Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Prepare QA

55498.ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற கடல் கடந்து வணிகம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - மேற்கு கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டை அல்லது குஜராத்தில் உள்ள சூரத் துறைமுகங்கள் இடைநிலை துறைமுகங்கள் என்றழைக்கப்பட்டன.
கூற்று 2 - 16ஆம் நூற்றாண்டில் கள்ளிக்கோட்டை மதிப்பிழந்தது. அதற்கு மாற்றாக கடலோரப் பகுதிகளை கொண்ட குஜராத் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றன.
கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 மட்டும் சரி
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
Explanation:

சோழமண்டல கடற்கரையில் துறைமுகங்களான மசூலிப்பட்டினம், பழவேற்காடு ஆகியவையும் அவற்றுக்கு தெற்கே உள்ள ஏனைய துறைமுகங்களும் பர்மா, மலாய் தீபகற்பத்தில் இருந்துவரும் கப்பல்களுக்கு இடைநிலை துறைமுகங்களாக சேவை செய்தன
55499.இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பியர் யார்?
வாஸ்கோடகாமா
அல்புகார்க்
அல்மெய்டா
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 120 நபர்களோடு இந்தியாவிற்கு வந்தார். ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியே இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார்
55500.பிளாசிப் போரின்போது ஆங்கிலேயப் படைக்கு தலைமை ஏற்றவர் யார்?
I. ராபர்ட் கிளைவ்
II. வாட்சன்
III. மேஜர் கில்லஸ்பி
I மட்டும்
I, II மட்டும்
I, III மட்டும்
II, III மட்டும்
Explanation:

வில்லியம் கோட்டையை சேர்ந்த ஆங்கில அதிகாரிகளின் இடர்பாடுகளை களைவதற்காக, வணிக குழு புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஒரு வலுவான படைப்பிரிவை ராபர்ட் கிளைவ் மற்றும் வாட்சன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைத்தது
55501.இந்தியாவில் டேனியர்கள் வசம் இருந்த பகுதிகளில் கீழ்க்கண்டவை களில் சரியானது எது?
I. தரங்கம்பாடி
II. செராம்பூர்
III. நிக்கோபார் தீவுகள்
IV. கண்ணூர்
I, II மட்டும் சரி
I, II, III மட்டும் சரி
II, III, IV மட்டும் சரி
இவை எல்லாமே சரி
Explanation:

தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகியன தனியார் வசமிருந்த பகுதிகளாகும்
55502.வாஸ்கோடகாமா எந்த நாளில் இந்தியாவில் இருந்து இந்திய சரக்குகளுடன் போர்த்துகீசிய நாட்டிற்கு திரும்பினார்?
1498, ஆகஸ்ட் 20ஆம் நாள்
1498, ஆகஸ்ட் 23ஆம் நாள்
1498, ஆகஸ்ட் 26ஆம் நாள்
1498, ஆகஸ்ட் 29ஆம் நாள்
Explanation:

1498ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடு இருந்த 55 மாலுமிகளுடனும், மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்திய சரக்குகளுடனும் ஊர்திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்
55503.வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு இரண்டாம் முறை வந்த ஆண்டு எது?
1500 இல்
1501 இல்
1502 இல்
1503 இல்
Explanation:

1502ஆம் ஆண்டு, அக்டோபர் 29ஆம் நாள், 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார். அங்கிருந்து அதிக வசதிகளை கொண்ட கொச்சிக்கு சென்றார். ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டும் எனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்
55504.வாஸ்கோடகாமா போர்ச்சுகலுக்கு திரும்பும் முன்னர் ஒரு சரக்கு கிடங்கை எங்கு நிறுவினார்?
கொச்சி
கோழிக்கோடு
கண்ணனூர்
கொல்லம்
Explanation:

ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டும் எனில் கணிதத்தின் மீது அரபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டும் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். கொச்சி மற்றும் கள்ளிக் கோட்டையில் இந்து மன்னர்கள் இடையே நிலவிய பகைமையை அவர் தமது நலனுக்கு பயன்படுத்திக் கொண்டார். இந்திய பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அரேபியர் கொண்டிருந்த உரிமையை ஒழித்தார்.
55505.போர்த்துகீசியரால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
அல்புகர்க்
நினோ டா குன்கா
ஆண்டானியோ டி நோரன்கா
Explanation:

ஆண்டு தோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்ச்சுக்கீசியர், இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர். முதல் ஆளுநரான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா நீலநீர் கொள்கையை கடைப்பிடித்தார்
55506.பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்னும் போர்த்துகீசிய ஆளுனரின் நீல நீர் கொள்கை என்பது என்ன?
I. குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல், கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
II. கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வணிகத்தை விரிவுபடுத்துதல்
III. போர்த்துகீசிய கப்பற்படையை இந்தியாவில் அதிகப்படுத்துதல், மற்றும் வலுப்படுத்துதல்.
I, II மட்டும்
II, III மட்டும்
I, III மட்டும்
இவை அனைத்தும்
Explanation:

நீல நீர் கொள்கை மூலம் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார். சாமுத்திரியினுடைய கப்பல் படையையும், எகிப்திய சுல்தான் கடற்படையையும் மூழ்கடித்தார்
55507.பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா கீழ்க்காணும் எந்த இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்?
I. கொச்சி
II. கண்ணூர்
III. மசூலிப்பட்டினம்
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
I, III மட்டும் சரி
இவை அனைத்தும் சரி
Explanation:

பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா கொச்சி அரசருடன் நட்பு பூண்டார். அவர் கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்
55508.இந்தியாவில் ஐரோப்பிய வணிகத் தளங்கள் இருந்த இடங்களை பொருத்துக.
I.டச்சுக்காரர்-aசென்னை
II.ஆங்கிலேயர்-b மாஹி
III.பிரெஞ்சுக்காரர்-c கண்ணூர்
IV.போர்த்துக்கீசியர்-d பழவேற்காடு
I-d, II-a, III-b, IV-c
I-d, II-b, III-a, IV-c
I-c, II-d, III-a, IV-b
I-d, II-c, III-a, IV-b
Explanation:

டேனியர்கள் தரங்கம்பாடி, ஆங்கிலேயர்கள் சென்னை, மும்பை, அகமதாபாத், ஆக்ரா போர்த்துக்கீசியர்கள் டாமன், கள்ளிக்கோட்டை, கொச்சின் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி, மாஹி போன்ற இடங்களில் தங்களது வணிகத் தளங்களை நிறுவினர்
55509.ஐ லா சபேல் ( Aix La Chapelle) என்னும் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு வட அமெரிக்காவின் ____________ என்ற இடத்தை கொடுப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
கலிபோர்னியா
வாஷிங்டன்
லூயிஸ்பர்க்
இது எதுவும் அல்ல
Explanation:

ஐ லா சபேல் (Aix La chapelle) உடன்படிக்கையின்படி இந்தியாவில் ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மோதல்களை முடித்துக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவது என்றும், அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ் பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்கு கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது
55510.போர்த்துகீசிய ஆளுநர் அல்புகார்க் பீஜப்பூர் அரசர் யூசுப் அடில் கானை தோற்கடித்து எந்த ஆண்டு கோவாவை கைப்பற்றினார்?
1508 இல்
1510 இல்
1512 இல்
1514 இல்
Explanation:

பிஜப்பூர் அரசர் யூசுப் அடில் கானை தோற்கடித்த போர்த்துகீசிய ஆளுநர் அல்புகார்க் 1510 ஆம் ஆண்டில் கோவாவை கைப்பற்றினார் கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார்
55511.போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றிய இடங்களை பொருத்துக?
I.
I.ஆர்மசு-a. 1559
II.பஸீன்-b. 1515
III.டையூ-c. 1534
IV.டாமன்-d. 1537
I-b, II-c, III-d, IV-a
I-c, II-d, III-a, IV-b
I-d, II-b, III-c, IV-a
I-a, II-d, III-c, IV-b
Explanation:

டா குன்கா 1534இல் பசீனையும், 1537இல் டையூவையும் கைப்பற்றினார்.1559இல் டாமன் துறைமுகம் இமாத் உல் முல்க் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது
55512.சதி என்னும் உடன்கட்டை பழக்கத்தை நிறுத்த முயன்ற போர்த்துகீசிய ஆளுநர் யார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
அல்புகர்க்
நினோ டா குன்கா
ஆண்டானியோ டி நோரன்கா
Explanation:

போர்த்துக்கீசிய பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே ஆவார். 1610 ஆம் ஆண்டு கோவாவை கைப்பற்றினார். ஐரோப்பியர் இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்டு, போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் குடியேறுவதை இவர் ஆதரித்தார்
55513.மீன் பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை போன்றவற்றிற்காக போர்த்துகீசியர்கள் மற்றும் கீழே கடற்கரையில் சார்ந்த முஸ்லிம் குழுக்களுக்கும் எந்த ஆண்டு மோதல்கள் நிகழ்ந்தன?
1520 இல்
1525 இல்
1530 இல்
1535 இல்
Explanation:

மீன் பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக் குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழை கடற்கரையை சார்ந்த முஸ்லிம் குழுக்களுக்கும் இடையே 1530களில் மோதல்கள் நடந்தன.
55514.ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் எந்த ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டை கைப்பற்றினார்?
1560 இல்
1570
1580 இல்
1590 இல்
Explanation:

1580 இல் ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் போர்ச்சுக்கல் நாட்டை கைப்பற்றி இணைத்துக் கொண்டார். போர்ச்சுகீசியரை முதலில் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையில் இருந்த அவர்களின் கோட்டையையும் கைப்பற்றினர். இதனால் போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களை பாதுகாப்பதை காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்
55515.ஐரோப்பியர்களுக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்தவர்கள் யார்?
ஆங்கிலேயர்கள்
டச்சுக்காரர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
போர்ச்சுகீசியர்கள்
Explanation:

போர்ச்சுகீசியர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்ததின் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக் குழு உருவானது. இவர்கள் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த போர்த்துக்கீசியரின் காலனிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்
55516.போர்த்துக்கீசியர்கள் கருப்பர் நகரம் என்று எதை அழைத்தனர்?
மயிலாப்பூர்
ஜார்ஜ் டவுன்
கள்ளிக்கோட்டை
கொச்சி
Explanation:

சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கிய சான்றாக உள்ளது. போர்ச்சுகீசியர்கள் கருப்பர் நகரம் என்று மயிலாப்பூரை அழைத்தனர்
55517.1750ஆம் ஆண்டு சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தாங்கள் யாருடைய "பாதுகாப்பின் கீழ்" இருப்பதாக அறிவித்துக் கொண்டனர்?
I. ஆங்கிலேயர்கள்.
II. டச்சுக்காரர்கள்
III. போர்ச்சுகீசியர்கள்
IV. முகலாயர்கள்
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
IV மட்டும் சரி
I மட்டும் சரி
Explanation:

1700களில் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் இருந்து வெளியேறி தங்களின் தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றி இருந்தனர். சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தாங்கள் டச்சுக்காரரின் அல்லது ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக 1750 ஆம் ஆண்டில் அறிவித்துக் கொண்டனர் எனவே உறுதியற்ற அரசியல் சூழலால் சூரத் நகரம் அல்லலுற்றது
Share with Friends