மனித உடல்
- உடற் செயலியலை விளக்கியவர் - ஆண்டிரியாஸ் வெசாலியஸ்
- இவர் மனித உடல் அமைப்பு எனும் நூலை பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார்
உமிழ்நீரிலுள்ள சுரப்பிகள் மொத்தம் மூன்று. அவை
- மேல் அன்னச் சுரப்பி (பரோட்டிட்) - பெரியது
- கீழ்த்தாடைச் சுரப்பி (சப்மாக்சிலரி) 3
- நாவடிச் சுரப்பி (சப்லிங்குவல்) சிறியது • உமிழ்நீரில் லைசோசோம் உள்ளது. இது பாக்டீரியாவை அழிக்கிறது
- உமிழ்நீரில் உள்ள நொதி - டயலின்
- டயலின் ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுகிறது
- குழந்தைகளின் பால்பற்கள் எண்ணிக்கை 20 (இருபது)
- பற்சூத்திரம் $\dfrac{2123}{2123}\times2$
- நமது உடலில் மின் கடினமான பகுதி - பல்லிலுள்ள எனாமல்
- தொண்டைப் பகுதி ஏழு துவரங்களுடன் தொடர்புடையது
- உணவுக்குழலின் நீளம் 22 செமீ
- வாய்க்குழியில் உணவு அரைக்கப்பட்டு உணவு கவளங்களாக மாற்றப்படுவதற்கு - மேஸ்டிகேசன் என்று பெயர்
- வாய்க்குழியிலிருந்து இரைப்பைக்கு உணவு விழுங்கப்படுவது - டிகுளுட்டிஷன் என்று பெயர்
- உணவு உண்ணும் போது மூச்சுக்குழலை மூடும் உறுப்பு - எப்பிகிளாட்டிஸ்
- பறவைகளின் குரல்வளை 'சிரிங்ஸ்' எனப்படும்
- இரைப்பையின் சுவர் 4 அடுக்குகளால் ஆனது
- இரைப்பை முன்சிறுகுடலுடன் இணையுமிடம் - பைலோரஸ்
- இரைப்பையின் மையப்பகுதி - பன்ட்ஸ்
- இதயத்துக்கருகே உள்ள பகுதி - கார்டியாக் இரைப்பை
- இரைப்பையில் சுரப்பவை ஹைட்ரோகுளோரிக் அமிலம் (உணவிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க) மற்றும் இரைப்பை ஜீரண நீர்
- இரைப்பை ஜீரண நீரில் உள்ளவை - பெப்சின், ரெனின், லிப்பேஸ்
- இரைப்பையின் சுவர்கள் சுரப்பது மியூகஸ். இது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் இரைப்பை சுவர் அரிப்பதைக குறைக்கிறது.
- இதன் குறைவினால் அல்சர் ஏற்படும் • இரைப்பையிலுள்ள அரைக்கப்பட்ட உணவின் பெயர் - ஸைம்
- முன்சிறுகுடல் - டியோடினம்
- நடுசிறுகுடல் - ஜிஜீனம்
- பின்சிறுகுடல் - இலியம்
- கணையம் மற்றும் கல்லீரல் சுரப்பிகள் இணையுமிடம் - டியோடினம் உடலின் மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்
- கல்லீரல் சுரப்பது - பித்தநீர்
- பித்தநீர் சேகரிக்கப்படுவது - பித்தப்பையில்
- பித்தநீர் மஞ்சள் நிறமுடையது. கசப்பு சுவையுடையது
- பித்தநீரிலுள்ள பித்த உப்புகள் கொழுப்புகளை எளிய துகள்களாக்கிக நீரில் பரப்பு இடுவிசையினை குறைத்து பால்மமாக்குகின்றன ஹீமோகுளோபின் சிதைவதன் மூலம் கிடைக்கும்
- நிறமிகள் - பிலிரூபின், பிலிவெர்டின் என்னும் புரதங்கள் ஆகும்
- கிளைகோஜன் கல்லீரலிலும், கொழுப்பு அடிப்போஸ் திசுவிலும் சேமிக்கப்படுகிறது
- டியோடினத்தில் சுரக்கிறது
- 6 நொதிகள் இதிலுள்ளன
- எரிப்சின்: பெப்டோன் மற்றும் பாலிபெப்டைடுகளை அமினோ அமிலமாக்குகிறது
- மால்டேஸ்: மால்டோஸை குளுக்கோஸாக்குகிறது
- சுக்ரோஸ் (இன்வர்டேஸ்): சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக்குகிறது
- லாக்டோஸ்: லாக்டோஸை குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸாக்குகிறது
- குடல் லிப்பேஸ்: கொழுப்பை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரலாக்குகிறது .
