ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1757-ல் மேற்கொண்ட பிளாசிப் போரினாலும், 1764-ல் நடைபெற்ற பக்ஸார் போர் மூலமாகவும் வங்காளத்தைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கம்பெனி கைப்பற்றி ஆட்சி செய்த நிலப்பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக ஆங்கிலேய பாராளுமன்றம் தொடக்கத்தினில் கம்பெனியின் ஆட்சியின் கீழ் உள்ளபோது 5 பட்டயச் சட்டங்களை இயற்றியது. பின்னர் ஆங்கிலேயே பேரரசின் கீழ் ஆட்சி கொண்டுவரப்பட்ட பின்னர் இந்திய அரசு சட்டங்களை இயற்றி பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி நிர்வாகம் செய்தது.
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773
- கம்பெனியின் செயல்பாடுகளை ஒடுக்குமுறை செய்வதற்காக வேண்டி ஆங்கிலேய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாகும்.
- இது 1773-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- இது வில்லியம் கோட்டையின் ஆளுநரை வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக நியமனம் செய்தது.
- அவருக்கு ஆலோசனை சொல்வதற்காக வேண்டி நான்கு உறுப்பினர்களைக் கொண்ட கவர்னர் ஜெனரால் நிர்வாக குழுவினையும் நிர்ணயம் செய்தது. முதல் நான்கு உறுப்பினர்களான கி.கிளோவரிங், மாண்சன், பார்டுவல் மற்றும் பிலிப்ஸ் பிரான்சிஸ் போன்றோர்கள் சட்டத்திலேயே சட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது.
- நிர்வாக குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
- வங்காளத்தின் கவர்னர் ஜெனரலின் கட்டுப்பாட்டின் கீழ் மெட்ராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்கள் வைக்கப்பட்டன. போர் மற்றும் அமைதி போன்ற விவகாரங்களில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை செய்ய கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
- இந்தியாவிற்கான ஒரு உச்ச நீதிமன்றத்தை உருவாக்கியது. சர் எலிஜா இம்பே என்பவர் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
சட்டத்தின் குறைபாடுகள்
- இந்தியாவிற்காக ஆங்கிலேயர்களினால் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மிக மோசமானது என்பது சொல்லத்தக்க வகையினில் எண்ணற்ற குறைகளைக் கொண்டிருந்தது.
- கவர்னர் ஜெனரல் மற்றும் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே அதிகார வரம்பெல்லை முழுயைாக பிரிக்கப்படாத காரணத்தினால் இவ்விரண்டுக்கும் இடையே எப்பொழுதும் ஒரு மோதல் காணப்பட்டது.
- மாகாணங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை.
- இதன் விளைவாக குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 1781-ம் ஆண்டு நீதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலமாக உச்ச நீதிமன்றம் மற்றும் கவர்னர் ஜெனரலின் கவுன்சில் இரண்டுக்கும் இடையே வரம்பெல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டது.
- கம்பெனியின் பகுதிகள் முதன் முதலாக 1781-ம் ஆண்டு சட்டத்தினில்தான் இந்தியாவில் இங்கிலாந்தின் பகுதிகள் என்று முதன் முதலாக கூறப்பட்டது.
பிட் இந்திய சட்டம் - 1784
- இங்கிலாந்தின் பிரதமரான இளைய பிட் -டினால் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதால் பிட் இந்திய சட்டம் எனப்பட்டது.
- இந்த சட்டத்தின் பிரதான நோக்கம் லண்டனில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியின் தாயக அரசு நிர்வாகம் தொடர்பானது.
- இது இங்கிலாந்தினில் இந்தி விவகாரங்களுக்கானத் துறையினை உருவாக்கியது. இது போர்டு ஆட்ப் கன்ட்ரோல் (Board of Control) கட்டுப்பாட்டு குழுவினையும் அதற்கான தலைவர் பதவியையும் உருவாக்கியது.
- இயக்குனர் குழுவிற்கு கம்பெனி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரததைத் தொகுத்தது. (Patronage)
- இந்தியாவில் கவர்னர் ஜெனரலின் நிர்வாக குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை நான்கிலிருந்து மூன்றாக குறைத்தது. கம்பெனி படைகளின் படைத் தளபதி அதனில் ஒருவராக இருப்பார்.
- இந்தியாவினில் கம்பெனி விவகாரங்களை இயக்குனர்கள் குழு மற்றம் போர்டு ஆட்ப் கன்ட்ரோல் ஆகிய இரண்டும் ஒரு சேர கட்டுப்பாடு செய்தது. இது இரடட்டைக் கட்டுப்பாட்டு முறை என்றழைக்கப்பட்டது. இந்த முறையான 1858-ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் வரையிலும் நீடித்தது.
