Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் சராசரி (Average) தேர்வு (Online Test)

47521.அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45. அந்த முழுக்களைக் காண்க.
12, 13, 14
10, 11, 12
14, 15, 16
16, 17, 18
Explanation:
முதல் முழு எண் X என்க.
இரண்டாவது எண் = x + 1
மூன்றாவது எண் = x + 1 + 1 = x + 2
அதன் கூடுதல் =X + (x + 1) + (x + 2) = 45
3x + 3 = 45
3x = 42
X = 14
ஆகவே அம்மூன்று முழுக்கள், x = 14, X + 1 = 15 மற்றும் X + 2 = 16
47522.100 குழந்தைகளின் சராசரி வயது 10 வருடம். அவர்களில் 25 பேர்களின் சராசரி வயது 8 வருடம். மற்றொரு 65 பேர்களின் சராசரி வயது 11 வருடம். மீதமுள்ள 10 குழந்தைகளின் சராசரி வயது காண்க.
9
6.8
7
8.5
Explanation:
100 குழந்தைகளின் வயதில் கூடுதல் = 100 * 10 = 1000
25 குழந்தைகளின் கூடுதல் = 25 * 8 = 200
65 குழந்தைகளின் வயதின் கூடுதல் = 65 * 11 =715
மீதமுள்ள 10 குழந்தைகளின் வயதின் கூடுதல் = 1000 - (200 + 715) = 85
சராசரி = 85 / 10 = 8.5
47523.அடுத்தடுத்து வரும் நான்கு இரட்டைப்படை எண்களின் சராசரி 27. ஆகவே, அதில் பெரிய எண்ணைக் காண்க.
24
12
18
30
Explanation:
அடுத்தடுத்து வரும் நான்கு இரட்டைப்படை எண்களை X, X + 2 , x + 4 மற்றும் X + 6 எனக் கொள்க.
( x + (x + 2) + (x + 4) + (x + 6)) / 4 = 27
(4x + 12) / 4 = 27
x + 3 = 27
X = 27 - 3
X = 24
பெரிய எண் = x + 6 = 24 + 6 = 30
47524.25 தேர்வு முடிவுகளின் சராசரி 18 ஆகும். அதில் முதல் பன்னிரெண்டு முடிவுகளின் சராசரி 14 மற்றும் கடைசி பன்னிரெண்டு முடிவுகளின் சராசரி 17. எனில் பதிமூன்றாவது தேர்வு முடிவினைக் காண்க.
50
78
45
90
Explanation:
பதிமூன்றாவது தேர்வு முடிவு = 25 தேர்வு முடிவுகளின் கூடுதல் - 24 தேர்வு முடிவுகளின் கூடுதல்
= { (18 * 25) - [(14 * 12) + ( 17 * 12 )] }
= 450 - (168 - 204)
= 450 - 372
= 78
47525.ஒரு வகுப்பிலுள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும்போது ஒரு மதிப்பு 150 செ.மீ.க்கு பதிலாக 160செ.மீ. என்று குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரத்தைக் காண்க.
100 செ.மீ
165 செ.மீ
135 செ.மீ
170 செ.மீ
Explanation:
சராசரி உயரம் = 166 செ.மீ மற்றும் n = 10
சராசரி = 10 மாணவர்களின் உயரம் / மாணவர்கள் எண்ணிக்கை
166 = 10 மாணவர்களின் உயரம் / 10
10 மாணவர்களின் உயரம் (தவறான கூடுதல்) = 1660
சரியான கூடுதல் = தவறான கூடுதல் - தவறான மதிப்பு + சரியான மதிப்பு
= 1660 - 160 + 150 = 1650
சரியான சராசரி உயரம் = 1650 / 10 = 165 செ.மீ
Share with Friends