ஆம்பூர் போருக்குப் பின்னர் நடந்தவற்றுள் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
I. முசாபர் ஜங் கொல்லப்பட்டார், உடனடியாக நாஸிர் ஜங்கின் சகோதரனான சலாபத் ஜங் என்பாரை பிரெஞ்சு தளபதி புஸ்ஸி அரியணை ஏற்றினார்.
II. நிஜாம் இடம் இருந்தும், ஆற்காடு நவாப்பிடம் இருந்தும் துய்ப்பிளே பெருமளவு பலத்தையும் நிலங்களையும் பெற்றார்.
III. சந்தாசாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியை கைது செய்யவும் நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியை கைப்பற்ற முடிவு செய்தார்.
ஆம்பூர் போரில் நவாப் அன்வருதீன் கொல்லப்பட்ட பின்னர் அரியணைக்கு முகமது அலியை ஆங்கிலேயர்கள் ஆதரித்தனர். முகமது அலி நவாப் அன்வாருதீனின் மகன் ஆவார். ஆம்பூர் போரின் போது, இவர் திருச்சிக்கு தப்பிச் சென்றார்