தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
- அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் பாரசீகமொழி இருந்தது.
- மூன்று வகையான தேசியத்தின் போக்குகள்
- இந்திய தேசியம், இந்து தேசியம் மற்றும் முஸ்லிம்
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
இந்துமத மறுமலர்ச்சி
- சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்புக் கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
- ஆரிய சமாஜம் போன்ற நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னிபெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் வலுப்பெற்றன.
- இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அன்னிபெசண்ட் அம்மையார் தனது கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
- பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும். இது கடந்த காலப் பெருமையுடன், ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேச/நாட்டுப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டைப்புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும்”
முஸ்லிம் உணர்வின் எழுச்சி
- வாஹாபி இயக்கம் இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது
- 1870களில் வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியதும், பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்தது, முஸ்லிம் தொழில்வல்லுநர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை
- பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார்
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை
- பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார்.
பசுவதையும் வகுப்புவாதக் கலவரங்களும்
- ஜூலை, 1893இல் வடமேற்கு மாகாணங்களில் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.
- கௌராக் ஷினி சபைகள் என்பது பசு பாதுகாப்பு சங்கங்கள்
- பசுவதைத் தொடர்பான கலகங்கள் 1883க்குப் பின் அடிக்கடி நடைபெற்றன.
- 1883 மற்றும் 1891க்கிடையே பஞ்சாபில் மட்டும் இத்தகைய 15 பெரும் கலகங்கள் வெடித்தன.
வகுப்புவாதத்தைத் தடுப்பதில் காங்கிரசும் அரசாங்கமும் கண்ட தோல்வி
- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியபோது, பல்வேறு மத, சமூக குழுக்களுக்கிடையே ஒற்றுமை வளர்வதைக் கண்டு கவலைகொண்ட அரசுச் செயலாளர் ஹேமில்டன், அந்த குழுக்களுக்கிடையே பிரிவினை வளர்வதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
- “பின்வரும் இரண்டு வகைகளில் எதை விரும்புவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. கருத்து ஒற்றுமையும், செயலும் அரசியல் ரீதியாக பெரிதும் ஆபத்தானவை இது முதல் வகை. கருத்து வேற்றுமையும், மோதலும் நிர்வாக ரீதியாக தொல்லைதருபவை இது இரண்டாவது வகை. இவையிரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால், இரண்டாவது வகை உரசல் எழும் இடங்களில் இருப்பவர்களுக்கு கவலையையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தக் கூடியது என்ற போதிலும் இதுவே குறைந்த அளவு ஆபத்துடையது எனலாம்” – அரசுச் செயலாளர் ஹேமில்டன், வைஸ்ராய் எல்ஜினுக்கு எழுதிய கடிதத்தில்
காங்கிரஸ் நடவடிக்கைகள்
- இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதையைக் குற்றமென அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சில காங்கிரஸ்காரர்கள் முயற்சிசெய்த போதிலும், காங்கிரஸ் தலைமை அத்தீர்மானத்தை ஏற்கவில்லை.
- காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை அல்லது இனத்தைப் பாதிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும்போது, அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தால், எதிர்க்கும் உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருந்தது.
சையது அகமது கானின் பங்கு
- அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையது அகமது கான்
- முஸ்லிம் தலைவர்களான பத்ருதீன் தியாப்ஜி, பம்பாயைச் சார்ந்த ரஹமதுல்லா சயானி, சென்னையைச் சேர்ந்த நவாப் சையது முகமது பகதூர், வங்காளத்தைச் சேர்ந்த ஏ.ரசூல் ஆகியோர் காங்கிரசை ஆதரித்தனர்.
- சர் சையது அகமது கான் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று வாதிட்டனர்.
- காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள்.
உள்ளாட்சி தேர்தல்களில் வகுப்புவாதம்
- 1880களில் உள்ளாட்சி அமைப்புகள் வகுப்புவாத அரசியல் வளர்வதற்கு உதவின.
- பஞ்சாப் இந்துசபையின் முதன்மைத் தகவல் தொடர் பாளராகவும் , பின்னர் ஆரிய சமாஜத்தின்தலை வர்களுள் ஒருவருமாக இருந்த லால் சந்த் சில நகராட்சிகள் வகுப்புவாத அடிப்படையில் அ மைக்கப்ப ட்டதை விளக்கியுள்ளார்.
