‘ஆதித்யா-எல்1’ என்ற திட்டம் மூலம் விண்கலத்தை எங்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது ?
நிலவு
சூரியன்
செவ்வாய்
வெள்ளி
Explanation:
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை ‘இஸ்ரோ’ செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ஆதித்யா-எல்1’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டத்தை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். “சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டம், எப்படி இந்த அளவுக்கு அதிக வெப்பநிலையை அடைகிறது என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது” என்று இஸ்ரோ தனது இணையதளத்தில் இத்திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில், இந்த திட்டம் பற்றி விவரித்தார். “பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியன் இருக்கிறது. பருவநிலை மாறுபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒளிவட்டம் பற்றி ஆய்வு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.