தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள பிரிவு ?
பிரிவு ௧௩ - மத்திய தகவல் ஆணையர் மறும் தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ). இந்த நியமனத்தில் இது போன்ற கால நிர்ணயத்தை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும், தலைமை தகவல் ஆணையர், சம்பளம், பிற படிகள் மற்றும் சேவை காலம் தலைமை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் ஒரு தகவல் ஆணையருடையவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் பிரிவு 13 கூறுகிறது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் சம்பளம், இதர படிகள், மற்றும் சேவை காலம் போன்றவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறுகிறது. பிரிவு 16 மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் ஆணையர்களுடன் தொடர்புடையது. இது மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்களின் சேவை காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ). இந்த நியமணங்களின் காலம் போன்றவை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும் அசல் சட்டம் மாநில தலைமை தகவல் ஆணையரின் சம்பளம், சேவை காலம் போன்றவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும். என்றும் மாநில தகவல் ஆணையரின் சம்பளம் மற்றும் சேவை காலம் போன்றவை மாநில தலைமை செயலாளருடையதைப் போல இருக்கும் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்த திருத்தம் இவை எல்லாம் மத்திய அரசால் பரிந்துரைக்கலாம் என்று தெரிவிக்கிறது.