Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 7th March 20 Content

‘TIME 100 ஆண்டின் பெண்கள்’

  • TIME இதழின் ‘TIME 100 ஆண்டின் பெண்கள்’ பட்டியலில் இந்திரா காந்தி மற்றும் அமிர்த கவுர் ஆகிய இரு சக்திவாய்ந்த இந்தியப் பெண்களின் பெயர்கள் உள்ளன.
  • இந்திரா காந்தி 1976 ஆம் ஆண்டிற்கான பெண்ணாகவும், வாதிகாரியாக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜன் ஆஷாதி திவாஸ்

  • மார்ச், 7, 2020 அன்று ஜன் ஆஷாதி திவாஸ் (Jan Aushadi Diwas) கொண்டாடப்படுகிறது.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனாவின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த யோஜனாவின் கீழ் இந்தியா முழுவதிலும் 700 மாவட்டங்களில் உலகின் மிகப்பெரிய சில்லறை மருந்து சங்கிலியான கேந்திராக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

செயற்கைகோள் கழிவுகள்

  • விண்வெளியில் இடம் பெற்றிருக்கும் செயற்கை கோள்கள், செயலிழந்து சுற்றிவரும் செயற்கைகோள் கழிவுகள் இருக்குமிடத்தை துல்லியமாக அறியும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஈடுபட்டுள்ளது.
  • இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ISRO -வும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டுள்ளது.
  • இது போன்ற விண்வெளி கழிவுகளை நீக்கும் செயல்பாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஈடுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரீடம் ஹவுஸ்

  • பிரீடம் ஹவுஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் படி, இந்தியா உலகின் குறைந்த மக்களாட்சித் தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • உலகச் சுதந்திரம் – 2020 என்ற அறிக்கையில் திமோர் லெஸ்டே மற்றும் செனகல் ஆகியவற்றுடன் இந்தியா 83வது இடத்தில் உள்ளது.

Paytm, Gpay

  • சமீபத்திய ஆய்வின்படி, டிஜிட்டல் முறையின் (Paytm, Gpay முதலியன) மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளில் பெங்களுர் முதலிடத்திலும் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • மாநில வாரியான தரவரிசையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றம் குறித்த இந்த ஆய்வானது வேர்ல்ட் லைன் நிதிப் பரிமாற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

பூமாவின் பிராண்ட் தூதர் - கரீனா கபூர்

  • பாலிவுட் நடிகர் கரீனா கபூர் கானை ஜேர்மன் விளையாட்டு பிராண்ட் பூமா தனது புதிய பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்தது.
  • யோகா, பாரே மற்றும் பைலேட்ஸ் உடற்பயிற்சிகளுக்கான ஆடைகளை உள்ளடக்கிய விளையாட்டு உடைகளின் தயாரிப்பதில் பூமா பெயர் பெற்றது.
Share with Friends