தேசிய கைத்தறி தினம்
- நாட்டில் கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதற்காகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தேசிய கைத்தறி தினம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறியின் பங்களிப்பை குறிப்பிடவும், நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முயல்கிறது.
பெண் வெளியுறவுத் துறை மந்திரி
- முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது 67வது வயதில் காலமானார்.
- 2014-2019 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய ஸ்வராஜ், 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து விலகிய அவர் புதிய அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் முழுநேர பெண் வெளியுறவு துறை அமைச்சர் ஆவார்.
‘ஓரு மனிதன் ஓரு இயக்கம் கலைஞர் மு. கருணாநிதி ‘
- ‘ஓரு மனிதன் ஓரு இயக்கம் கலைஞர் மு. கருணாநிதி ‘ என்ற புத்தகத்தை, தி இந்து குழுவின் வெளியீடான ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டது.
- இப்புத்தகத்தில் ஒரு நபர் எவ்வாறு ஒரு இயக்கமாக மாற முடியும் மேலும் ஜனநாயகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் கருவியாகவும் செயல்பட முடியும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன .
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்
- தமிழ்நாடு மாநில அரசு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக டி. கார்த்திகேயனை நியமித்துள்ளது. இவர் முன்னதாக நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்தார்.
வங்காளதேசம் - ரஷ்யா
- பங்களாதேஷ் தனது 2,400 மெகாவாட் ரூபூர் அணுமின் நிலையத்திற்கு (ஆர்.என்.பி.பி) யுரேனியம் வாங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா வாழ்நாள் முழுவதும் ஆலைக்குத் தேவையான அணு எரிபொருளை வழங்கும்.
ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனம்
- ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது மேலும் அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு நிலையான நிதி ஆதரவை உறுதி செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது.
- யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ 1950 முதல் ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் சுகாதாரம், கல்வி, நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்கா - விசா
- கடந்த எட்டு ஆண்டுகளில் வட கொரியாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினருக்கான விசா இல்லாத நுழைவு உரிமையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை வட கொரியா நாட்டின் புதிய சுற்றுலாத் துறைக்கு புதிய அடியைக் கொடுக்கக்கூடும்.
சந்திரயான் -2
- இந்தியாவின் சந்திர ஆய்வான சந்திரயான் -2 அதன் பூமியை சுற்றிவரும் சுற்றுப்பாதையை உயர்த்தும் அதன் ஐந்தாவது மற்றும்இறுதி பகுதியை வெற்றிகரமாக முடித்தது .
- இந்த நிகழ்ச்சியானது விண்கலத்தை அபோஜியின் சுற்றுப்பாதையை அடைய வழிவகுத்தது, அபோஜி என்பது பூமியிலிருந்து மிக தொலைவில் உள்ள தூரத்தை குறிக்கும் .
- நாட்டின் சந்திரனுக்கான இரண்டாவது சந்திர பயணம், சந்திரயான் -2 ஆகஸ்ட் 20 ஆம் தேதி சந்திரனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இ-ஆளுமை 2019 - தேசிய மாநாடு
- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் திணைக்களம் (டிஏஆர்பிஜி), இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (மீடிஒய்), மற்றும் மேகாலய மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து இ-ஆளுமை தொடர்பான 22 வது தேசிய மாநாட்டை ஆகஸ்ட் 8-9, 2019 அன்று ஷில்லாங்கில நடத்தவுள்ளது. மேகாலயா. தீம்: “Digital India: Success to Excellence”
உயர்ந்த சிகரம்
- அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக், டார்ஜிலிங்கின் இமயமலை மலையேறுதல் நிறுவனத்தின் (ஹெச்மி), ரஷ்யாவில் உள்ள மவுண்ட். எல்ப்ரஸ்க்கான பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
- ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸை ஆகஸ்ட் 15, 2019 மற்றும் 73 வது சுதந்திர தினமான அன்று சென்றடைந்து இந்தியாவின் தேசியக் கொடியை மலையின் மேல் ஏற்றி வைக்க பயணக் குழு திட்டமிட்டுள்ளது.
பேட்மிண்டன்
- பேட்மிண்டனில், இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடி சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஏழு இடங்கள் முன்னேரி சமீபத்திய உலக பேட்மிட்டன் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.
- இரட்டையர் தரவரிசையில் அவர்கள் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.
ஐ.சி.சி
- சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2 வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3 வது இடத்திலும் உள்ளது .
- இந்திய கேப்டன் விராட் கோலி சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
என்.பி.ஏ - NBA
- NBA இந்திய விளையாட்டு 2019 இல் சாக்ரமென்டோ கிங்ஸ் மற்றும் இந்தியானா பேஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் அக்டோபர் 4 மற்றும் 5 ல் விளையாடவுள்ளன.