தாயுமானவர்
வாழ்க்கைக்குறிப்பு:
- பெயர் = தாயுமானவர்
- பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
- பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
- மனைவி = மத்துவார்குழலி
- மகன் = கனகசபாபதி
- ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
- பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
- காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு
சிறப்பு பெயர்:
- தமிழ் சமய கவிதையின் தூண்
படைப்பு:
- தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
குறிப்பு:
- இவரின் பாடலை “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றுவர்
- இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார்
- இவரின் “பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது
- இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்
- சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்
- உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர்
- தாயுமானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன
- பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம் போன்றன இவர் தம் பாடல் தலைப்புகளில் சிலவாகும்
- இவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
- “கந்தர் அநுபூதி சொன்ன எந்தை” என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்
மேற்கோள்:
- எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
- அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே
- நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
- மஞ்சன நீர் பூசை கொள்வாய் பராபரமே
- ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளனும்
- சும்மா இருப்பதே சுகம்
- பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்
- பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்
இராமலிங்க அடிகள்
வாழ்க்கைக் குறிப்பு:
- கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
பெற்றோர்:
- இராமையா – சின்னம்மையார்
- மனைவி = மட்டுவார்குழலி
- ஆசிரியர் = சபாபதி
- காலம் = 5.10.1823 – 30.01.1874
சிறப்பு பெயர்:
- இசைப் பெரும்புலவர்
- அருட்ப்ரகாச வள்ளலார்
- சன்மார்க்க கவிஞர்
- புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
- புரட்சித் துறவி
- ஓதாது உணர்ந்த அருட்புலவர்
- ஓதாது உணர்ந்த பெருமான்
- பசிப்பிணி மருத்துவர்
படைப்புகள்:
- சிவநேச வெண்பா
- நெஞ்சறிவுறுத்தல்
- மகாதேவமாலை
- இங்கிதமாலை
- மனுமுறை கண்ட வாசகம்
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
- திருவருட்பா(6 பிரிவு, 5818 பாடல்கள்)
- வடிவுடை மாணிக்க மாலை
- தெய்வமணிமாலை
- எழுந்தரியும் பெருமான் மாலை
- உண்மை நெறி
- மனுநீதிச்சோழன் புலம்பல்
கட்டுரை:
- ஜீவகாருண்யம்
- வந்தனை செய்முறையும் பயனும்
- விண்ணப்பம்
- உபதேசம்
- உண்மைநெறி
பதிப்பித்த நூல்கள்:
- ஒழிவில் ஒடுக்கம்
- தொண்டை மண்டல சதகம்
- சின்மயா தீபிகை
குறிப்பு:
- 1865இல் சன்மார்க்க சங்கம் தொடங்கினார்
- 1867இல் சத்திய தருமசாலை தொடங்கினார்
- 1876இல் சித்தி வளாகம்
- 1872இல் சத்திய ஞானசபை
- இவரின் வழிபாடு கடவுள் = முருகன்
- இவரின் வழிபாடு குரு = திருஞானசம்பந்தர்
- இவர் பின்பற்றிய நூல் = திருவாசகம்
- இவரின் மந்திரம் = அருட்பெருஞ்சோதி
- இவரின் கோட்பாடு = ஆன்மநேய ஒருமைப்பாடு
- இவரின் கொள்கை = ஜீவகாருண்யம்
- நால்வகை பாக்களில் பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தார்
- தம் கொள்கைகெனத் தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள், வெள்ளை நிறம் உடையது
- சைவராகப் பிறந்தும் திருமாலையும் போற்றியவர், இவ் வழக்கத்தை தொடங்கி வைத்தவர்
- இவர் சித்தர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்
- தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் பாடியவர். 192 சீர் ஆசிரிய விருத்தம்
- தமிழ் இலக்கியதுள்ளே அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர், 1596 அடிகள்
- இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
- இவ பாடலைத் தொகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
- இவர் பாடல்களுக்குத் திருவருட்பா என்று பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
- இவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
- இவர் பாடல்களை முதலில் பதிப்பித்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
- இவர் பட்டை “மருட்பா” என்றவர் = ஆறுமுக நாவலர்
- இவைகளின் மறுப்புக்கு மறுப்புத்தந்து அருட்பா தான் என நிறுவியவர் = செய்குத்தம்பி பாவலர்
- 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் தன் அன்பர்களிடம் விடை பெற்றுத் தன் குடிசையில் சென்று தாளிட்டு கொண்டு இயற்கை எய்தினார். அவரின் மரணம் இன்றுவரை விடை காண முடியாத புதிராகவே உள்ளது
- இறைவனை தலைவனாகவும் தம்மை தலைவியாகவும் பாவித்துப் பாடல்கள் பல புனைந்துள்ளார். “இங்கிதமாலை” இத்தகைய நூலாகும்
- தண்ணீர் கொண்டு விளக்கு எரித்த போன்ற அற்புதங்கள் நிகழ்த்தியவர்
- உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை உண்டாக்கினார்
மேற்கோள்:
- அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
- அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
- மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
- ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
- ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்
- அம்பலப் பாட்டே அருட்பாட்டு
- அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
- உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
- உறவு கலவாமை வேண்டும்
- வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
- பசித்திரு, தனித்திரு, விழித்திரு
- வான் கலந்த மாணிக்க வாசக
- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
- கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக
- பெயர் : திரு.வி.கல்யாணசுந்தரனார். (திருவாரூர் விருத்தாசலனாரின் புதல்வர் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு, வி.க என்பதாகும்.)
- பெற்றோர் பெயர்: தந்தையார் விருத்தாசலனார் - தாயார் சின்னம்மையார்.
- பிறந்த இடம்: துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்). தற்போது தண்டலம் என்று அழைக்கப்படும் இந்த ஊர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கு திசையில் உள்ளது.
- காலம்: 26.08.1883 - 17.09.1983
- சிறப்பு: இவர் தொழிலாளர் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தொண்டாற்றியவர். மேடைப் பேச்சு தமிழில் தனி இலக்கணம் வகுத்தவர்.
திரு.வி.கல்யாணசுந்தரனார்
அடைமொழி:
- இவரின் தமிழ்நடையை போற்றித் “தமிழ்த்தென்றல்” என சிறப்பிக்கப்படுகிறார்.
படைப்புகள்:
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு போன்றவை.
- “பண்ணினை இயற்கை வைத்த.” எனத் துவங்கும் வாழ்த்துப் பாடல் இவரின் "பொதுமை வேட்டல்” எனும் நூலில் போற்றி எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது,
- பொதுமை வேட்டல் : நாடு, மதம், மொழி, இனம், நிறம் அனைத்தையும் கடந்து உலகை ஒரு குடும்பமாக கருதுவதே பொதுமை வேட்டல் எனப்படும்.
- "தெய்வ நிச்சயம்” முதலாகப் “போற்றி” ஈறாக உள்ள 44 தலைப்புகளில் 430 பாக்களால் ஆனது இந்நூல்.
- திரு.வி.க தமிழாசிரியராக பணிபுரிந்த பள்ளி: சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி.