வெ. இராமலிங்கம் பிள்ளை:
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
- "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
- முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்
- இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு :
- இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.
- திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர் தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.
- ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார்.
- அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர் 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் பதவியும், பத்ம பூஷண் பட்டமும் பெற்றவர்.
- சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- 1942இல் இவர் எழுதிய புதினம் மலைக்கள்ளன் புத்தக உருவில் வெளி வந்தது. இதுவே திரைப்படமாக 1954இல் பட்சி ராஜா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்தது. வதலில் சாதனை புரிந்தது
- இப்படம் எம்.ஜி.ஆருக்கு ஏராளமான புகழைச் சேர்த்து திரையுலகில் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. தமிழ் தவிர இப்படம் இந்தி (ஆசாத்) மலையாளம் தஸ்கரவீரன்) தெலுங்கு (அக்கிராமுடு, கன்னடம் (பெட்ட கள்ளா), சிங்களம் சூர சேனா) போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எல்லா மொழிகளிலும் அமோக வெற்றியைப் பெற்றது.
- கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும். பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது
- காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீதும் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் கவிஞர். காங்கிரஸ் கட்சியின் சில பொறுப்புக்களில் கூட சேலத்திலிருந்து செயல்பட்டிருக்கிறார். ஆனால் வாழ்க்கை அப்போது வளமானதாக இருக்கவில்லை.
- சின்ன அண்ணாமலை என்பவர் தமிழ்ப்பண்ணை என்றொரு நூல் வெளியீட்டு நிறுவனம் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். இந்த வெளியீட்டு நிறுவனக்கின் வாயிலாக கவிஞரின் சில பாடல்களும் புதினங்களும் புக்கக உருவில் வெளி வந்தன.
- பாரதியார் வா.வே.சு ஐயர் போன்ற சான்றோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவரது பாடல் ஒன்றைக் கேட்ட பாரதியார் பலே பாண்டியா என்று புகழ்ந்திருப்பது சரிந்திரத்தில் ஏற்கனவே பதிவான ஒன்று.
- குமாரசாமி ராஜா மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது அரசவைக் கவிஞராக இவரை அரசு 1949இல் நியமித்தது.
- 1956 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டு மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார் சாகித்திய அகாடமியின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
- மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன
கவிஞரின் நாட்டுப்பற்று :
- முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
- கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவிர்
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
மொழிப்பற்று :
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ
புதினம்
- மலைக்கள்ளன், 1942
- கற்பகவல்லி 1962
- தாமரைக்கண்ணி 1966
- மரகதவல்லி, 1962
- மாமன் மகள்
- காதல் திருமணம், 1962
கவிதை
- தேசபக்திப் பாடல்கள், 1938
- கவிதாஞ்சலி 1953
- தமிழன் இதயம், 1942
- தமிழ்மணம், 1953
- சங்கொலி, 1953
- காந்தி அஞ்சலி, 1951
- மலர்ந்த பூக்கள், 1953
- அவனும் அவளும் தமிழ்த்தேன். 1953
- நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960
- பிரார்த்தனை, 1938
உரைநடைக் கட்டுரைகள் :
- கவிஞன் குரல், 1953
- தமிழ்மொழியும் தமிழரசும், 1956
- பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948
- கம்பன் கவிதை இன்பக் குவியல்
- ஆரியராவது திராவிடராவது, 1947
- திருக்குறள் - உரை
- இசைத்தமிழ், 1965