- இலியத்தில் காணப்படுபவை - குடலுறுஞ்சிகள்
- குடலுறுஞ்சிகள் உட்கிரகித்தலின் இறுதி அலகுகள் ஆகும்.
- இது ரத்த தந்துகிகள் மற்றும் நிணநீர் குழாய்களால் ஆனது ரத்த தந்துகிகள் கொழுப்பை தவிர பிற அனைத்தையம் உறிஞ்சுகிறது
- நிணநீர் குழாய்கள் கொழுப்பை மட்டும் உறிஞ்சும்
- இங்கு செரிக்கப்படாத உணவு மலமாக்கப்படுகிறது
- எஸஸெரிசியா கோலை என்ற பாக்டீரியா மூலம் மலம் உருவாகிறது
- சிறுகுடல் பெருங்குடலில் திறக்குமிடத்தில் சீக்கம் உள்ளது.
- இதில் குடல்வால் உள்ளது குடல்வால் கிருமி அல்லது மாசுகளால் பாதிக்கப்பட்ட குடல்வால் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்
- பெருங்குடல் சீக்கம், கோலான் (குடல்பகுதி), மலக்குடல் என மூன்று பகுதிகளாக உள்ளது
- மலக்குடலில் உள்ள செரிக்கப்படாத பொருட்கள் - ராஃபேஜ் எனப்படும்
- அவரை விதை வடிவமுடையது
- சிறுநீரகத்தின் செயல் அலகு - நெப்ரான்
- சிறுநீரகத்தை சூழ்ந்துள்ள தடித்த, ஒளி ஊடுருவும் படலம் - கேப்சூயூல்
- சிறுநீரகத்தின் குழிந்த உட்புறப்பகுதி - ஹைலஸ்
- சிறுநீரகத்தின் சிவந்த வெளிப்பகுதி - கார்டெக்ஸ்
- சிறுநீரகத்தின் வெளிறிய உட்பகுதி - மெடுல்லா
- ஹைலஸ் வழியே புகும் சிறுநீர்நாளம் அகன்ற புனல் போன்றுள்ளது. இது பெல்விஸ் எனப்படும்
- மெடுல்லாவிலுள்ள கூம்பு வடிவ அமைப்புகள் - ரீனல் பிரமிடுகள் எனப்படும்
- பிரமிடுகளுக்கிடையில் பெல்விஸ் மடிப்பாக காணப்படுகிறது. இந்த அமைப்பின் பெயர் - கேலிசஸ் எனப்படும்
- பிரமிடுகளுக்கிடயிைல் கார்டெக்ஸ் திசு நீண்டுள்ளது.
- இது பெர்டினின் ரீனல் தூண்கள் எனப்படுகிறது
- நெப்ரானில் தட்டையதன எபிதீலிய செல்கள் - பௌமேனின் கேப்சூயூலில் காணப்படுகிறது
- பௌமேனின் கேப்சூயூலில் உட்செல்லிலும், வெளி செல்லிலும் கிளைத்தமனிகள் கொத்தாக காணப்படும் அமைப்பிற்கு - குளொமுருலஸ் எனப்பெயர் குளோமுருலஸ், பௌமேனின் கேப்சூயூல் இரண்டும் சேர்ந்த பகுதி - மால்பீஜியன் கேப்சூயூல் எனப்படுகிறது.
- இது இரத்தத்தை வடிகட்ட உதவுகிறது
- வடிகட்டப்பட்ட நீரிலுள்ள குளுகோஸ் அண்மை சுருண்ட சூழலில் உறிஞ்சப்படுகிறது
- ஏனைய அயனிகள் நெப்ரான் மூலம் உறிஞ்சப்படுகிறது
- குளோமுருலார் தமனியில் ரத்த அழுத்தம் - 75 மி. மீ. மெர்குரி
- மற்ற பகுதியில் தமனியில் ரத்த அழுத்தம் - 25 மி. மீ. மெர்குரி
- டயாலஸிஸ் என்பது செயற்கை முறையில் கழிவு பொருட்களை அகற்றும் முறை ஆகும்
- உணவானது சுவாச பாதையில் சென்றுவிடாமல் தடுப்பது - எபிக்ளாட்டிஸ்
- உடற்குழியை மார்பறை, வயிற்றறை என பிரிப்பது - உதரவிதானம்
- நுரையீரலை சுற்றியுள்ள இரு அடுக்கு - ப்ளுரா. இவ்விரு அடுக்குகளுக்கிடையே ப்ளுரல் திரவம் உள்ளது
- இரு நுரையீரல்களுக்கிடையே உள்ள இடைவெளி - மீடியாஸ்டினம்
- மனித நுரையீரல் உள்ள நுண்காற்றுப்பைகளின் எண்ணிக்கை - 300 மில்லியன்
- நுரையீரலின் முன்புறமுள்ள மார்பெலும்பின் பெயர் - ஸ்டெர்னம்
- சுவாசம் இருவகைப்படும். அவை 1. உட்சுவாசம் 2. வெளிசுவாசம்
- மூச்சுக்குழலின் பெயர் - ட்ரக்கியா. இதன் உட்சுவற்றில் எபிதீலியம் மற்றும் கோழை சுரப்பிகள் உள்ளன
- ஒரு நிமிட சுவாசத்தில் மனித நுரையீரல் 6 லிட்டர் காற்றை கொண்டிருக்கும்
- சுவாச மண்டலத்தை பாதிக்கும் நோய் ஆஸ்த்துமா
- 100 மி. லி. இரத்தத்தில் சுமார் 15 கிராம் ஹீமோகுளோபின்கள் உள்ளது
- மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206
- மண்டையோட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 8
- முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14
- முதுகு முள்ளெலும்புகளின் எண்ணிக்கை 33
- மார்பு எலும்புகளின் எண்ணிக்கை 12
- இடுப்பு முள்ளெலும்புகளின் எண்ணிக்கை 5
- மார்பறையில் எலும்புகளின் எண்ணிக்கை 12 சோடி விலா எலும்புகள்
- காயாய்டு எலும்பு என்பது - கீழ்த்தாடைக்கும் குரல்வளைக்கும் இடையிலுள்ளது
- முதல் கழுத்து முள்ளெலும்பு - அட்லஸ் (மண்டையோட்டை தாங்குகிறது)
- 2வது கழுத்து முள்ளெலும்பு - ஆக்ஸிஸ்
- 11, 12வது மார்பெலும்புகள் 'மிதக்கும் விலா எலும்புகள்' எனப்படும்
- இடுப்பெலும்பு வளையத்தின் பெயர் - பெல்விஸ்
- உடம்பிலுள்ள எலும்புகளில் நீளமானது - பீமர் (தொடை எலும்பு)
- எலும்புத் தசையின் செயல் அலகு - சார்கோமியர்
- சார்கோமியர் சுருங்கும் முறையினை விளக்கும் கோட்பாடு - சறுக்கும் இலை கோட்பாடு
- சார்கோமியர் ஆர்பின் மற்றும் மையோசிஸ் புரதங்களாலானது
- Z தட்டு, M தட்டு, ஆகியவை காணப்படுமிடம் - சார்கோமியர்
- மனித உடலில் எலும்புத்தசைகள் எண்ணிக்கை - 600க்கும் மேல் உள்ளன
கண்
- இமையடிபடலத்தின் பெயர் - கன்ஜக்டிவா
- மேல்இமையின் உள் விளிம்பில் காணப்படும் கண்ணீர்சுரப்பி - லாக்ரிமல் சுரப்பி
- கண்கோளத்தின் ஒளிஊடுருவும் பகுதி கார்னியா (கருவிழி)