- தலையிடாக் கொள்கையினை பின்பற்றவும், தலையீட்டுப் போர்களை தடுக்கவும் வழிவகை செய்தது.
பட்டயச் சட்டம் - 1786
காரன்வாலிஸ் பிரபுவிற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்டது. அதன்படி கவர்ஜெனரல் மற்றும் ராணுவ படைத் தளபதி ஆகிய இரண்டு பதவிக்கும் இவர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டயச் சட்டம் - 1793
போர்டு ஆட்ப் கன்ட்ரோலின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சம்பள செலவுகள் இந்திய வருவாயிலிருந்து கொடுக்கப்பட்டது. இது பின்னாளில் 1919 -ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. கம்பெனியின் ஆட்சி மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
பட்டயச் சட்டம் - 1813
- கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
- கிழக்கிந்திய கம்பெனியின் வாணிப முறுறுரிமை ஒழிக்கப்பட்டது.
- பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள கம்பெனியின் பகுதிகளின் அரசியல் சாசன ரீதியான நிலையினை முதன் முதலாக தெளிவாக வரையறை செய்தது.
- இந்தியாவின் இலக்கியம் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக வேண்டி ஆண்டு தோறும் ரூ.1,00,000/- ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்தது.
- கம்பெனி பணியினில் சேர முன் பயிற்சி கட்டாயம் எனக் கூறியது. ராணுவ பயிற்சிக்காக அடிஸ்கோம்பே என்னும் இடத்தினில் ராணுவ கல்லூரியும், சிவில் பயிற்சிக்காக ஹெய்லிபுர்ரியிலும் ஒரு சிவில் கல்லூரியினையும் நிறுவியது.
- மதப் பிரச்சாரம் செய்ய கிருத்துவ சமய பரப்பு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பட்டயச் சட்டம் -1833
- சீனாவுடனான கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை மற்றும் ஒபியம் வாணிப முற்றுரிமை ஒழிக்கப்பட்டது. *
- இதுவரையிலும் ஒரு வாணிப அமைப்பாக இருந்த சி.சி. கம்பெனி தற்பொழுது முற்றிலும் ஒரு அரசியல் நிறுவனமாக மாறியது.
- வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் என்ற பதவியின் பெயர் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார்.
- மாகாணங்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இழந்தன. இந்தியா முழுமைக்கும் கவர்னர் ஜெனரலின் நிர்வாக குழு சட்டங்களை இயற்றும். எனவே மாகாணங்கள் சட்டம் இயற்றுதலில் சுதந்திரத்தை இழந்தன.
- இந்தியாவிற்கு சட்டங்களை தொகுப்பதற்காக வேண்டி ஒட்டுரிமை இல்லாமல் கவர்னர் ஜெனரலின் நிர்வாக குழுவினில் ஒரு சட்ட உறுப்பினர் சேர்க்கப்பட்டார். மெக்காலே பிரபு முதல் சட்ட உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
- ஒற்றையாட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- எந்தவிதமான பாரபட்சமின்றி இந்தியர்களுக்கும் கம்பெனியில் பணியிடங்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது.
- மதம், நிறம் போன்ற காரணங்களைக் காட்டி கம்பெனியின் பணியிடங்களுக்கு இந்தியர்களை பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறியது.
- அடிமை முறையினை ஒழிக்க வழிவகை செய்யப்பட்டு அதன்படி பின்னர் 1843-ம் ஆண்டு இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
Group-IV(2011 Qn)
(a) ஆகஸ்ட் சலுகை 1. 1944
(b) C. R. திட்டம் 2. 1945
(c) வேவல் திட்டம் 3. 1946
(d) இடைக்கால அரசாங்கம் 4. 1940
(a) நேரு அறிக்கை 1940
(b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 1928
(c) தனிநபர் சத்யாகிரகம் 1946
(d) அட்லி பிரபுவின் அறிவிப்பு 1931
பட்டயச் சட்டம் - 1853
- கம்பெனியின் ஆட்சி நீட்டிப்பு எந்தவிதமான கால நிர்ணயம் சொல்லப்படாமல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
- வங்காள மாகாணத்தை நிர்வாகம் செய்வதற்காக வேண்டி அதன்கென்று தனித்த ஒரு கவர்னர் ஜெனரல் நியமனம் செய்யப்பட்டார்.
- இதற்காக இந்தியாவின் கவர்னர் ஜெனரல் கூடுதல் பணியாக வங்காளத்தின் கவர்னராகவும் செயல்பட்டு வந்தார். எனவே முதன் முதலாக கவர்னர் ஜெனரல் எவ்விதமான கூடுதல் பொறுப்புகள் இல்லாமல் வெறும் கவர்னர் ஜெனரலாக மட்டும் செயல்பட்டார்.
