Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Prepare QA Page: 4
55558.இரண்டாம் கர்நாடக போருக்குப் பின்னர் புதுச்சேரி உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
1753 இல்
1755 இல்
1757 இல்
1759 இல்
Explanation:

ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்பொருளும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலணிகள் ஊரில் ஈடுபடுவதை கண்டனம் செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் துய்ப்ளேவை திரும்ப அழைத்துக் கொண்டது. 1755 இல் ஆங்கிலேயருடன் புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது
55559.ராபர்ட் கிளைவ் எவ்வாறு இறந்தார்?
சுடப்பட்டு இறந்தார்
தூக்கில் இடப்பட்டு இறந்தார்
தற்கொலை செய்து கொண்டார்
போரின் போது இறந்தார்
Explanation:

ராபர்ட் கிளைவ் இங்கிலாந்து திரும்பிய போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற விசாரணையை எதிர்கொண்டார். ராபர்ட் கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் தற்கொலை செய்து கொண்டார்
55560.புனித வில்லியம் கோட்டை எப்போது மாகாண தலைமையிடம் ஆயிற்று?
1760 இல்
1765 இல்
1770 இல்
1775 இல்
Explanation:

1698 ஆம் ஆண்டு சுதனுதி, காளிகாட்டா, கோவிந்த பூர் ஆகிய கிராமங்களில் ஜமீன்தாரி உரிமையை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி பெற்றது. இதற்கு பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூபாய் 1200 செலுத்தியது. கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1870இல் மாகாணத்தின் தலைமையிடம் ஆயிற்று
55561.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - முதல் கர்நாடகப் போரின் போது புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் துய்ப்பிளே ஆவார்.
கூற்று 2 - முதல் கர்நாடகப் போரின் போது ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்றவர் பைடன் ஆவார்.
கூற்று 3 - முதல் கர்நாடகப் போர் 1746ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் நாள் நிகழ்ந்தது.
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

இப்போரில் தோல்வியடைந்த பைடன் ( ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்றவர்) இங்கிலாந்தில் இருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹுக்ளிக்கு பின்வாங்கினார்
55562.முதல் கர்நாடகப் போரில் வெற்றி பெற்ற பிரஞ்ச் கப்பற்படை சென்னையை எந்த ஆண்டு கைப்பற்றியது?
1746ஆம் ஆண்டு, செப் 6
1746ஆம் ஆண்டு, செப் 16
1746ஆம் ஆண்டு, செப் 26
1746ஆம் ஆண்டு, செப் 30
Explanation:

முதல் கர்நாடகப் போரில் வெற்றி பெற்ற பிரெஞ்சு கப்பல் படை பாதுகாப்பு பற்றி இருந்த சென்னையை 1746 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் கைப்பற்றியது. சென்னை ஆளுநர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். எனினும் அவர் ஆற்காடு நவாப் அன்வாருதீனின் உதவியை நாடினார்
55563.முதல் கர்நாடகப் போரின் போது நடந்தவற்றுள் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்பிளே, ஆற்காடு நவாபிடம் ஒரு வார காலத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் நவாபின் கொடியை பறக்க விட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விடுவதாக உறுதிமொழி அளித்தார்.
கூற்று 2 - பிரெஞ்சுக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார்.
கூற்று 3 - 1749ஆம் ஆண்டு ஐ லா சபேல் என்ற உடன்படிக்கை பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது.
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

ஐ லா சபேல் (Aix La Chapelle) என்னும் உடன்படிக்கை பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஐரோப்பாவில் 1748இல் கையெழுத்தானது
55564.டச்சுக்காரர்கள் 1641ஆம் ஆண்டு எந்த இடத்தை போர்த்துக்கீசியர்களிடமிருந்து கைப்பற்றினர்?
இலங்கை
மலாக்கா
சுமத்ரா
மாஹே
Explanation:

டச்சுக்காரர்கள் மலாக்காவை போர்த்துக்கீசியர்கள் இடமிருந்து 1641 ஆம் ஆண்டு கைப்பற்றினர். மேலும் 1658 ஆம் ஆண்டு இலங்கையை தங்கள் வசம் ஒப்படைக்க போர்த்துக்கீசியரை கட்டாயப்படுத்தினர். நறுமண தீவுகளில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர்
55565.ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா மறைவுக்குப் பின்னர் கீழ்காணும் எந்த மூவர் இடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது?
I. ஆற்காடு நவாப்.
II. கர்நாடக நவாப்
III. ஹைதராபாத் நிஜாம்
IV. பிரெஞ்சுக்காரர்
I, II, III மூவரிடையே
II, III, IV மூவரிடையே
I, III, IV மூவரிடையே
எல்லாமே தவறு
Explanation:

ஐதராபாத் நிஜாம் ஆசப்ஜா, மறைவுக்குப் பின்னர் அவரது பேரன் முசாபர் ஜங்க் அடுத்த நிஜமாக ஆவதற்கு துய்ப்ளெ ஆதரவை தெரிவித்தார். ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தாசாகிப்பை ஆதரித்தார். பிரெஞ்சுக்காரர், நிஜாம். கர்நாடக நவாப் ஆகியோரிடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது
55566.கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் கொல்லப்பட்ட ஆற்காடு நவாப்?
நவாப் சந்தா சாகிப்
நவாப் அக்பருதீன்
நவாப் அன்வருதீன்
நவாப் முகம்மது அலி கான்
Explanation:

பிரெஞ்சுக்காரர் இன் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் ஹைதராபாத் அரியணைக்கு போட்டியாளரான நாஸிர் ஜங்கையும், கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாஸுதீன் கொல்லப்பட்ட பின்னர் அரியணைக்கு முகமது அலியையும் ஆதரித்தனர்
55567.ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா 1748இல் இறந்த போது, அவருடைய மகன் முசாபர் ஜங் அடுத்த நிஜமாக வருவதற்கு ஆதரவு அளித்தவர் யார்?
துய்ப்ளெ
முகமது அலி
கர்நாடக நவாப்
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

முதலாம் கர்நாடகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைதி நிலவியது. ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டனர்.
55568.முசாபர் ஜங்க் ஹைதராபாத் நிஜமாக எந்த ஆண்டு பொறுப்பேற்றார்?
1750 இல்
1751 இல்
1752 இல்
1753 இல்
Explanation:

ஆம்பூர் போரை தொடர்ந்து வெற்றிபெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சு படைகளால் நாஸிர் ஜங் கொல்லப்பட்டார். முஜாபர் ஜங் 1750 டிசம்பரில் ஐதராபாத்தின் நிஜமாக ஆக்கப்பட்டார்
55569.ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
1750 இல்
1751 இல்
1752 இல்
1753 இல்
Explanation:

ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முஜாபர் ஜங் கர்நாடக அரியணைக்கு உரிமை கோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக்காரர் படைகளின் உதவியோடு அன்வருதீன் படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். முடிவில் அன்வர்தீன் கொல்லப்பட்டார்
55570.ஆம்பூர் போருக்குப் பின்னர் நடந்தவற்றுள் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
I. முசாபர் ஜங் கொல்லப்பட்டார், உடனடியாக நாஸிர் ஜங்கின் சகோதரனான சலாபத் ஜங் என்பாரை பிரெஞ்சு தளபதி புஸ்ஸி அரியணை ஏற்றினார்.
II. நிஜாம் இடம் இருந்தும், ஆற்காடு நவாப்பிடம் இருந்தும் துய்ப்பிளே பெருமளவு பலத்தையும் நிலங்களையும் பெற்றார்.
III. சந்தாசாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியை கைது செய்யவும் நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியை கைப்பற்ற முடிவு செய்தார்.
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
I, III மட்டும் சரி
எல்லாமே சரி
Explanation:

ஆம்பூர் போரில் நவாப் அன்வருதீன் கொல்லப்பட்ட பின்னர் அரியணைக்கு முகமது அலியை ஆங்கிலேயர்கள் ஆதரித்தனர். முகமது அலி நவாப் அன்வாருதீனின் மகன் ஆவார். ஆம்பூர் போரின் போது, இவர் திருச்சிக்கு தப்பிச் சென்றார்
55571.பிரஞ்சுக்காரர்களும், நவாபும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவர் யார்?
துய்ப்பிளே
ராபர்ட் கிளைவ்
வில்லியம் பெண்டிங்
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியை கைப்பற்ற வேண்டும் என துய்ப்ளெவும் உறுதி பூண்டிருந்தார். சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர். முகமது அலி 5000 படை வீரர்களையும் தனக்கு உதவியாக 600க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டும் கொண்டிருந்தார்
55572.பிளாசிப் போருக்குப் பின்னர் வங்காள நவாப் ஆனவர் யார்?
சிராஜ் உத் தௌலா
மிர்சாபர்
மீர் காசிம் நவாப்
இவர்கள் யாரும் அல்ல
Explanation:

பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழுவை வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. சிராஜ்-உத்-தௌலா அதற்கு பதிலாக அவருக்கு துரோகம் இழைத்த மீர் ஜாபர் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். பின்னர் மிர்ஜாபருக்கு பதிலாக மீர் காசிம் நவாப் ஆக்கப்பட்டார்
55573.ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் எந்த ஆண்டு காலமானார்?
1740 இல்
1741 இல்
1742 இல்
1743 இல்
Explanation:

ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரசா அரச பதவியை ஏற்றார். மரிய தெரசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரியதெராசாவுக்கு எதிராக கைகோர்த்தது
55574.சந்தாசாகிப் எந்த போரின் போது கொல்லப்பட்டார்?
வேலூர் போர்
காவேரிப்பாக்கம் போர்
ஆம்பூர் போர்
ஆற்காடு போர்
Explanation:

ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராட்டிய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரஞ்சு மற்றும் ஆற்காடு படைகளை எதிர் கொண்டனர். எனினும் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில் சந்தாசாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார். முகமது அலி எதிர்ப்பு ஏதும் இல்லாமல் கர்நாடகத்தின் அரசரானார்
55575.மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் எது?
1756-1765
1756-1763
1755-1765
1753-1763
Explanation:

ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ஏழு ஆண்டு போரின் விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும். உலகளாவிய இம்மோதலில் முக்கிய எதிரிகளான இங்கிலாந்தும் பிரான்சும் போரிட்டன. இப்போ வட அமெரிக்காவிலும் மேற்குஆப்பிரிக்காவிலும் நடைபெற்றது
55576.இருட்டு அறை துயரம் (Black Hole Tragedy) என ஆங்கிலேய ஆவணங்களில் சுட்டும் நிகழ்வு நடந்த ஆண்டு எது?
ஜூன், 1756
ஜூன், 1757
ஜூன், 1758
ஜூன், 1759
Explanation:

வங்காள நவாப் பால் கைது செய்யப்பட்ட 146 ஐரோப்பியர் 18க்கு 15அடி அளவுள்ள ஒரு அறையில் அழைக்கப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் மட்டுமே உயிர் பிழைக்க மற்றவர்கள் மூச்சு திணறி இறந்து போனதாகவும் பழி சொல்லப்பட்டது.
55577.1697ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் தரப்பட்டது?
பேட்ரிக் உடன்படிக்கை
ரிஸ்விக் உடன்படிக்கை
மார்கஸ் உடன்படிக்கை
இது எதுவும் அல்ல
Explanation:

1697ஆம் ஆண்டு ரிஸ்விக் உடன்படிக்கையின் படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் தரப்பட்டது.இருந்த போதும் 1699ஆம் ஆண்டில் தான் அது பிரஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706இல் பிரான்சிஸ் மார்டின் இயற்கை எய்தும் வரை அதன் ஆளுநராக இருந்தார்
Share with Friends