- விழிக்கோளம் மூன்று அடுக்குகளை கொண்டது வெளி அடுக்கானது ஒளி ஊடுருவக் கூடிய விழிவெண்படலம் மற்றும் ஒளி ஊடுருவாத விழிவெளிப்படலம் என்ற பகுதியால் ஆனது
- மைய அடுக்கு விழியடிக் கரும்படலம், சிலியரித்தசைகள், ஐரிஸ் மற்றும் விழிலென்ஸ் ஆகியவற்றைக் கொண்டது
- உள் அடுக்கில் விழித்திரை காணப்படுகிறது
- விழிலென்சின் வடிவத்தையம், வளைவையும் கட்டுப்படுத்தும் பகுதி - சிலியரித்தசைகள்
- ஒளிபுகா வெளிப்புற வெண்மைப்பகுதி - ஸ்கிளிரா (விழிவெண்படலம்)
- விழித்திரையில் பெயர் - ரெட்டினா
- விழித்திரையில் காணப்படும் ஒளி உணர் செல்கள் கூம்பு வடிவம் மற்றும் குச்சி வடிவ செல்களாலானது
- குச்சி (உருளை) வடிவ செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவுகிறது
- கூம்பு செல்கள் வண்ணங்களை உணர உதவுகிறது
- விழித்திரையில் தண்டுகள் மற்றும் கூம்புகள் மிகுந்த பகுதி - மஞ்சள் புள்ளி எனப்படும்
- விழித்திரையில் தண்டுகள் மற்றும் கூம்புகள் காணப்படாத பகுதி - குருட்டுப்புள்ளி எனப்படும்
- விழித்திரையில் விழும் பிம்பம் தலைகீழானது
- ஒருவருக்கு கிட்டப்பார்வை (அ) தூரப்பார்வை இருப்பதன் காரணம் - விழித்திரையில் பிம்பங்கள் குவிக்கப்படாமல் இருப்தே காரணமாகும்
- ஒருவருக்கு கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரு குறைபாடுகளும் காணப்பட்டால் அதனை சரி செய்ய குவி மற்றும் குழி லென்சுகள் இணைந்த கண்ணாடியை பயன்படுத்தலாம்
- ஒளியாற்றல் கூம்பு, குச்சி செல்களால் மின்தூண்டலாக மாற்றப்பட்டு மூளைக்கு கடத்தப்படுகிறது
- மாலைக்கண் நோயால் பாதிக்கப்படுவது - குச்சி (உருளை) செல்கள்
- கண்குறைபாட்டை லேசர் அறுவைசிகிச்சை மூலம் குணமாக்கலாம்
- கண் உறையின் நடுப்பகுதி கோராய்டு. கண்ணின் முன்புறத்தில் இவ்வுறை 'ஐரிஸ்' எனும் உறுப்பாக உள்ளது
- விழிலென்சை சுற்றியுள்ள தசைகளால் சூழப்பட்டப்பகுதி - கண்பாவை கண்ணில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்தும் பகுதி - கண்பாவை
- கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையேயுள்ள திரவம் - ஆக்குவாஸ் ஹியூமர்
- லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையேயுள்ள திரவம் - விட்ரியஸ் ஹியூமர்
- அக்குவாஸ் ஹியூமர், விட்ரியஸ் ஹியூமர் ஆகியவை கண்ணிற்கு வடிவத்தை அளிக்க பயன்படுகிறது
- விழித்திரையின் மையத்தில் தெளிவான பார்வைக்கு காரணமான பகுதி - மாக்குலா
- 'காட்டிராக்ட்' என்பது கண்புரைநோய்
- விழிலென்சின் குவியதூரமதிப்பு - 2.5 செ.மீ
- தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு - 25 செ.மீ
- இரவில் காணப்படும் விலங்குகளில் கண்களின் விழித்திரைக்கு பின்னால் காணப்படும் ஒளி எதிரொலிப்பு ஏட்டின் பெயர் - டபீட்டம் எனப்படும்.
- இது குவினைன் படிகங்களால் ஆனது.
