24.2 ல் 12% என்பது 14.2 ல் 10% என்பதைவிட எவ்வளவு அதிகம்?
|
Answer
|
ஒரு வகுப்பறையில் உள்ளவர்களில் 20% பேர் ஒவ்வொருவரிடமும் 2 கார்கள் வைத்துள்ளனர். அதுபோல, 40% பேர் ஒவ்வொருவரிடமும் 3 கார்கள் வைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒரு கார் வீதம் வைத்துள்ளனர். ஆகவே ஒரு கார் மட்டுமே வைத்துள்ளவர்களின் சதவீதத்தினைக் காண்க.
|
Answer
|
ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோகக் கலவையில் நிக்கலின் அளவு யாது?
|
Answer
|
கணிணிக் குழுமத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 1500 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 12% நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர் எனில், எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்? மேலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனக் காண்க. விடை : 180, 1320
|
Answer
|
ஒரு பொருளை ரூ.100 க்கு வாங்கி, ரூ.125 க்கு விற்றால் லாப சதவீதம் எவ்வளவு?
|
Answer
|
ஒரு பொம்மையின் அடக்க விலை ரூ.56.50 மற்றும் அப்பொம்மையின் இலாப சதவீதம் 25% எனில், அந்த பொம்மையின் விற்ற விலையைக் காண்க.
|
Answer
|
7500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எண்ணிக்கை எத்தனை?
|
Answer
|
ஷியாமின் மாத வருமானம் Rs.12000. அவர் சேமிக்கும் தொகை Rs. 1200. அவரின் சேமிப்பு மற்றும் செலவின் சதவீதம் காண்க.
|
Answer
|
A யின் வருமானம் B யின் வருமானத்தைவிட 25% அதிகம் எனில் B யின் வருமானம் A யின் வருமானத்தைவிட எவ்வளவு குறைவு?
|
Answer
|
ஓம் ஆடையின் விலை ரூ. 2100 லிருந்து ரூ. 2520 ஆக அதிகரிக்கின்றது எனில், அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
|
Answer
|