ ஆக்கிரமித்தது.
  • இதனால் மலையிலிருந்த ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
  • ஆனாலும் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. இரவு 8 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.இதனால் பெரும்பாலான மரங்கள் தீக்கு இறையானது.
  • தேனிமலைப் பகுதிக்கு செல்லும் விஷமிகள் யாராவது தீயை பற்ற வைத்து இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்

  • 38வது தமிழகத்தின் மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாக பிரித்து தமிழகத்தில் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • மயிலாடுதுறைக்கு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படாததால் கொரோனா தடுப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதோடு சேர்த்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் புதிதாக 6 மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்புப் பணி அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி

  • நடிகர் அஜித், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
  • பிரதமர் நல நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் வேலை இழந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.220.55 கோடி நிதியுதவி

  • சா்வதேச பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா நோய்த்தொற்றை அரசுகளும் சா்வதேச அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு ஒழிக்க முடியும்.
  • இந்த நோய்த்தொற்றை ஒழிக்கும் பணியில் சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு(யுஎஸ்எய்ட்), நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்(சிடிசி) ஆகியவற்றின் மூலமாக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
  • இதற்காக, சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும்.
  • கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா சுமாா் 300 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.22,815 கோடி) வரை நிதியுதவி அளித்துள்ளது.

மாா்ச்சில் ரூ.1.18 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்ற அன்னிய முதலீட்டாளா்கள்

  • கரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய நிதிச் சந்தைகளில் இருந்து மாா்ச் மாதத்தில் மட்டும் சுமாா் 1.18 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை அன்னிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) திரும்பப் பெற்றுள்ளனா்.
  • சமீபத்திய தரவுகளின்படி, எஃப்.பி.ஐ.க்கள் கடந்த மாதம் பங்குச் சந்தையில் இருந்து ரூ .61,973 கோடி, கடன் சந்தையில் இருந்து ரூ .56,211 கோடி என மொத்தம் ரூ .1,18,184 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.
  • 2019, செப்டம்பா் 9 முதல் எஃப்.பி.ஐ.க்கள் தொடா்ச்சியாக ஆறு மாத முதலீட்டிற்குப் பிறகு, தற்போதுதான் அதிகளவு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், இந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வா்த்தக நாள்களில் எஃப்பிஐக்கள் இதுவரை இல்லாத அளவாக மொத்தம் ரூ.6,735 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். இதில் பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.3,802 கோடி, கடன் சந்தையிலிருந்து ரூ.2,933 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.
Share with Friends