- இக்குவினைன் படிகங்கள் தான் விலங்குகளின் கண்கள் இரவில் மின்னக் காரணமாகிறது
- மனித கண்களால் கண்டுணரக்கூடிய மின்காந்த அலைகள் - கண்ணுறுஒளி
- இரண்டு அடுக்கு கொண்டது. அவை 1. மேல் தோல் (எபிதீலிய திசு) 2. கீழ் தோல்
- வியர்வை சுரப்பி, எண்ணெய் சுரப்பி காணப்படுகிறது
- அடிப்புறத் தோலின் மேலேடுக்கு - மால்பிஜிபியன் அடுக்கு எனப்படுகிறது.
- இவ்வடுக்கில் மெலானின் நிறமிகள் காணப்படுகின்றன
- நமது தோலுக்கு நிறத்தைக் கொடுப்பது - மெலானின் நிறமிகள்
- தோல் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது
- நகம், கொம்பு. குளம்பு ஆகியவை தோலின் மாற்றுருக்கள்
- காண்டாமிருகத்தின் கொம்பு எலும்பினால் உண்டாகின்றன. ரோமக்கற்றைகளால் ஆனது
- ஒலி உணர்தல், உடல் சமநிலைப்படுத்தல் ஆகிய முக்கிய வேலைகளை செய்கிறது
- நடுச்செவியிலுள்ள சிற்றெலும்புகள் சுத்தி (மேலியஸ்), பட்டடை (இன்கஸ்), அங்கவடி (ஸ்டேப்பிஸ்) சுத்தி செவிப்பறையோடு தொடர்புடையது
- உட்செவியிலுள்ள யூட்ரிகுலேஸ் உடலை சமநிலைப்படுத்துகிறது
- உட்செவியிலுள்ள உறுப்புகள் - யூட்ரிகுலஸ், காக்லியா, சாக்குலஸ்
- யூட்ரிகுலஸின் முனையிலுள்ள சுண்ணாம்பிலான சிறு படிமங்கள் - ஒட்டோலித் எனப்படும்.
- இதை கொண்டு உடலின் சமநிலையை அறியலாம்.
- நரம்பு மண்டலத்தின் செயல் அலகு - நியூரான் (நரம்பு செல்)
- நியூரானின் புற எல்லையில் தோன்றும் கிளைகள் - டென்டிரைடு
- டென்டிரைடு புற எல்லையில் தோன்றும் நீண்ட, கிளைக்கற்ற அமைப்பு - ஆக்சான்
- நரம்பு செல்களின் டென்ரைடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளுமிடம் - சைனாப்ஸிஸ் நரம்பு செல்களின் டென்ரைடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளுமிடம் - சைனாப்ஸிஸ் ஆக்சான் வழியாக தூண்டுதல் கடத்தப்படும் நிகழ்வுக்கு “செயல் மின்னழுத்தம்” என்று பெயர் மூளைக்கு பல்வேறு உறுப்புகளிலிருந்து தகவல்களைக் கடத்துவது - நியூரான்கள் உடல் உறுப்புகள் மூளையின் துணையற்று தண்டுவடம் மூலம் தகவல் பரிமாறும் முறை - அனிச்சை செயல் தண்டுவடத்திலுள்ள இணை நரம்புகளின் எண்ணிக்கை 31 (மூளை) கபால நரம்புகளின் எண்ணிக்கை 12
- மூளையின் எடை ஏறத்தாழ 1.36 கிலோ
- மூளையிலுள்ள நரம்பு செல்களின் எண்ணிக்கை - ஏறத்தாழ 12,000
- மூளையைச் சுற்றி ‘மெனின்ஜஸ்' எனும் மூன்று உறைகள் உள்ளன
- டியூராமேட்டர் (வெளி உறை)
- அரக்னாய்டு (நடு உறை)
- பயாமேட்டர் (உள் உறை)
- பயாமேட்டருக்கும் அரக்னாய்டு உறைக்கும் இடைப்பட்ட பகுதி - அரக்னாய்டு கீழ் உறை ஆகும்.
