Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Notes

ஐரோப்பியர்கள் வருகை

போர்ச்சுகீசியர்கள்

  • ஐரோப்பியர்கள் பழங்காலம் முதலே இந்தியாவுடன் கடல் வணிகம் கொண்டிருந்தனர். ஐரோப்பியர்களால் தங்கக் கிழக்கு நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் - இந்தியா, சீனா. பட்டு, மஸ்லின் கைத்தறி துணி, நறுமணப்பொருட்கள், இஞ்சி, மிளகாய், தேங்காய், மிளகு சர்க்கரை போன்றவற்றை ஏற்றுமதி செய்து கொண்டனர். ஐரோப்பிய - இந்திய வணிகம் மூன்று முக்கிய வழிகளில் நடைபெற்றது.
  • ஆப்கானிஸ்தான் --------> மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் -------> கருங்கடல் தரைப்பகுதி.
  • பாரசீகம் - சிரியா --------> மத்திய தரைக்கடல் பகுதி ------------------------------> அலெக்சாண்டிரியா.
  • அரபிக்கடல் ----------------> பாரசீக வளைகுடா ------------------------------------------> செங்கடல் பகுதி.
  • முதல் இரண்டு வழிகள் அரேபிய, பாரசீக படையெடுப்பால் தடைபட்டது.
  • கி.பி. 1453 ல் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரைக் கைப்பற்றி ஐரோப்பிய வணிக வழியை முழுவதுமாக தடை செய்தனர்.
  • ஐரோப்பியர்களுக்கு இந்திய வணிகம் மிகவும் தேவைப்பட்டது.
  • எனவே கடல் வழி மார்கத்தைக் கண்டறிவதில் முனைப்புடன் செயல்பட்டனர்.
  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி என்பவர் கடல் வழி பயணிக்கும் மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றை நிறுவினார்.
  • இதனால் இவர் மாலுமி ஹென்றி என்று அழைக்கப்பட்டார்.
  • கி.பி. 1487ம் ஆண்டு பார்த்தலோமியா டயஸ் என்பவரை ஹென்றி ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை ஓரமாக இந்தியாவிற்கு கடல் வழி மார்கத்தைக் கண்டறிய அனுப்பினார்.
  • பார்த்தலோமியா டயஸ் ஆப்ரிக்கா கண்டத்தின் தென் முனையை அடைந்தபோது கடும் புயல் காரணமாக திரும்பிச் சென்றார்.
  • எனவே அது புயல் முனை' எனவும், இந்தியாவை அடைய முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியதால் நன்னம்பிக்கை முனை எனவும் அழைக்கப்பட்டது.
  • பின்னர் வாஸ்கோடகாமா என்னும் போர்ச்சுக்கீசியர் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவை கி.பி. 1498 மே மாதம் 17ம் தேதி வந்தடைந்தார்.
  • அவர் வந்து இறங்கிய இடம் கேரளாவில் கள்ளிக் கோட்டை' பகுதி (தற்போது கோழிக் கோடு) அவரை சாமரின் என்ற மன்னர் வரவேற்று வணிகம் செய்ய அனுமதி வழங்கினார். போர்ச்சுகீசிய வணிக தலங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட முதல் ஆளுநர் பிரான்ஸிஸ்கோ டி அல்மேடா
