எஃகு உற்பத்தி - இந்தியா
- உலக எஃகு சங்கத்தின் தரவுகளின்படி, ஆண்டு எஃகு அடிப்படையில் இந்தியா ஜப்பானை மிஞ்சியுள்ளது.எஃகு உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக திகழ்கிறது.
- இந்தியா 2019 இல் 111.2 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்து இரண்டாம் இடத்திலும், ஜப்பான் (99.3), அமெரிக்கா (87.9), ரஷ்யா (71.6) முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
கிறிஸ்டினா கோச்
- நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் விண்வெளியில் அதிக நேரம் இருந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.
- நாசாவின் விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் நேற்று விண்வெளியில் இருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினார். கோச் 11 மாத பயணத்திற்குப் பிறகு திரும்பினார். கோச் சர்வதேச விண்வெளி நிலையம் ஐ.எஸ்.எஸ்ஸில் 328 நாட்கள் செலவிட்டார்.
35 வது தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்
- சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பை மேற்கு வங்கத்தின் ராக்கி ஹால்டர் வென்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற 35 வது தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 64 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.
- ராக்கி ஹால்டர் ஒலிம்பிக் தகுதி பட்டியலில் 19 வது இடத்தைப் பிடித்தார்.
- கத்தார் சர்வதேச கோப்பையில் 214 கிலோவுக்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
‘காவலன்’ செயலி
- பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘காவலன்’ செயலி பெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஆளுநர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும்.
- செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.
நலத்திட்டங்கள்
- திருமண உதவித் திட்டங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பில் பாலின விகிதம் 917 என்ற அளவிலிருந்து 943 ஆக அதிகரித்துள்ளது.
நேத்ரா திட்டத்தின்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நேத்ரா திட்டத்தின் கீழ் ஒரு ஒளியியல் தொலைநோக்கியை நிறுவுவதற்காக இந்திய வானியற்பியல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- நேத்ரா திட்டமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் இஸ்ரோவால் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ அமைப்பானது கண்காணிப்பு வசதிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அவை செயற்கைக் கோள்களுக்கு அவற்றின் சுற்றுப்பாதையில் உள்ள மாசுக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய உதவும்.