Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் சுருக்குதல் (Simplification) தேர்வு (Online Test)

47367.ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 510 வாசகர்களும், மற்ற தினங்களில் 240 வாசகர்களும் வருகின்றனர் எனில், 30 நாட்கள் கொண்ட ஒரு மாதமானது ஞாயிறு என்ற தினத்தில் தொடங்கினால் அம்மாதம் நூலகத்திற்கு வந்த மொத்த வாசகர்களின் சராசரி எவ்வளவு?
164
285
127
315
Explanation:
ஒரு மாதம் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கினால் அம்மாதத்தில் 5 ஞாயிற்றுகிழமை வரும்.
ஆகவே, = ( (510 * 5) + (240 * 25) ) / 30 = 8550 / 30
நூலகத்திற்கு வந்த மொத்த வாசகர்களின் சராசரி = 285
47368.ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாகும். அதில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். ஆகவே ஒருவர் மணிக்கு ரூ 2.40 யை தினமும் கட்டாயமாக செய்யும் வேலைக்கும், மணிக்கு ரூ 3.20 யை overtime ல் செய்யக்கூடிய வேலைக்கும் பெறுகிறார். அவர் நான்கு வாரத்தில் ரூ.432 யை அவர் எத்தனை மணி நேரம் வேலை செய்திருப்பார்?
175 மணி நேரம்
150 மணி நேரம்
125 மணி நேரம்
200 மணி நேரம்
Explanation:
ஒருவர் Overtime ல் செய்த வேலை நேரத்தினை x என்க.
அவர் 4 வாரத்தில் கட்டாயமாக வேலை செய்த நேரம் = (5 * 4 *8) = 160
160 * 2.40 + X * 3.20 = 432
3.20x + 384 = 432
3.20x = 432 - 384
3.20x = 48
X = 48/3.20
X = 15
ஆகவே, 4 வாரத்தில் அவர் செய்த மொத்த வேலை நேரம் = 160 + 15 = 175 மணி நேரம்
47369.p - q = 3, $p^2 + q^2$ = 29 எனில் pq வின் மதிப்பினைக் காண்க.
20
10
15
25
Explanation:
2ab =$(a^2 + b^2)-(a - b)^2$
2pq = 29 - 9 = 20
2pq = 20
pq = 20/2
pq = 10
47370.ரூ.312 ஆனது 100 மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது எனில், ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ 3.60 ம், ஒவ்வொரு மாணவிக்கும் ரூ 2.40 ம் கிடைக்கிறது. ஆகவே மொத்த மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.
65
45
40 பேர்
25
Explanation:
மொத்த மாணவர்கள் எண்ணிக்கை = x எனக் கொள்க.
ஆகவே, மொத்த மாணவிகளின் எண்ணிக்கை = 100 - X கொள்வோம்.
3.60x + 2.40 (100 - x) = 312
3.60x + 240 - 2.40x = 312
3.60x - 2.40x = 312 - 240
1.20x = 72 X = 72/1.20
X = 60
ஆகவே மொத்த மாணவிகளின் எண்ணிக்கை (100 - x) = 100 - 60
மொத்த மாணவிகளின் எண்ணிக்கை = 40 பேர்
47371.X : y என்பதன் மதிப்பு 1 : 3 ஆகும். ஆகவே, (7x+3y) : (2x+y) என்பதன் மதிப்பினைக் காண்க.
6 : 8
16 : 5
5 : 16
17 : 15
Explanation:
X : y = 1 : 3
X =1, y = 3
= (7x+3y) / (2x+y)
= ( 7(1) + 3(3) ) / ( 2(1) + 3)
= (7 + 9) / (2 + 3)
= 16 / 5
(7x+3y) : (2x+y) ன் மதிப்பு = 16 : 5
Share with Friends