  • இவர் அஞ்சதிவா, கண்ணூர், கொச்சி, சில்வா ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்.
  • இவர் இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல் படையை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை ஏற்படுத்தினார். இவரின் இக்கொள்கையே நீலநீர்க் கொள்கை ஆகும். 1509 ல் இவர் எகிப்தியர்களால் கொல்லப்பட்டார்.
  • அதன் பின் 2வது ஆளுநராக அல்போன்ஸா - டி - அல்புகர்க் (கி.பி. 1510 - கி.பி. 1515) நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவின் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை ஆழமாக நிலைநாட்டியவர் - அல்போன்ஸா - டி - அல்புகர்க் கி.பி. 1510 ல் பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவாவைக் கைப்பற்றி வணிக தலைநகராக்கினார்.
  • இந்துக்களோடு சுமூக உறவு கொண்டு ஐரோப்பிய - இந்திய திருமண உறவை ஆதரித்தார்.
  • பாரசீக வளைகுடா ஆர்மஸ் எனுமிடத்தில் துறைமுகம் கட்டினார். இஸ்லாமியர்களை வெறுத்தார்.
  • இவர் சதி ஒழிக்க முற்பட்டதால், வில்லியம் பெண்டிங் பிரபுவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
  • விஜயநகரப் பேரரசுடன் சுமூக உறவு கொண்டிருந்தார். கி.பி. 1515 ல் கோவாவில் காலமானார்.
  • கி.பி.1529 ல் நைநோ - டா - சுன்கா என்பவர் ஆளுநராக பதவி வகித்தார்.
  • இவர் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு கி.பி.1530 ல் இடம் மாற்றினார். கி.பி. 1534ல் சேட்கோவான் மற்றும் சிட்டா கியோன் ஆகிய பகுதிகளில் கோட்டைகளை அமைத்தார்.
  • அடுத்ததாக கி.பி. 1538 ல் கிரைகோ - டி - நெராங்கா என்பவர் ஆளுநராக பதவி வகித்தார். கி.பி.1548 ல் பீஜப்பூரைத் தோற்கடித்து கோவா வரை முன்னேறினார்.
  • போர்ச்சுகீசியர்கள் வணிகத்தலம் அமைத்த இடங்கள்:
    • மேற்குக் கடற்கரை - பம்பாய், டாமன், சால்செட்
    • கிழக்குக் கடற்கரை - ஹூக்ளி (வங்காளம்), சாந்தோம் (சென்னை )
  • கி.பி. 1565 ல் தலைக்கோட்டைப் போரில் விஜய நகர அரசு வீழ்ந்ததால் போர்ச்சுகீசியர் சரிந்தனர்.
  • கி.பி. 1631ல் முகலாய மன்னன் காசிம்கானால் ஹூக்ளியில் இருந்து போர்த்துகீசியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  • புகையிலை, அன்னாசி, பப்பாளி, முந்திரி, மிளகாய் மற்றும் உருளை ஆகிய சாகுபடிகளை போர்த்துகீசியர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.
  • கி.பி. 1663 ல் டச்சுக்காரர்களால் மலபார் கடற்கரைப்பகுதி போர்த்துகீசியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
  • எனவே டச்சுக்காரர்களின் வருகைக்குப்பின் போர்த்துக்கீசியர்களால் இந்தியாவில் நிலைக்க முடியவில்லை.