- அவ்வகையினில் `டல்ஹெளசி பிரபு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். (வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கும், டல்ஹெளசி பிரவிற்கும்-இடையே வேறுபாட்டைக் காண்க)
- சட்ட உறுப்பினர் கவர்னல் ஜெனரல் நிர்வாக குழுவின் முழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
- கவர்னர் ஜெனரல் சட்டமியற்றும் குழுவினை உருவாக்கியது. இதுதான் பின்னாளில் படிப்படியாக இந்திய சட்டமியற்றும் அவை (அ) இம்பீரியல் சட்டமன்றம் (அ) மத்திய சட்டமன்றமாக பின்னாளில் உருப்பெற்றது.
- கம்பெனியின் பணியிடங்கள் இயக்குனர் குழுவினால் நியமனம் செய்யப்பட்டு வரும் முறை ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இனி வருங்காலங்களில் போட்டித் தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்தது.
- அதற்கான மெக்காலே பிரபுவின் தலைமையினில் ஒரு சிவில் சர்வீஸ் கமிஷனை நியமனம் செய்தது. இந்தியாவின் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக இங்கிலாந்தில் ஒரு சட்ட கமிஷனை நியமனம் செய்தது
Group-IV(2014 Qn)
விக்டோரியா பேரரசியின் பிரகடனம் - 1858
- இந்தியப்பெரும் புரட்சி 1857 -க்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 1858 -ல் ஒழிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பேரரசியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய மக்கள் மற்றும் சுதேச மன்னர்களின் நம்பிக்கையினை பெறவும், ஆங்கிலேயர் ஆட்சியின் நிலைப்பாட்டினை தெரிவிக்கவும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
- இப்பிரகடனம் 1858 -ல் கானிங் பிரபுவினால் அலகபாத் தர்பாரில் பிரகடனம் வெளியிடப்பட்டது.
- சுதேச மன்னர்களின் தத்துக் கொடுக்கும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
- இந்தியர்களுக்கு பணியிடங்கள் வழங்கவும், மதச் சுதந்திரம் வழங்கப்படுவதும் அளிக்கப்பட்டது.
இந்திய அரசுச் சட்டம் - 1858
- பேரரசியின் கீழ் ஆட்சி கொண்டுவரப்பட்டப் பின்னர் இயற்றப்பட்ட முதல் சட்டம்
- இதன்படி கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட்டு பேரரசியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1784 -ம் ஆண்டு முதலாக இருந்து வந்த இரட்டைக் கட்டுப்பாடுமுறை ஒழிக்கப்பட்டது.
- போர்டு ஆட்ப் கன்ட்ரோல் மற்றும் அதன் தலைவர் பதவி போன்றவை ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தியாவிற்கான வெளியுறவுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு போர்டு ஆர்.ப் கன்ட்ரோலின் கடைசி தலைவரான சர் சார்லஸ் வுட், இந்தியாவிற்காக முதல் வெளியுறவு செயலராக நியமனம் செய்யப்பட்டார்.
- இப்பதவிக்கான ஊதியம் இந்திய வருவாயிலிருந்து வழங்கப்படும் (1919 வரை)
- இயக்குனர் குழு ஒழிக்கப்பட்டு அது இந்திய கவுன்சிலாக உருமாற்றம் பெற்றது. இது இந்தியாவிற்கான வெளியுறவு செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழுவாக செயல்பட்டது.
- அரசுப் பணியிடங்கள் சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்படும்.
- கவர்னர் ஜெனரல் பதவியின் பெயர் வைசிராய் என்று மாற்றம் பெற்றது.
இந்திய கவுன்சில் சட்டம் - 1861
- இது மத்தியிலும், மாகாணங்களிலும் சட்டமன்றங்களை உருவாக்கியது.
- வைசிராயின் சட்டமன்ற குழு மத்திய சட்டமன்ற குழுவாக நியமனம் செய்தது.
- துறை சார்ந்த முறை அல்லது கேபினெட் முறை அறிமுகம்.
- அவசரநிலை சரத்துகள் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.
- பட்ஜெட் முறை அறிமுகம்.
- அட்வகேட் ஜெனரல் பதவி உருவாக்கம்.
இந்திய கவுன்சில் சட்டம் - 1892
மத்திய சட்டமன்றத்திற்கு முதன் முதலாக தேர்தல் என்ற பதத்தினைப் பயன்படுத்தாது தேர்தல் போன்ற மறைமுகமான சராம்சத்தை அறிமுகம் செய்தது. மத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் மூலமாக நிரப்பட்டார்கள். மாகாண சட்டமன்றங்களுக்கான உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றங்களினால் தேர்வு செய்யப்பட்டனர்.