Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Prepare QA Page: 2
55518.தமிழ் உரைநடையின் தந்தை என கருதப்படுபவர் கீழ்க்கண்டவரில் யார்?
ஹென்ரிக்ஸ்
லின்சோடென்
ராபர்டோ டி நொபிலி
நினோ டா குன்கா
Explanation:

போர்த்துக்கீசியரின் குடியேற்றங்களுக்கு பிறகு சேசு சபையைச் சார்ந்த சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். அவர்களில் ராபர்டோ டி நொபிலி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார். இவர் தமிழ் உரைநடையின் தந்தை என கருதப்படுகிறார்
55519.தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஹென்ரிக்ஸ்
லின்சோடென்
ராபர்டோ ட நொபிலி
நினோ டா குன்கா
Explanation:

ஹென்ரிக்ஸ் என்பவர் போர்ச்சுகல் நாட்டு யூதர் ஆவார். இவர் சேசு சபையின் சமயப் பரப்பாளராக இந்தியா வந்தார். இவர் தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
55520.1542இல் கோவாவிற்கு வருகை புரிந்த போர்த்துக்கீசிய கிறிஸ்தவ சபையை சார்ந்தவர் யார்?
புனித டேவிட்
புனித பிரான்சிஸ் சேவியர்
புனித மேத்யூஸ்
புனித தாமஸ் சேவியர்
Explanation:

சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542 இல் கோவாவிற்கு வந்தார். மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காக தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்
55521.டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு எது?
1600 இல்
1601 இல்
1602 இல்
1603 இல்
Explanation:

1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது. புதிதாக உருவாகி இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது
55522.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. சென்னை மாகாணப் பகுதிகளில் 1628 முதல் 1750 ஆம் ஆண்டுகளிடையே 10 பஞ்சங்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் அவை பரந்து விரிந்தனவாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்தும் இருந்தன.
II. பஞ்சங்களினால் கிராமப்புற ஏழை மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களை தள்ளியது.
III. சோழ மண்டல பகுதிகளில் இருந்து படவியாவிற்கு அனுப்பப்பட்ட சரக்குகளுடன் வழக்கமாக அனுப்பப்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்கள் டச்சு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
I, III மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

ஆங்கிலேயர் நடுவுநிலைமை தவறி சார்பு தன்மையுடன் இருந்தார்கள் என்று நினைத்தாலும், பிறருடைய கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் முழுமையான அளவுகோல்களைக் கொண்டு கணித்தாலும் அடிப்படை தொழிலாளர்களின் ஊதியமும் வாழ்க்கை தரமும் இந்நிலையில் இருந்தது என்பது உண்மை.
55523.16 மற்றும் 17 ஆம் நூண்டுகளில் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் நியமிக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் என்ன?
திவான்
நிதி ராஜ்
சராப்
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

பரந்து விரிந்த வணிகத்தை மேம்படுத்த வணிக நிறுவனங்களும் நன்கு வளர்ந்திருந்தன. பல்வகைப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததினால் அவற்றின் தூய்மை நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் சராப் எனப்பட்ட பணம் மாற்றுவோரும் இருந்தனர்
55524.ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையை கட்டியவர்கள் யார்?
ஆங்கிலேயர்கள்
போர்த்துக்கீசியர்கள்
டச்சுக்காரர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
Explanation:

1502 ஆம் ஆண்டு முதல் பழவேற்காட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களால் அகற்றப்பட்டனர். சென்னை நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஜெல்ட்ரியா என்னும் பாதுகாப்பு கோட்டையைக் கட்டினர்.
55525.டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டில் எந்த இடத்தில் கோட்டையை எழுப்பினர்?
பழவேற்காடு
கோழிக்கோடு
கண்ணூர்
மசூலிப்பட்டினம்
Explanation:

1605 இல் மசூலிப்பட்டினம் தங்கள் அதிகாரத்தை நிறுவிய டச்சுக்காரர்கள், 1610ஆம் ஆண்டில் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை நிறுவினர்.
55526.டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமை இடமாக இருந்த இடம் எது?
மசூலிப்பட்டினம்
பழவேற்காடு
மதராஸ்
தஞ்சாவூர்
Explanation:

பழவேற்காடு, டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியின் தலைமையிடம் ஆயிற்று. பழவேற்காட்டில் இருந்து மேலைநாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன
55527.எந்தப் போர்த்துகீசிய ஆளுநரின் காலத்தில் முகலாய அரசர் அக்பர் குஜராத்தில் உள்ள காம்பேவிற்கு வந்தார்?
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
அல்புகர்க்
நினோ டா குன்கா
ஆண்டானியோ டி நோரன்கா
Explanation:

1571ஆம் ஆண்டு, டி நொரன்காவின் காலத்தில்தான் முகலாய அரசர் அக்பர் குஜராத்தில் உள்ள காம்பேவிற்கு வந்தார். அப்போதுதான் போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது
55528.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழில் கூடம் ஒன்றை நிறுவினர்.
கூற்று 2 - டச்சுக்காரர்கள் காலத்தில் வங்காளத்தில் இருந்தும் குடியேற்ற பகுதிகளான தேங்காய்ப்பட்டினம் காரைக்கால் ஆகியவற்றிலிருந்தும் அடிமைகள் பலவேற்காட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்.
கூற்று 3 - அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர்கள் சென்னையின் தரகர்களை நியமித்தனர்
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

டச்சுக்காரர்கள் காலத்தில் பஞ்சமும் வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின. இதனைத் தொடர்ந்து பிஜப்பூர் சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பு தஞ்சாவூரின் வளமான வேளாண் நிலங்களை பாழ்படுத்தியதால் மேலும் பல மக்கள் அடிமைகள் ஆயினர்
55529.பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்றிய ஆண்டு எது?
1661 ஆம் ஆண்டு
1662 ஆம் ஆண்டு
1663 ஆம் ஆண்டு
1664 ஆம் ஆண்டு
Explanation:

இந்தியாவுடனான வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர்கள் 1527ஆம் ஆண்டிலேயே முயற்சிகள் மேற்கொண்டனர். போர்த்துக்கீசியர்களாளும் டச்சுக்காரர்களும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர்கள், 1664 இல் உருவாக்கிய பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் வணிக செயல்பாடுகளை தொடங்கினர்
55530.கீழ்க்காணும் எந்த கிழக்கிந்திய கம்பெனி தனியார் வணிக நிறுவனமாக அல்லாமல் அரசின் திட்டமாக இந்தியாவில் உதித்தது?
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
டச்சுக்காரர் கிழக்கிந்திய கம்பெனி
போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனி
பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி
Explanation:

ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அரசர் பதினான்காம் லூயியின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதி அமைச்சரான கோல்பேர், பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்
55531._____________ என்ற பெயரில் போர்த்துக்கீசியர் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதாக கூறினர்.
கார்பஸ்
கார்ட்டஸ்
செப்டஸ்
செக்டஸ்
Explanation:

கார்ட்டஸ்(Cartaz) என்ற பெயரில் போர்த்துக்கீசியர் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப்போவதாக போர்த்துக்கீசியர் பயமுறுத்துவர். இந்த முறையில் போர்த்துக்கீசியர் வணிகர்களிடம் இருந்து பணம் பறித்தனர்
55532.1646ஆம் ஆண்டு சோழமண்டல பகுதிகளும் ஊடுருவிய சுல்தானிய படை எது?
அகமது நகர்
பிஜபூர்
கோல்கொண்டா
ஹைதராபாத்
Explanation:

1646இல் சோழமண்டல பகுதிகளை ஊடுருவிய கோல்கொண்டாவின் படைகள் பழவேற்காட்டிற்கும் சாந்தோமிற்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.
55533.இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர் எப்போது முகலாய பேரரசர் அவுரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்றார்?
செப் 4, 1665
செப் 4, 1666
செப் 4, 1667
செப் 4, 1668
Explanation:

1602 ஆம் ஆண்டு பிரெஞ்சு வணிகர்கள் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கரை அடைந்தனர். மடகாஸ்கரை தங்களின் காலனி ஆதிக்க பகுதியாக கொண்டிருந்தாலும், 1674இல் கடற்கரையோரம் உள்ள ஒரு சிறு வணிக முகாமை தவிர ஏனைய இடங்களை கைவிட நேர்ந்தது
55534.டச்சுக்காரர்களை விரட்டுவதற்கு பிரஞ்சுக்காரர்கள் யாரிடம் துணை கோரினர்?
பிஜப்பூர் சுல்தான்
கோல்கொண்டா சுல்தான்
அகமது நகர் சுல்தான்
ஐதராபாத் சுல்தான்
Explanation:

டச்சுக்காரர்களுக்கு எதிராக பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் ஷேர்கான் லோடியின் உதவியை பிரஞ்சுக்காரர்கள் நாடினர். பிஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு டச்சுக்காரர் நட்பு கொண்டனர்
55535.பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் புதுச்சேரியை எந்த ஆண்டு கைப்பற்றினர்?
1690 இல்
1693 இல்
1696 இல்
1699 இல்
Explanation:

பிரான்சும், ஹாலந்தும் 1672 இல் இருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்தில் இருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன
55536.பிரஞ்சுக்காரர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாக __________ இல் மாகியையும், __________இல் காரைக்காலையும் பெற்றனர்.
1723, 1735
1725, 1737
1727, 1739
1725, 1739
Explanation:

வங்காள பகுதிகளில் காசிம் பஜார், சந்தன் நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களையும் நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர்
55537.கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - 1608 ஆம் ஆண்டு வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் வணிக உரிமைகளைப் பெற்றனர்.
கூற்று 2 - வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு மனித உரிமை அளித்தவர் முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநரும் ஆன ஷா சுஜா என்பவராவார்.
கூற்று 3 - 1685இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சுதனுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தா ஆயிற்று
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

1690 இல் கிழக்கிந்திய கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696இல் அங்கு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கோட்டை கட்டியது.
Share with Friends