டச்சுக்காரர்கள்

  • டச்சுக்காரர்கள் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டைச் சேர்ந்தவர்கள்.
  • கி.பி. 1602 ல் டச்சு கிழக்கு இந்திய கம்பெனி (நெதர்லாந்து கிழக்கிந்திய கம்பெனி) ஆரம்பிக்கப்பட்டது.
  • டச்சுக்காரர்களுக்கு இந்தியா மீது அதிகம் நாட்டம் இல்லை.
  • எனவே நறுமணத் தீவுகளின் மீது கவனம் செலுத்தி இந்தோனேசியாவில் வணிகம் செய்தனர்.
  • கி.பி. 1605ல் இந்தியாவில் மசூலிப்பட்டினத்தில் முதல் வணிக தலத்தை அமைத்தனர்.
  • கி.பி. 1610 ம் ஆண்டு சென்னைக்கு அருகே உள்ள புலிகாட் (தற்போது பழவேற்காடு) எனுமிடத்தில் வணிகத் தலத்தை நிறுவி தங்களின் முதல் கோட்டையைக் கட்டினர்.
  • டச்சுக்காரர்கள் வணிகத்தலம் அமைத்த இடங்கள் :
    • மசூலிப்பட்டினம்
    • பரோச்
    • காரைக்கால்
    • புலிக்காட்
    • காம்பே
    • நாகப்பட்டினம்
    • அகமதாபாத்
    • சின்சுரா
    • சூரத்
    • பாட்னா
    • காசிம்பஜார்
  • கி.பி. 1623 ல் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியும் நறுமணத் தோட்டத்தின் மீது கவனம் செலுத்தி அங்கு வணிகர்களை அனுப்பியது. இதனை விரும்பாத டச்சுக்காரர்கள் அம்பாயினா' எனுமிடத்தில் ஆங்கிலேயர்களை கொன்று குவித்தனர். இது அம்பாயினா படுகொலை எனப்படுகிறது.
  • பதவி வகித்த ஆளுநர்கள்:
    • ஆக்ரா
    • கி.பி.1612 - ஹென்ட்ரிக் புரூவர் கி.பி.1619 - பட்டாவியா கி.பி.1660 - வான்வீடர் (தலைநகரை புலிகாட்டில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றினார்) கி.பி.1662 - வான்கோனஸ்
  • இறுதியாக கி.பி. 1759 ல் பெடராயுத்தத்தில் ஆங்கிலேயர்களிடம் டச்சுக்காரர்கள் தோல்வியுற்றனர்.

ஆங்கிலேயர்கள்

  • ஆங்கிலேயர்கள் (அ) பிரிட்டிஷ்காரர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். கி.பி. 1588 ம் ஆண்டு ஸ்பானிய ஆர்மடா' எனும் உலகின் மிகப் பெரிய போர்க்கப்பலை வீழ்த்தியதன் மூலம் ஐரோப்பாவின் வலிமையான நாடாக இங்கிலாந்து உருவெடுத்தது.
  • இவர்கள் கீழ்த்திசை (இந்தியா போன்ற) நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்பினர்.
  • இங்கிலாந்தின் 100 வணிகர்கள் இணைந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்ற அமைப்பை ஏற்படுத்தினர் இங்கிலாந்து நாட்டின் இளவரசி முதலாம் எலிசபத் அவர்கள் இதற்கு அனுமதியும், ஆதரவும் வழங்கி டிச 31, 1600ல் கையொப்பமிட்டார்.
  • கி.பி. 1608 ல் இங்கிலாந்து இளவரசர் முதலாம் ஜேம்ஸ் என்பவர் வில்லியம் ஹாக்கின்ஸ் என்பவரை வணிக அனுமதி பெற இந்தியாவிற்கு அனுப்பினார்.
  • 1608 ல் வில்லியம் ஹாக்கின்ஸ் அப்போதைய முகலாய அரசர் ஜஹாங்கீர் அரசவைக்கு வந்தார். ஆனால் அப்போது ஜஹாங்கீர் வணிக அனுமதி வழங்கவில்லை.
  • பின்னர் கி.பி. 1615ல் சர்தாமஸ் ரோ என்பவர் ஜஹாங்கீர் அவைக்கு வருகை புரிந்து அனுமதி பெற்றார்.
  • ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிகத் தலத்தை சூரத் நகரில் அமைத்தனர்.
  • கி.பி. 1639 ல் பிரான்ஸிஸ் டே' எனும் ஆங்கில அதிகாரி சந்திரகிரி அரசரிடம் இருந்து சென்னையை வாங்கினார்.
  • கி.பி. 1640 ல் சென்னையில் பிரான்ஸிஸ் டே' செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்.
  • இங்கிலாந்து அரசர் 2ம் சார்லஸ், போர்ச்சுகல் நாட்டு இளவரசி காதரினை மணந்ததால் சீர்வரிசையாக பம்பாய் அளிக்கப்பட்டது. எனவே 2ம் சார்லஸ் கி.பி. 1661ம் ஆண்டு 10 பவுண்டு குத்தகைக்கு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியிடம் பம்பாயை அளித்தார்.
  • கி.பி. 1696 ல் ஒளரங்கசீப்பின் அனுமதி பெற்று கொல்கத்தாவில் வணிக மையங்களை ஆங்கிலேயர்கள் அமைத்து அங்கு இங்கிலாந்து மன்னர் 3ம் வில்லியம் நினைவாக செயின்ட் வில்லியம்ஸ்' என்ற கோட்டையைக் கட்டினர்.
  • கி.பி. 1760 ல் வங்காளம், பீகார், ஒரிஸா ஆகிய குடியிருப்புகள் வில்லியம் கோட்டைக்கு மாற்றப்பட்டது. சர் சார்லஸ் அயர் என்பவர் கோட்டையின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் கி.பி.1858ம் ஆண்டு வரை நீடித்திருந்தது.

