Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 9th March 20 Content

மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா

  • திருப்பூரில் ரூ.336.96 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா மேடைக்கான கால்கோள் விழாவை கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மார்ச் 8 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
  • இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
  • இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் மார்ச் 15 அன்று நடைபெறுகிறது.

கீரோன் பொல்லார்ட் - 500 டி 20 போட்டிகள்

  • சா்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளாா் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொல்லாா்டு.
  • டி-20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா்களின் பட்டியலில் மே.இ.தீவுகள் அணி வீரா்களே 2-ஆவது மற்றும் மூன்றாவது இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனா்.
  • 4-ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரா் ஷோயப் மாலிக் (383) ஆட்டங்களுடன் உள்ளாா்.
  • இந்திய வீரா்கள் ரோஹித் சா்மா 328 டி-20 ஆட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 317 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கின்றனா்.
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 317 டி-20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு

  • 2020 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கொழும்பில் பிம்ஸ்டெக்கின் 5 வது பதிப்பு நடைபெறவுள்ளது.
  • உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 17-வது அமைச்சரவைக் கூட்டமும், 21-வது மூத்த அதிகாரிகள் கூட்டமும் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறும். 2018 முதல் 2020 வரை இலங்கை பிம்ஸ்டெக்கின் தலைவராக உள்ளது, மேலும் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தாய்லாந்திடம் தலைவர் பதவியை ஒப்படைக்கும்.
  • 2020 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கொழும்பில் பிம்ஸ்டெக்கின் 5 வது பதிப்பு நடைபெறவுள்ளது.
  • உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 17-வது அமைச்சரவைக் கூட்டமும், 21-வது மூத்த அதிகாரிகள் கூட்டமும் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறும். 2018 முதல் 2020 வரை இலங்கை பிம்ஸ்டெக்கின் தலைவராக உள்ளது, மேலும் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தாய்லாந்திடம் தலைவர் பதவியை ஒப்படைக்கும்.

உக்ரேனின் புதிய பிரதமர்

  • நாட்டின் புதிய பிரதமராக டெனிஸ் ஷ்மிகலை உக்ரைன் நாடாளுமன்றம் சமீபத்தில் நியமித்தது.
  • ஆகஸ்ட் 2019 இல் பொறுப்பேற்ற முந்தைய பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாரூ பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

75 லட்சம் சுய உதவிக்குழு - 2022

  • 2022 க்குள் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படவுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். தற்போது, ​​6 கோடி பெண்களை திரட்டி 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் நாட்டில் உள்ளன.

  • அகில இந்திய அளவில் மாற்று திறன் ஆண்களுக்கான வாள்வீச்சு போட்டி, பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியில் தமிழகம் அணி முதலிடத்தை பிடித்தது.
  • தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நலவாழ்வு சங்கம் சார்பில், அகில இந்திய விளையாட்டு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (06.03.2020) தொடங்கியது.
  • இதில், ஆண்களுக்கான வாள்வீச்சு போட்டி, பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது.
  • இதுபோல, அமர்ந்து விளையாடும் வாலிபால் போட்டி, அமர்ந்து விளையாடும் கபடிபோட்டி, நின்று விளையாடும் கபடி போட்டியில் தமிழக அணி முதலிடத்தை பிடித்தது
  • இந்த போட்டி நிறைவு விழா03.2020ல் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஏ.கனகராஜ் வழங்கினார்.
Share with Friends