- “நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவரது நாற்காலியின் வலது மற்றும் இடது புறங்களில் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். வலதுபுற வரிசையில் ஆரியவர்கத்தைச் சார்ந்த பழைய ரிஷிகளின் வம்சாவளியினரும், இடதுபுற வரிசையில் இஸ்லாமின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். இவ்வாறு அமர்ந்திருந்ததன் மூலம் அவர்கள் நகராட்சியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி முகமதியர்களாகவும், இந்துக்களாகவும் இருப்பதையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர்.
காங்கிரசின் பலவீன கொள்கை
- “இந்து-முஸ்லிம் வகுப்புவாதம், நடுத்தர வகுப்புகளுக்கிடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்புவாதத்திலிருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்.” – ஜவஹர்லால் நேரு
- 1909ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பஞ்சாப் இந்து சபை, இந்து இனவாத கருத்தியல் மற்றும் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது.
அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்
- 1906 அக்டோபர் 1இல் முஸ்லிம் பிரபுக்கள், ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஆகிய 35 பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
- சிம்லா மாநாடு அரசப்பிரதிநிதியிடமிருந்து எந்த ஒரு நல்ல தீர்மானத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லையென்றாலும், இது அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது எனலாம்.
- முஸ்லிம்களுக்கு அரசமைப்பு சார்ந்த அடையாளத்தை வழங்கியது. லக்னோ ஒப்பந்தம் (1916), முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.
- தனித் தொகுதி அல்லது வகுப்புவாரித் தொகுதி: இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
- 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது.
- மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பின்வருமாறு ஒதுக்கியிருந்தது.
- அவையாவன: மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5.
தனித்தொகுதியும் வகுப்புவாதப் பரவலும்
- பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் லேடி மிண்டோ அவர்களுக்கு அனுப்பிய குறிப்பின் வாயிலாக பிரிட்டிஷார் உள்நோக்கத்துடனேயே இத்தகைய செயலைச் செய்ததை அறியமுடிகிறது.
- “இன்று மிகப்பெரிய செயல் நடைபெற்றது என்பதை தங்களின் மேலான பார்வைக்கு நான் அனுப்புகிறேன். இத்தகைய ராஜதந்திர நடவடிக்கை இந்திய வரலாற்றில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது 62 மில்லியன் மக்கள் தூண்டிவிடப்பட்ட எதிர் முகாமில் சேர்ந்துவிடாமல் இழுத்துப்பிடிக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை”.
- நேருவின் கூற்றுப்படி, “வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகள் நவீன உலகத்திற்குப் பொருந்தாத, காலாவதியான ஒரு கருத்தை விடாப்பிடியாகக் பிடித்துக்கொண்டிருப்பது என்பதற்கு ஏற்ற சான்றாகும்; இது தேசியவாதம் என்ற கருத்தாக்கத்திற்கு முற்றிலும் எதிரானது”.
- மற்றொரு அறிஞரின் கூற்றுப்படி, “வகுப்புவாதம் என்பது, ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் நோக்கத்துடன் அணிதிரட்டும் திட்டமிட்ட முயற்சியே ஆகும்”.
அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி
- அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.
- அம்பாலாவில் நடைபெற்ற ஐந்தாவது பஞ்சாப் இந்து மாநாட்டிலும், பெரோஷ்பூரில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக 1915இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது.
- டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை தொடங்கப் பெற்றது.
- மாகாண இந்துசபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப்பெற்றன.
- 1921இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க மக்களைத் திரட்டுகையில், சுவாமி சிரத்தானந்தா பசுப்பாதுகாப்பைப் பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகாசபைக்கு புத்துயிர் அளிக்க முனைந்தார்.
- முதல் உலகப்போருக்கு முன்னர் கலீஃபா, காபா (இஸ்லாமியச் சமயத்தின் புனிதமான இடம்) ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாப்பதாக இங்கிலாந்து வாக்குறுதி வழங்கியிருந்தது.
- முஸ்லிம் சமூகத்தினர் ஆங்கிலேயருக்குத் தங்கள் கோபத்தைக் காட்டவும், துருக்கியின் கலீஃபாவை பாதுகாக்கவும், கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
- குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சி 1921இல் நடைபெற்றது.
- மலபார் கிளர்ச்சி விளைவாக காந்தியடிகளே இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார்.
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் (Communalism in United province U.P)
- 1922இல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதும், 1924இல் கலீஃபா பதவிஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
- ஆகஸ்ட் 1923இல் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
- ஐக்கியமாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை 86. 8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன.
- சென்னை பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தன.
- 1920கள் காங்கிரசிற்கு சோதனைகள் மிகுந்த காலமாகும்.
- அலகாபாத்தில் மோதிலால் நேருவும் மதன்மோகன் மாளவியாவும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.