பிரெஞ்சுக்காரர்கள்

  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களே - பிரெஞ்சுக்காரர்கள்
  • பிரான்ஸ் மன்னர் 14 ம் லூயி மன்னரின் பொருளாதார ஆலோசகர் கால்பர்ட் என்பவரின் முயற்சியால் கி.பி. 1664 ம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி' ஆரம்பிக்கப்பட்டது.
  • கி.பி.1668 ல் சூரத்தில் முதல் வணிகத் தலத்தை பிரெஞ்சு கம்பெனியின் பொது இயக்குனர் பிரான்சிஸ் கரோன் என்பவர் அமைத்தார்.
  • கி.பி.1669 ல் மசூலிப் பட்டினத்தில் மெர்க்காரா என்பவரின் மூலம் இரண்டாவது வணிகத் தலத்தை நிறுவினார்.
  • கி.பி.1674 ல் சென்னைக்கு தெற்கில் உள்ள பாண்டிச்சேரி பகுதியை தஞ்சை மன்னர் 2ம் சரபோஜியிடம் இருந்து பிராங்காய் மார்ட்டின் என்பவர் வாங்கி அங்கு பிரெஞ்சு வணிகதலத்தின் தலைமையிடத்தையும் அமைத்தன. ( 1690 ல் சந்திர நாகூரிலும், 1725 ல் மாஹி பகுதியிலும், 1739 ல் காரைக்காலிலும் வாணிகத்தலம் அமைத்தனர்.
  • கி.பி.1735 ல் பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியில் முதல் ஆளுநராக டூமாஸ் என்பவர் பதவி வகித்தார்.
  • அதன்பின் கி.பி. 1742 ல் டியூப்ளே பிரெஞ்சு கவர்னரானார் (வலிமையானவர்).
  • இறுதியில் பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, மாஹி, சந்திரநாகூர், காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

டேனியர்கள்

  • டென்மார்க் நாட்டைச் சார்ந்தவர்களே டேனியர்கள்.
  • கி.பி. 1616 ல் டேனியக் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.
  • கி.பி. 1620 ல் நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் முதல் வணிகத்தலத்தை நிறுவினார்.
  • கி.பி. 1676 ல் வங்காளத்தல் சீராம்பூர் எனுமிடத்தில் தலைமை வணிக தலத்தை அமைத்தனர்.
  • பின்னர் வணிக தலங்களை நிர்வகிக்க இயலாமல் கி.பி. 1845ல் அனைத்துப் பகுதிகளையும் ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டு நாடு திரும்பினர்.

நினைவில் கொள்ள

போர்ச்சுக்கீசியர்-போர்ச்சுக்கல்
டச்சுக்காரர்கள்-ஹாலந்து (நெதர்லாந்து)
இங்கிலாந்து-ஆங்கிலேயர்கள்
டேனியர்கள்-டென்மார்க்
பிரெஞ்சுக்காரர்கள்-பிரான்ஸ்
டச்சு கிழக்கிந்திய கம்பெனி-1602
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி-1600
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி-1664
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி-1616
புனித ஜார்ஜ் கோட்டை-சென்னை (1640)
புனித வில்லியம் கோட்டை-கொல்கத்தா (1699)
புனித டேவிட் கோட்டை-கடலூர்

Share with Friends