- இப்பகுதியில் மூளை தண்டுவடத்திரவம் நிரம்பியுள்ளது
- மூளை மூன்று பகுதிகளை உடையது. ஆவை:
- புரொசென்செஃபலான் (முன் மூளை)
- மீசென்செஃபலான் (நடு மூளை)
- ராம்பென்செஃபலான் (பின் மூளை)
- மூளையில் பெருமூளை 2/3 பங்கு அளவு கொண்டது
- பெருமூளை இரு அரைவட்ட கோளங்களாக உள்ளது
- பெருமூளையின் அடிப்பகுதி 'கார்பஸ் காலோஸம்' எனும் நரம்புத்திசுப் பட்டையினால் பிரிக்கப்பட்டுள்ளது
- கார்பஸ் காலோஸத்தின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும் நீள்வட்ட அமைப்பு - பைனியல் உறுப்பு
- மனிதனின் நுண்ணறிவு திறன் பெருமூளை புறணியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நரம்புசெல்களைப் பொறுத்தது.
- சுருக்கங்களுக்கு இடையே உள்ள பள்ளங்கள் - சல்கஸ், மேடுகள் - கைரஸ் எனப்படும்
- டையன்செபலானின் தரைப்பகுதியில் காணப்படும் புனல் போன்ற அமைப்பின் பெயர் இன்பன்டிபுலம்.
- இது பிட்யூட்டரிக் சுரப்பியைத் தாங்குகிறது தலாமஸின் முன்பும், பக்கவாட்டிலும் காணப்படும்
- சாம்பல் நிறப்பகுதி - கார்பஸ் ஸ்ட்ரேயேட்டம் ஹைப்போதலாமஸின் உச்சியில் காணப்படும் ரத்தக்குழாயின் பெயர் - கோராய்டு பிளக்சிஸ்.
- இதில் மூளைத் தண்டு வடத்திரவம் உருவாகிறது
- நடுமூளையில் உள்ள நான்கு வட்ட வடிவ பகுதிகள் கார்போரா குவாட்ரிஜெமீனா எனும் உறுப்புகளாம்
- மூளையை தண்டுவடத்துடன் இணைப்பது - முகுளம் தண்டுவடம், முதுகெலும்பு நரம்புக்குழியில் ஆரம்பித்து லம்பார் முள்ளெலும்பின் அடிப்பகுதி வரை நீண்டு கோனஸ் மெடுல்லாரிஸ் எனும் பகுதியாக முடிகிறது
- லம்பார், சேக்ரல், பகுதிகளில் தண்டுவடம் கற்றையாக நீண்டு உள்ளது.
- இதற்கு காடா இக்வினா (குதிரைவால்) எனப்பெயர் கழுத்து, இடுப்பு, பகுதிகளில் தண்டுவடம் விரிவடைந்துள்ளது.
- அதில் கழுத்து பகுதி விரிவு - செர்வைகல் விரிவு எனப்படும் இடுப்புப் பகுதி விரிவு - லம்பார் விரிவு எனப்படும் தண்டுவடத்தைச் சுற்றி மூன்று உறைகள் உள்ளன
- கோனஸ் மெடுல்லாரிஸில் பயாமேட்டர் மெல்லிய நீள் இழையாக உள்ளது. இது பைலம் டெர்மினேல் எனப்படும்
- தண்டுவடத்திரவன் நிரம்பியுள்ள கால்வாய் - நியூரல் கால்வாய் எனப்படும்
- பெருமூளை: நினைவாற்றல், உணர்தல் (பார்த்தல், கேட்டல்)
- நடுமூளை: அனிச்சை செயலைக் கட்டுப்படுத்தல், உடலினைச் சமநிலைப்படுத்தல்
- சிறுமூளை: உடல் சமநிலையைப் பேணுதல், நம் இச்சைக்குட்பட்ட அசைவுகளை எலுமத்புத்தசைகளில் உருவாக்குதல்
- முகுளம்: சுவாசம், இரத்தச்சுழற்சி
- மனிதனில் காணப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு - சுமமர் 100 - 200 மி.லி
- ஒரு மணி நேரத்தில் சுரக்க கூடிய மூளைதண்டுவடத்திரவத்தின் அளவு - 20 மி. லி இது
- இரத்த பிளாஸ்மாவின் வடிநீராகும்
- நாளமுள்ள சுரப்பிகள் -- எக்சோகிரைன் சுரப்பிகள் எனப்படும். இவை சுரப்பது நொதிகள் (என்ஸைம்)
- நாளமில்லா சுரப்பிகள் - எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும். இவை சுரப்பது ஹார்மோன்கள்