பொதுத்தமிழ் - மூலிகைகளும் அதன் பயன்பாடுகளும்
01. அருகம்புல் - அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
02. நெல்லிக்காய் - பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
03. கடுக்காய் - குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
04. வில்வம் அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
05. சிறுகுறிஞான் - சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
06. வல்லாரை - நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
07. தூதுவளை - நாள்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
08. துளசி - மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
09. ஆவரம்பூ - இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
10. கண்டங்கத்திரி - மார்பு சளி, இளைப்பு நோய்க்கு சிறந்தது.
11. திப்பிலி - உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
12. வெந்தயம் - வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
13. கறிவேப்பிலை - கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
14. வேப்பிலை - குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
15. அதிமதுரம் - வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
16. செம்பருத்திப்பூ - அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
17. கரிசலாங்கண்ணி - காமாலை, கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
18. கீழாநெல்லி - மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
19. முடக்கத்தான் கீரை - மூட்டு வலி, முழங்கால்வலி, வாதத்துக்கு நல்லது.
20. கோரைகிழங்கு - உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
21. குப்பைமேனி கீரை - சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
22. பொன்னாங்கண்ணி கீரை - உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
23. லவங்கபட்டை - கொழுப்புச் சத்தை குறைக்கும், மூட்டுவலிக்கு சிறந்தது.