- 1923இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர் வெற்றி பெற்றனர்.
- விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி குரோஸ்த்வெயிட் “மாளவியாவின் குடும்பத்தார் வேண்டுமென்றே இந்துக்களைத் தூண்டிவிட்டனர். இச்செயல் முஸ்லிம்களின் மீது எதிர்வினையாற்றியது” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மகாசபை
- 1924இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார்.
- இந்துமகாசபை ‘அகண்ட இந்துஸ்தான்’ என்னும் முழக்கத்தை முன் வைத்தது.
முஸ்லிம்களின் டெல்லி மாநாடும் அவர்களின் புதிய கருத்துருக்களும்
- 1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது.
- இம்மாநாட்டின் நிகழ்வுகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உன்னத வெளிப்பாடாய் அமைந்தது. மாநாடு முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தனித்தொகுதிக்கோரிக்கையை தாங்கள் கைவிடுவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர்.
- அந்நான்கு கோரிக்கைகள் வருமாறு
- பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது
- பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது
- பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்
- மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு.
வகுப்புவாதத் தீர்வும் அதன்பின்விளைவுகளும்
- வட்ட மேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு வகுப்புவாதத் தீர்வை அறிவித்தார்.
- 1925இல் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் (R.S.S.) விரிவடைந்து கொண்டிருந்தது.
- K.B. ஹெட்கே வ ர் , V.D. சவார்க்கர், M.S. கோல்வாகர் ஆகியோர் இந்து ராஷ்டிரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
- “இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” அவர்கள் அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
- “இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்” என V.D. சவார்க்கர் உறுதிபடக் கூறினார்.
- டிசம்பர் 1938இல் தான் காங்கிரஸ் செயற்குழு இந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்தது.
முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்
- 1937இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது.
- மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது வெற்றி பெற்றது.
- 1936-37 தேர்தல்களுக்குப் பின்னர் பெருவாரியான இஸ்லாமிய மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்ற உணர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்து நடத்தப்பட்ட இயக்கத்தை ஜின்னா பயன்படுத்திக் கொண்டார்.
- 1936-37 தேர்தல்கள் பிரிவினைக்கான காரணமானாலும் அதில் இந்து மகாசபை கூட்டு அமைச்சரவைகள் அமைப்பதற்காக முஸ்லிம் லீக்கிற்கு உதவியது.
மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல்
- 1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது.
- இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார்.
- காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு நாளாக 1939 டிசம்பர் 22இல் முஸ்லிம் லீக் கொண்டாடியது.
- 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
- 1930இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டு மாநாட்டில் இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார்.
- கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலியால் வலுவாக வெளிப்படுத்தப்பட்டது.
- லீக்கின் அடிப்படைக் கோரிக்கையானது ‘இரு நாடு கொள்கை’ ஆகும்.
- இதனை முதலில் சர் வாசிர் ஹசன் என்பவர்தான் 1937இல் நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
- இப்பரந்த கண்டத்தில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு சமூகங்கள் அல்ல, ஆனால் பல வழிகளில் இரு நாட்டினராக கருதுதல் வேண்டும் என்றார்.
- 1940 மார்ச் 23இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
- தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு: "
- இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
- கீழ்க்கண்ட கொள்கைகளைக் கொண்டிராத எந்தவொரு அரசியல் அமைப்புத் திட்டமும் இந்நாட்டில் செயல்பட இயலாது முஸ்லிம்களுக்கு ஏற்புடையாகவும் இருக்காது. li>அதாவது நிலவியல் அடிப்படையில் நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின் எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும்.
- தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக் கொண்டவைகளாக அவைகள் அமைதல் வேண்டும்.
- முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான தனி மாநிலமாக அமைக்கப்படவேண்டும்".
நேரடி நடவடிக்கை நாள்
- 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது.
- 1946இல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட 30 இடங்களிலும் வென்றதோடு, மற்ற மாகாணங்களில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களையும் வென்றது.
- 1946இல் அரசு செயலாளரான பெதிக் லாரன்ஸ் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையிலான பிணக்கைத் தீர்த்து அதிகாரத்தை ஒரு இந்திய நிர்வாக அமைப்பிடம் மாற்றம் செய்யும் நம்பிக்கையோடு புதுடெல்லி வந்தது.
- இத்திட்டமானது இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையைப் பரிந்துரைத்தது.
- 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்ததோடு, இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று ‘நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுபடவும் அழைப்பு விடுத்தது.