Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, rainfall, weather and climate) பருவக்காற்று (Monsoon)

பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, rainfall, weather and climate)

பருவக்காற்று (Monsoon)

* "மான்சூன்” என்ற சொல் அரேபிய சொல்லான "மௌசிம்” என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் பருவகாலம் என்பதாகும்.
* இந்தியாவின் காலநிலையிலும், நிலத்தோற்றத்திலும் மிகப் பெரும் வேறு பாடுகள் நிறைந்து காணப் படுகிறது.
* உலகிலேயே அதிக மழைபெறும் பகுதியான மேகலாயா மாநில மௌசின்ரோம் (1221 செ.மீ) பகுதியும், 13 செ.மீ குறைவாக மழைபெறும் தார்பாலை வனமும் இந்தியாவில் தான் உள்ளன.
* கோடைக்காலத்திற்கும், குளிர்காலத்திற் கும் இடையே தங்களது திசையை முழுவதும் மாற்றிக் கொண்டு வீசும் காற்றுகளுக்கு "பருவக்காற்று” என்று பெயர். இப்பருவக்காற்றினால் இந்தியாவில் “வெப்ப மண்டலப் பருவக் காற்று” காலநிலை நிலவுகிறது.


வெப்பமண்டலப் பருவக்காற்று காலநிலையின் முக்கிய அம்சங்கள் :

* பருவக்காற்றினை அது வீசும் திசையை அடிப்படையாகக் கொண்டு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவகாற்று என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
* இவை நிலம் மற்றும் கடல் வெப்பம் அடைவதால் ஏற்படும் மாறுபாட்டால் உருவாகின்றன.
* பருவக்காலங்களை மாற்றி - மாற்றி அமைப்பதே பருவக்காற்றுகளின் முக்கிய அம்சமாகும். இதுவே இந்தியாவின் காலநிலையைத் தீர்மானிக்கிறது.


பருவகாலம் :

* இந்தியாவின்காலநிலையை நான்கு வெவ்வேறு பருவ காலங்களாகப் பிரிக்கின்றனர்.
1. கோடைக்காலம் (மார்ச் முதல் மே வரை)
2. தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் முதல் செப்டம்பர் வரை)
3. வடகிழக்கு பருவக்காற்று (அக்டோபர் முதல் நவம்பர் வரை)
4. குளிர்காலம் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை)


1. கோடைக்காலம் :

* இப்பருவ காலம், மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும்.
* சூரியனின் செங்குத்துக் கதிர்கள் கடகரேகையின் மீது விழுகிறது. இதனால் இந்தியாவின் வடபகுதியில் வெப்பத்தின் அளவு அதிகமாகிறது. அதிக வெப்பம் காரணமாக வடஇந்தியாவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது.
* இதன் விளைவாக தார் பாலைவனப் பகுதித் தொடங்கி, சோட்டா நாகபுரி பீடபூமி வரை ஒரு குறை அழுத்தப் பள்ளம் பரவி அமைகிறது. இக்குறை அழுத்தத்தைச் சார்ந்து ஆங்காங்கே தீவிர தல காற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படும் இடி புயலால் பெரும் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
நார்வெஸ்டர் (Norwesters) :
* வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று "நார்வெஸ்டர்” (Norwesters) என்றழைக்கப்படுகிறது.
கல்பைசாகி (Kalbaisagi) :
* இத்தலக்காற்று பஞ்சாபில் கல்பைசாகி (பைசாகி மாதம்) என்றழைக்கப் படுகிறது.



2. தென்மேற்குப் பருவகாற்று :

* இப்பருவக்காற்று மழைக்காலத்துடன் தொடங்குகிறது. இந்தியாவின் வட மேற்குப் பகுதியின் பெரும்பரப்பில் தாழ் வழுத்தம் அமைகிறது. அதே நேரத்தில் பெருங்கடல்கள் குளிர்வடைவதால், அங்கு உயர் அழுத்தம் ஏற்படுகிறது. இப்பருவகாற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை தொடர்கிறது.
* காற்று கடலில் இருந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது. இக்காற்றையே தென்மேற்குப் பருவக் காற்று என்று அழைக்கிறோம். இக்காற்று பூமத்திய ரேகையை கடக்கும் போது அதன் திசை மாற்றப்பட்டு தென்மேற்கு பருவக்காற்றாக வீசுகிறது.



* பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று இந்திய தீபகற்ப அமைப்பால் இருகிளைகளாகப் பிரிகிறது.
1. அரபிக்கடல்
2. வங்காள விரிகுடா கிளை

1. அரபிக்கடல் கிளை :
* பருவக்காற்றின் அரபிக்கடல்கிளை ஓர் வலிமை மிக்க காற்று. இது அதிக மழைப்பொழிவைத் தருகிறது.
* அரபிக்கடலில் இருந்துவீசும் இக்காற்றின் ஒரு பகுதி முதலில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதுகிறது. ஈரப்பதமிக்க இக்காற்று மலைச்சரிவுகளின் வழியே உயர எழும்பி குளிர்வடைந்து மேற்குக் கடற்கரைக்கு பலத்த மழையைத் தருகிறது.

2. வங்காளவிரிகுடா கிளை :
* வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் இக்காற்றானது ஈரப்பதத்தைத் தாங்கி வரும் காற்றாகும். இது காசி, கரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீது மோதுகிறது. ஈரப்பதம் தாங்கிவரும் இக்காற்றானது புனல்வடிவ குன்றுகளின் மீது மோதி திடீரென மேல் எழும்பவதால் இந்தியாவிலேயே அதிக மழைபெறும் இடமான மௌசின்ராமுக்கு கனமழையைத் தருகிறது.
* இக்காற்றின் ஒருபகுதி இமயமலைகளால் டு தடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நகர நகர தம்மிடமுள்ள ஈரப்பதத்தை இழப்பதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு மிகக் குறைந்தளவு மழையைத் தருகின்றது.

3. வடகிழக்கு பருவக்காற்று :
* இப்பருவ காற்று அக்டோபர் முதல் நவம்பர் வரை உண்டாகிறது.
* சூரியனின் மகரரேகையை நோக்கி நகர ஆரம்பிப்பதால், தென்மேற்கு பருவக் காற்று வட இந்தியாவில் இருந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பின்னோக்கி வர ஆரம்பிக்கிறது.
* இந்திய நிலப்பகுதி வெப்பத்தை இழக்கிறது. நிலத்தின் வெப்பநிலை குறைந்து சென்றாலும், கடலின் வெப்பம் இன்னும் மிதமாகவே உள்ளது. இதனால் கடல்பகுதியில் குறைந்த அழுத்தமும், நிலப்பகுதியில் உயர் அழுத்தமும் ஏற்படுகிறது. அதாவது, நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. இது சோழமண்டல கடற்கரைக்கு, கனத்த மழையைத் தருகிறது.
*பொதுவாக புயல்கள் ஆற்று முகத்துவாரங்களை விரும்புவதால் கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா , காவிரி ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்கள் புயலின் பாதைகளாக அமைகின்றன.

4. குளிர்காலம் :
* குளிர்காலக் காற்று டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ஏற்படுகிறது. இப்பருவத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் மகர ரேகையின் மீது விழுகிறது.
* இந்தியாவின் வட மேற்குப் பகுதியில், குறைந்த வெப்பம் காணப்படுவதால் அங்கு உயர் அழுத்தம் உருவாகிறது . இதற்கு மாறாக தென் இந்தியாவில் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியப் பகுதிகளில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது .இதன் விளைவாக காற்றானது, உயர் அழுத்தப் பகுதி யிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பின்னடையும் பருவக்காற்று பின்னடையும் பருவக் காற்று (Retreating Monsoon) என்று பெயர்.
* இந்தியாவின் குளிர் காலத்தில் மத்தியத் தரைக்கடலில் ஒரு தாழ் அழுத்தம் உருவாகிக்கிழக்குநோக்கிநகர்ந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவை வந்தடைகிறது. இத்தாழ்வு அழுத்தம் "மேற்கத்திய இடையூறுகாற்று” என்றழைக்கப்படுகிறது.

மழைப்பரவல் :
* மழைப்பரவல் இரண்டு முக்கிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அவை 1. மழையை தாங்கி வரும் காற்றின் திசை 2. மலைகளின் அமைவு மழைப்பொழிவின் அடிப்படையில் நம் நாட்டை பின்வரும் நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். அவை,



Share with Friends