கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - வங்காள கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடம் இருந்து கடனாக பெற்றனர்.
கூற்று 2 - கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் ஒரு வழியாக தங்களின் பரந்த நிலப் பகுதிகளில் நில வரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர்.
கூற்று 3 - கர்நாடகம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி கர்நாடகம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிகளை ஆற்காட்டு நவாப் கட்டுப்படுத்தினார்