Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Prepare QA Page: 5
55578.பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?
1762 ஆம் ஆண்டு
1764 ஆம் ஆண்டு
1766 ஆம் ஆண்டு
1768 ஆம் ஆண்டு
Explanation:

மீர்காசிம்நவாப், முகலாய அரசர் இரண்டாம் ஆலம் ஷா, அவத்தின் நவாபான சூஜா உத்தவுலா ஆகிய மூவரும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்டனர். ஆங்கிலேயே கிழக்கிந்திய படையே வெற்றி பெற்றது
55579.I. பக்சார் போருக்குப் பின்னர் அலகாபாத் உடன்படிக்கையில்(1765இல்) கையெழுத்திட்டவர்கள் யார்?
II. ராபர்ட் கிளைவ்
III. முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்
IV. அவத்தின் நவாபான சூஜா உத்தவுலா
V. மீர்காசிம்
I, II மட்டும்
I, III மட்டும்
I, IV மட்டும்
இவர்கள் அனைவரும்
Explanation:

1765இல் அலகாபாத் உடன்படிக்கையில் ராபர்ட் கிளைவ், முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் படி வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் திவானி உரிமையை பெற்றது.
55580.மூன்றாம் கர்நாடகப் போருக்குப் பின்னர் பிரெஞ்சு அரசு இந்தியாவில் உள்ள பிரஞ்சு படைகளுக்கு தலைமை தளபதியாக யாரை அனுப்பி வைத்தது?
கவுண்ட்-டி-லாலி
புஸ்ஸி
துய்ப்பிளே
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

ஐரோப்பாவில் ஏழாண்டு போர் வெடித்த உடன், வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமான சந்தன்நகரை ராபர்ட் கிளைவ் கைப்பற்றினார். இத்துடன் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு அரசு கவுண்ட்-டி-லாலி என்பவரை இந்தியாவில் உள்ள பிரெஞ்சு படைகளுக்கு தலைமை தளபதியாக அனுப்பிவைத்தது
55581.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - வங்காள கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடம் இருந்து கடனாக பெற்றனர்.
கூற்று 2 - கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் ஒரு வழியாக தங்களின் பரந்த நிலப் பகுதிகளில் நில வரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர்.
கூற்று 3 - கர்நாடகம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது.
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி கர்நாடகம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிகளை ஆற்காட்டு நவாப் கட்டுப்படுத்தினார்
55582.பிரெஞ்சுக்காரர்கள் ராஜமுந்திரி மற்றும் மசூலிப்பட்டினத்தை முறையே __________ மற்றும் ____________ ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.
1756 இலும், 1759 இலும்
1756 இலும், 1758 இலும்
1758 இலும், 1759 இலும்
1759 இலும், 1760 இலும்
Explanation:

ஒருவேளை புதுச்சேரி தாக்கப்பட்டால் தனக்கு உதவியாக இருப்பதற்காக கவுண்ட்-டி-லாலி ஹைதராபாத்தில் இருந்த புஸ்ஸியை அழைத்தார். இடையில் தக்காண அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடைபெற்றன. ராஜாமுந்திரியை 1758இலும், மசூலிப்பட்டினத்தை 1759 இலும் பிரஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். ஹைதராபாத் நிஜாம் சலபத்ஜங் போரே செய்யாமல் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்
55583.செஞ்சி நாயக்கரிடம் இருந்து பழவேற்காடு பகுதியை பெற்ற ஐரோப்பியர் யார்?
ஆங்கிலேயர்கள்
பிரஞ்சுக்காரர்கள்
டச்சுக்காரர்கள்
போர்த்துக்கீசியர்கள்
Explanation:

நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தோனேசியத் தீவுகள் உடனான வணிகத்திற்கு தேவைப்படும் சில்லறை பொருட்களை கொள்முதல் செய்ய தங்களுக்கு சோழமண்டல கடற்கரையில் வணிகத்தளம் தேவை என்பதை டச்சுக்காரர்கள் உணர்ந்தனர். செஞ்சி நாயக்கரிடம் இருந்து பழவேற்காடு பகுதியை அவர்கள் பெற்றனர்
55584.புஸ்ஸி மற்றும் லாலி ஆகியோரின் கூட்டுப் படை கீழ்காணும் எந்த இடத்தை கைப்பற்றியது?
சென்னை
திருச்சி
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
Explanation:

லாலி முதலில் டேவிட் கோட்டையை கைப்பற்றினார். அடுத்து தஞ்சாவூர் முற்றுகையிடப்பட்டது. எனினும் தஞ்சாவூர் முற்றுகை கைவிடப்பட்டது. பின்னர் துசி மற்றும் லாலி ஆகியோரின் கூட்டுப் படை காஞ்சிபுரத்தை கைப்பற்றி சென்னையை கைப்பற்ற விரைந்தது
55585.கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - 1758ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் சென்னையில் முற்றுகையிட தொடங்கிய பிரெஞ்சுக்காரர்களால் 1759, பிப்ரவரி வரை சிறிதும் கூட முன்னேற முடியவில்லை.
கூற்று 2 - இதே சமயத்தில் சென்னையை விடுவிப்பதற்காக ஆங்கிலேய ஜெனரல் போகாக் ஒரு கப்பல் படையோடு இந்தியா வந்தார்.
கூற்று 3 - லாலி சென்னை முற்றுகையை கைவிட்டு காஞ்சிபுரம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானார்.கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்ததால் சென்னையில் 800 ஆங்கில வீரர்களையும், 2500 இந்திய வீரர்களை மட்டுமே கொண்டிருந்தனர். எனினும் பிரெஞ்சு படைகளால் சென்னையை கைப்பற்ற முடியவில்லை. இரண்டு பக்கங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. படைகளுக்கு தேவையான பொருட்களின் வரத்து சுருங்கியதால் பிரெஞ்சுக்காரர்களால் முற்றுகையை நீடிக்க முடியவில்லை
55586.அல்புகார்க் 1515இல் எந்த துறைமுகத்தை கைப்பற்றினார்?
சுமத்ரா
கொச்சின்
ஆர்மசு
குஜராத்
Explanation:

இந்தியாவிற்கும் சீனாவிற்கும், மெக்காவிற்கும் கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிக தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் வணிகர்களை அல்புகார்க் தோற்கடித்தார். அரபியரை தாக்கி ஏடன் நகரை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.1515இல் ஆர்மசு துறைமுகத்தை கைப்பற்றினார்
55587.புதுச்சேரி எந்த நாளில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது?
1761, ஜனவரி 4ஆம் நாள்
1761, ஜனவரி 14ஆம் நாள்
1761, ஜனவரி 15ஆம் நாள்
1761, ஜனவரி 20ஆம் நாள்
Explanation:

1761ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் போர் முடிவுக்கு வந்தது. புதுச்சேரி ஆங்கிலேயர் வசம் வீழ்ந்தது. லாலி கைது செய்யப்பட்டு பிரஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் லாலி விசாரணை செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது
55588.பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவிற்கு பின்னர் பொறுப்பேற்ற போர்த்துகீசிய ஆளுநர் யார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
அல்புகர்க்
நினோ டா குன்கா
ஆண்டானியோ டி நோரன்கா
Explanation:

அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகார்க்(1509-1515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துகீசிய பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே ஆவார்
55589.ராபர்ட் கிளைவ் முதல் முறை ஆளுநராக இருந்தபோது எந்த போரில் வெற்றி பெற்றார்?
பிளாசிப் போர்
பக்சார் போர்
வந்தவாசி போர்
ஆம்பூர் போர்
Explanation:

ராபர்ட் கிளைவ் சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் முறை ஆளுநராக இருந்தபோது (1755-1760) பிளாசிப் போரில் வெற்றிபெற்று இந்தியாவில் ஆங்கிலேய பேரரசிற்கு அடித்தளமிட்டார்
55590.பாரிசு உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
1761 இல்
1763 இல்
1765 இல்
1767 இல்
Explanation:

ஏழு ஆண்டுகள் நடைபெற்ற போரின் இறுதியில், 1763ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி அனைத்து போர்களும் முடிவுக்கு வந்தன. இதன்படி புதுச்சேரியும், சந்தன்நகரும் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வழங்கப்பட்டது
55591.1648ஆம் ஆண்டு முதலாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனியை கலைத்தவர் யார்?
நான்காம் கிறிஸ்டியன்
இரண்டாம் கிறிஸ்டியன்
பிரடெரிக்
இரண்டாம் வில்லியம் ஹென்றி
Explanation:

டேனியர்கள் தரங்கம்பாடியில் ஒரு கோட்டையையும், மசூலிப்பட்டினத்தில் ஒரு கிடங்கையும் அமைத்தனர்.பாலசோரிலும், ஹூக்ளி ஆற்றின் அருகே உள்ள பிப்ளி என்ற இடத்திலும் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன
55592.1670இல் மராத்தியர்களின் சூரத் தாக்குதலுக்கு பிறகு சிவாஜி கீழ்க்காணும் எந்த நாயக்க அரசுகளை தோற்கடித்தார்?
I. செஞ்சி
II. தஞ்சாவூர்
III. மதுரை
I, II மட்டும்
II, III மட்டும்
I, III மட்டும்
இவை அனைத்தும்
Explanation:

சூரத் தாக்குதலுக்கு பின்னர் சிவாஜி தனது கவனத்தை தென்னிந்தியாவை நோக்கி திருப்பி செஞ்சி தஞ்சாவூர் நாயக்க அரசுகளை தோற்கடித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் செஞ்சி முகலாயரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது
Share with Friends