Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Prepare QA Page: 3
55538.பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கு மிகுந்த இடங்களில் தவறானது எது?
I. புதுச்சேரி
II. காரைக்கால்
III. மாகி
IV. மசூலிப்பட்டினம்
I, II மட்டும் சரி
I, II, III மட்டும் சரி
II, III மட்டும் சரி
இவை எல்லாமே சரி
Explanation:

பியரி பெனாயிட் டூமாஸ் (1668-1745) என்பவர் புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார். இருந்தபோதிலும் தங்களை விட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது
55539.நார்வே எந்த ஆண்டு வரை டென்மார்க்குடன் இணைந்து இருந்தது?
1807 ஆம் ஆண்டு
1809 ஆம் ஆண்டு
1811 ஆம் ஆண்டு
1813 ஆம் ஆண்டு
Explanation:

டென்மார்க் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களை கொண்டிருந்தது. நார்வே 1813ஆம் ஆண்டு வரை டென்மார்க் உடன் இணைந்து இருந்தது
55540.வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தின் போது அவருக்கு யாருடைய நட்பு கிடைத்தது?
கள்ளிக்கோட்டை அரசர்
கொச்சின் அரசர்
கொல்லம் அரசர்
திருவனந்தபுரம் அரசர்
Explanation:

கள்ளிக்கோட்டை அரசர் சாவித்திரியினுடைய (சாமரின்) நட்புணர்வு வாஸ்கோடகாமாவிற்கு மகிழ்ச்சி அளித்தது. இந்திய சரக்குகளுடன் தாய் நாட்டுக்கு திரும்பிய அவர், 1200 மாலுமிகளை, 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பிவைத்தார்.
55541.டேனிய கிழக்கிந்திய கம்பெனி உருவான நாள் எது?
மார்ச் 11, 1616
மார்ச் 13, 1616
மார்ச் 15, 1616
மார்ச் 17, 1616
Explanation:

1616, மார்ச் 17 ஆம் நாள், டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனிய கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கினார். டேனிய வணிகர் இடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை
55542.டேனியர்களின் வணிக இயக்குனரான ராபர்ட் கிராபி என்பவர் யாருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியையும் அதில் கோட்டைகட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்?
மதுரை அரசர்
ராமநாதபுரம் அரசர்
ராமநாதபுரம் அரசர்
புதுக்கோட்டை அரசர்
Explanation:

ராபர்ட் கிராப்பி என்னும் டேனிய வணிக இயக்குனர் தஞ்சாவூர் நாயக்க அரச ரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.1620ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் நாள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் ஒரு கோட்டை கட்டும் உரிமையைப் பெற்றனர்
55543.ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் என்று எதை அழைத்தனர்?
மயிலாப்பூர்
ஜார்ஜ் டவுன்
கள்ளிக்கோட்டை
கொச்சி
Explanation:

போர்த்துக்கீசியரின் வருகையின் தாக்கமானது, இந்தியஅரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளை கைப்பற்றினர் எனும் வரலாற்றை உருவாக்கியது.
55544.இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?
1693 இல்
1696 இல்
1698 இல்
1699 இல்
Explanation:

இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696இல் தொடங்கப்பட்டது. டென்மார்க்கிர்க்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
55545.டென்மார்க்கிலிருந்து முதன்முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் எப்போது இந்தியா வந்தனர்?
1702ஆம் ஆண்டு
1704ஆம் ஆண்டு
1706ஆம் ஆண்டு
1708ஆம் ஆண்டு
Explanation:

1706ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் டென்மார்க்கில் இருந்து முதன் முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். டேனியர்கள் 1855ஆம் ஆண்டில் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர்
55546.டென்மார்க்கிலிருந்து முதன்முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் எப்போது இந்தியா வந்தனர்?
1702ஆம் ஆண்டு
1704ஆம் ஆண்டு
1706ஆம் ஆண்டு
1708ஆம் ஆண்டு
Explanation:

1706ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் டென்மார்க்கில் இருந்து முதன் முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். டேனியர்கள் 1855ஆம் ஆண்டில் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர்
55547.பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு எது?
1751
1753
1755
1757
Explanation:

1757ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாப்பை ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டனர். அந்த ஆண்டை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் என்று வரையறுப்பது மரபு.
55548.1839 ஆம் ஆண்டு டேனியர்களால் ______________ ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.
தரங்கம்பாடி
செராம்பூர்
பாலசோர்
பிப்ளி
Explanation:

1839 ஆம் ஆண்டு டேனியர்கள் செராம்பூர் பகுதியை ஆங்கிலேயருக்கு விற்றனர். தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845ஆம் ஆண்டு விற்கப்பட்டன.
55549.ஜேன் ஹியூன் வான் லின்சோடென் என்னும் டச்சுக்காரர் தென் கிழக்கு ஆசியாவை நோக்கிய தனது முதல் பயணத்தை எந்த ஆண்டு மேற்கொண்டார்?
1585 இல்
1590 இல்
1595 இல்
1575 இல்
Explanation:

ஜேன் ஹியூன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தை சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென் கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 இல் மேற்கொண்டார்.
55550.பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்?
1711 ஆம் ஆண்டு
1713 ஆம் ஆண்டு
1715 ஆம் ஆண்டு
1717 ஆம் ஆண்டு
Explanation:

சீகன்பால்கு ஓர் அச்சுக் கூடத்தை நிறுவினார். தமிழ் மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார்.1715ஆம் ஆண்டு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்
55551.டேனிய கிறிஸ்துவ மதப்பரப்பாளரான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு மறைந்தார்?
1713, பிப்ரவரி 23ஆம் நாள்
1715, பிப்ரவரி 23ஆம் நாள்
1717, பிப்ரவரி 23ஆம் நாள்
1719, பிப்ரவரி 23ஆம் நாள்
Explanation:

பார்த்தலோமியஸ் சீகன்பால்கு 1718ஆம் ஆண்டு தேவாலய கட்டிடமும், உள்ளூர் மத குருமார்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.
55552.இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை எந்த ஆண்டு முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார்?
1610 இல்
1611 இல்
1612 இல்
1613 இல்
Explanation:

ஆங்கிலேயர் சூரத் நகரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர். குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார். ஆனால் இப்பகுதிகளில் போர்த்துக்கீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்று இருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை
55553.சந்திரகிரி அரசர் எந்த ஆண்டு சென்னையை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்து அதில் கோட்டை கட்டும் அனுமதியை வழங்கினார்?
1637 ஆம் ஆண்டு
1638 ஆம் ஆண்டு
1639ஆம் ஆண்டு
1640ஆம் ஆண்டு
Explanation:

சென்னையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு முதன்முதலாக பெற்ற நிலப்பகுதி இதுவே.
55554.அவுரங்கசீப் எந்த ஆண்டு கோல்கொண்டாவினை கைப்பற்றி அதனை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்?
1681 இல்
1683 இல்
1685இல்
1687 இல்
Explanation:

சென்னையின் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது 1645 ம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687ஆம் ஆண்டு அவுரங்கசீப் கோல்கொண்டா கைப்பற்றி கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஆனால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன
55555.கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - 16ம் நூற்றாண்டுகளில் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூரத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.
கூற்று 2 - முகலாய அரசு சூரத் நகரத்திற்கு 2 ஆளுநர்களை நியமித்து இருந்தது.
கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 மட்டும் சரி
இரண்டு கூற்றுகளும் சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
Explanation:

சூரத் நகரில் ஒரு ஆளுநர் நகரை பாதுகாப்பதற்காக தபதி நதியின் அருகே கட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களுடன் கூடிய காவலரணில் பணி அமர்த்தப்பட்டு இருந்தார். இன்னொரு ஆளுனர் நகரம் தொடர்பான நிர்வாகத்திற்கும் சுங்கவரியை வசூலிப்பதற்கு பொறுப்பாவார்
55556.பொருத்துக.
A. 1668ஆம் ஆண்டு-a. சென்னை மாகாணம் உருவாக்கம்
B. 1640ஆம் ஆண்டு-b. அவுரங்கசீப் கோல்கொண்டா மீது படையெடுப்பு
C. 1687ஆம் ஆண்டு-c. இரண்டாம் சார்லஸ் பம்பாய் தீவை பரிசாக பெறுதல்
D. 1684ஆம் ஆண்டு-d. புனித ஜார்ஜ் கோட்டை கட்டுதல்
I-c, II-d, III-b, IV-a
I-d, II-b, III-c, IV-a
I-b, II-d, III-a, IV-c
I-a, II-d, III-b, IV-c
Explanation:

1683ஆம் ஆண்டு பட்டயம் கம்பெனிக்கு படைகளை உருவாக்கி கொள்ளவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றில் உள்ள நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது
55557.சென்னை நகராட்சி உருவான ஆண்டு எது?
1682ஆம் ஆண்டு
1684ஆம் ஆண்டு
1686ஆம் ஆண்டு
1688ஆம் ஆண்டு
Explanation:

1688 இல் சென்னை ஒரு மேயரையும் 10 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசை பெற்றிருந்தது..1693இல் சென்னையை சுற்றி உள்ள மூன்று கிராமங்களையும், 1703இல் மேலும் 5 கிராமங்களையும் பெற்றது
Share with Friends