Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 9th December 19 Content

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

  • 2003-ம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • 2018-ம் ஆண்டு இந்தியா ஊழல் ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் 78-ஆவது இடத்தை பெற்றது.
  • டென்மார்க் முதலிடத்திலும், சோமாலியா 180-ஆவது இடத்திலும் உள்ளது.

இணையவழி நீதிமன்றங்கள்

  • சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இணையவழி நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • சீனாவில் மிகவும் பிரபலமான ‘வீ-சாட்’ சமூக வலைதளம் மூலம் இணையவழி நீதிமன்றங்களை அதிகாரிகள் அமைத்துள்ளனா்.
  • சுமாா் 12 மாகாணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அத்தகைய நீதிமன்றங்களில் பொதுமக்கள் ‘வீ-சாட்’ மூலம் வழக்குத் தொடர முடியும். அந்த வழக்குகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நீதிபதி விசாரிப்பாா்.
  • அந்த நீதிபதிக்கான உருவமும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜர் பெடரர் - வெள்ளி நாணயம்

  • 2020 ஆம் ஆண்டு மே மாதம் 50 பிராங்க் மதிப்பு கொண்ட பெடரின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
  • ரோஜர் பெடர் மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
  • உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.

பைகா கிளர்ச்சி நினைவிடம்

  • புவனேசுவரத்தில் பைகா கிளர்ச்சி நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
  • கஜபதி பேரரசின் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டு பிரிட்டிஷார் ஒடிஸாவில் நில அபகரிப்பு செய்த போது பைகா சமூகத்தினர் கிளர்ச்சி செய்தனர்.
  • பக்ஷி ஜகபந்து என்பவர் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பைகா கிளர்ச்சியின் 200-ஆவது ஆண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மகளிர் அஞ்சல் அலுவலகம்

  • இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலகம் தில்லி சாஸ்திரி பவன் அஞ்சல் நிலையத்தில் 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • சென்னை நகர மண்டலத்தின் முதல் அனைத்து மகளிர் அஞ்சல் நிலையம் சென்னை எத்திராஜ் சாலையில் 2013-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • சென்னை நகர மண்டலத்தின் கீழ் இரண்டாவது அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த அலுவலகம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய புகைப்பட விருதுகள்

  • மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் புகைப்படப் பிரிவு, 8-வது தேசிய புகைப்பட விருதுகள் வழங்க திட்டமியப்பட்டுள்ச்ளன.
  • நம் நாட்டின் கலை, கலாச்சாரம், வளர்ச்சி, பாரம்பரியம், வரலாறு, வாழ்க்கை முறை, மரபுகள் போன்றபல்வேறு துறைகள் பற்றி புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய புகைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான விருது, தொழில்முறை அல்லாத புகைப்படக் கலைஞர்களுக்கான விருது என்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

ஜிலின்-1

  • சீனாவின் சான்சி மாகாணத்தில் தையுவான் நகரில் உள்ள செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை ‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. ‘கே.இசட்-1ஏ’ (KZ-1A) என்ற ராக்கெட்டில் இது விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இது ஏற்கனவே அனுப்பப்பட்ட 14 ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இணைந்து ஒரு நெட்வொர்க்கை அமைத்து செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. ஊழலுக்கு எதிரான மாநாடு

  • ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2003 அக்டோபர் 31 அன்று ஐ.நா. ஊழலுக்கு எதிரான மாநாடு நிறைவேற்றப்பட்டதிலிருந்து ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • ஊழல்:

  • ஊழல் என்பது அனைத்து சமூகங்களிலும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கடுமையான சமூக குற்றமாகும்.
  • எந்த நாடும், பிராந்தியமும், சமூகமும் ஊழலிலிருந்து விடுபடவில்லை.
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1 டிரில்லியன் டாலர் லஞ்சமாக வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ஊழல் மூலம் ஆண்டுக்கு 2.6 டிரில்லியன் டாலர் திருடப்படுகிறது - இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% க்கும் அதிகமாகும்.
  • வளரும் நாடுகளில், ஊழலுக்கு இழந்த நிதி உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளின் 10 மடங்கு என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பின்னணி:

  • அக்டோபர் 31, 2003 இன் 58/4 தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஐ.நா பொதுச் சபையால் (யு.என்.ஜி.ஏ) நிறுவப்பட்டது.
  • ஊழல் குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் (யு.என்.சி.ஏ.சி) பங்கை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • அது. யு.என்.சி.ஏ.சி என்பது சட்டரீதியாக பிணைக்கப்பட்ட, சர்வதேச ஊழல் எதிர்ப்பு கருவியாகும், இது ஊழலுக்கு உலகளாவிய பதிலை அளிக்க வாய்ப்பளிக்கிறது.
Share with Friends