சர்வதேச மகளிர் தினம் (IWD)
- சர்வதேச மகளிர் தினம் (IWD) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்தின் மையபுள்ளியாகும்.
- 1910 ஆம் ஆண்டு சர்வதேச சோசலிச பெண் மாநாட்டில் ஆண்டு தோறும் “ஒரு சிறப்பு மகளிர் தினம்” ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர்.
இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம்
- ஒருங்கிணைந்த உள்நாட்டு எரிசக்தி அமைப்புகள் குறித்த இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் முதன்மைத் திட்டமானது 2020 இந்தியத் திறன்மிகு பயன்பாட்டுவாரத்தில் அறிவிக்கப்பட்டது.
- இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இந்த கூட்டுப் பங்களிப்பானது தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலைக்கு உதவ இருக்கின்றது.
- இந்தியா–சுவீடன் ஒத்துழைப்பு : இந்தியத் திறன்மிகு பயன்பாட்டு வாரத்தில் இந்தியா–சுவீடன் கூட்டுதொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை ஸ்வீடன் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
ஒலிம்பிக்கில் 5 இந்திய குத்துச்சண்டை வீரர்கள்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விகாஸ் கிரிஷன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சதீஷ் குமார் (+ 91 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ) ஐந்து இந்திய குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஐந்தாவது டி 20 உலகக் கோப்பை
- நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியை 85 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
- ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை உலகக் கோப்பை போட்டியின் ஏழாவது பதிப்பாகும்.
- இது ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21 முதல் 2020 மார்ச் 8 வரை நடைபெற்றது.
- இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய 10 அணிகள் இடம்பெற்றன
SAREX-2020 பயிற்சி
- தேசிய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியின் (SAREX-2020) இறுதிப் பயிற்சி இந்திய கடலோர காவல்படையினரால் தென் கோவா மாவட்ட வாஸ்கோவில் நடத்தப்பட்டது.
- இதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் அஜய் குமார் திறந்து வைத்தார்.
- இதன் கருப்பொருள் : கடல் மற்றும் வானூர்தி தேடல் மற்றும் மீட்பின் ஒத்திசைவு
- இதை 19 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் கண்டு களித்தனர்
நரி சக்தி புராஸ்கர் விருது
- குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விருது பெற்றவர்கள்:
- 103 வயது தடகள வீரர் மான் கவுர்,
- இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகள் மோகனா சிங்,
- பவானா காந்த் மற்றும் அவனி சதுர்வேதி,
- விவசாயிகள் படலா பூதேவி மற்றும் பினா தேவி,
- கைவினைஞர் அரிஃபா ஜான், சுற்றுச்சூழல் ஆர்வலர் சாமி முர்மு,
- தொழில்முனைவோர் நில்சா வாங்மோ,
- தானியங்கி ஆராய்ச்சி நிபுணர் ரஷ்மி உர்த்வர்தே,
- லேடி மேசன் கலாவதி தேவி,
- மலையேறுபவர்கள் தாஷி மற்றும் நுங்ஷி மாலிக்
- பாடகர் கவுசிகி சக்ரோபோர்டி
டேவிஸ் கோப்பை டென்னிஸ்
- குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டம் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரோஹண் போபண்ணா இணை 6-3, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் மேட் பெவிக்-பிராங்கோசுகோர் இணையை வீழ்த்தி அபார வெற்றி வெற்றது.
- முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களை கைப்பற்றி 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் உள்ளது குரோஷியா.
- இந்நிலையில் மார்ச் 07 நடைபெற்ற இரட்டையர்பிரிவு ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பயஸ்-போபண்ணா இணை, போட்டியில் இந்தியாவை நீடிக்கச் செய்துள்ளது.