Easy Tutorial
For Competitive Exams

Science QA INM - தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர் Notes (12th Std New Book)

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

  • காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார்.
  • கோபால கிருஷ்ண கோகலேவை தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார்.
  • அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.

காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

சம்பரான் இயக்கம் (1917)

  • பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும்.
  • இதனை ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.
  • காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • பின் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட் டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்ப ட்டனர்.
  • ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்ப டியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.

ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாத்தில் காந்தியடிகளின் உண்ணாவிரதம் (1918)

  • மிகக் குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததை அடுத்து 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
  • இறுதியில் தொழிலாளர்களின்கோரிக்கையைஏற்கவேண்டிய நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது.

கேதா போராட்டம் (1918)

  • கேதா மாவட்டம் - அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர்.
  • ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டனர்.
  • ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, எதிர்த்து போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.

  • இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே 1905-ல் நிறுவினார் .
  • பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இதுவாகும்.
  • அமைப்புக்குத் தலைமையகம் மகாராஷ்டிராவின் பூனாவிலும், சென்னை (மதராஸ்), மும்பை (பம்பாய்), அலகாபாத் மற்றும் நாக்பூரில் முக்கிய கிளைகளும் இருந்தன.

மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்

  • இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் எட்வின் மாண்டேகு-வும் அரசப்பிரதிநிதி (வைசிராய்) செம்ஸ்ஃபோர்டும் இந்தியாவுக்கான அரசியல்சாசன மாற்றங்களை அறிவித்தனர்.
  • அவையே பின்னர் 1919இன் இந்திய கவுன்சில்கள் சட்டம் என்று அழைக்கப்பட்டன.
  • மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரிவுபடுத்த இந்தச் சட்டம் வகைசெய்தது.
  • மத்திய சட்டப்பேரவையில் இருந்த 144 மொத்த உறுப்பினர்களில் 41 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.
  • மாநிலங்களவை என்றழைக்கப்பட்ட மேலவையில் மொத்தம் இருந்த 60 உறுப்பினர்களில் 26 நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
  • இந்தத் திட்டம் (மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் ) 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
  • 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பா யில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.
  • சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான இந்தக் குழு பெரும்பான்மைக் கருத்தை எதிர்த்ததோடு இந்திய லிபரல் (தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் தனது சொந்தக் கட்சியைத் தொடங்க காங்கிரசுக்கு வழியமைத்தது.

பிராமணரல்லாதார் இயக்கம்

  • வங்காளத்திலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும்தொடங்கப்பட்ட நாமசூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் மற்றும் தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின.
  • 1872ஆம் ஆண்டு ஜோதி ராவ் பூலேவின் புத்தகம் குலாம்கிரி என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது.
  • அவரது அமைப்பு, சத்யசோதக் சமாஜ், பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்துஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
  • பிராமணர்கள் ஆதிக்கத்திற்கு அதிகக் காரணம் அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களில் 72 சதவீதம் பட்டாதாரிகளாய் இருந்தனர்.
  • பம்பாய் மாகாண பிராமணேதரா பரிஷத், மதராஸ் மாகாணநீதிக்கட்சி ஆகியவைகளுக்கு இது குறைந்தபட்சம் 1930 வரை பொருந்தியது. தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் அம்பேத்கர் தலைமையிலும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையிலும் செயல்பட்டன.
57993.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
சுயராஜ்யக் கட்சி - C. R. தாஸ்
பார்வர்டு பிளாக் -சுபாஷ் சந்திரபோஸ்
முஸ்லீம் லீக் கட்சி- நவாப் சலிமுல்லாகான்.
நீதிக்கட்சி-பெரியார் ஈ.வே.ரா.

ஒத்துழையாமை இயக்கம்

ரௌலட் சட்டம்

  • 1919இல் இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியன ஒரே ஆண்டில் இயற்றப்பட்டன.
  • மத்திய சட்டப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
  • எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரமளித்தது.
  • சத்தியாகிரகம் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

  • 1919 ஏப்ரல் 13இல், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக் களத்தில் குழுமியிருந்தனர்.
  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுக்கு அரசு தகவல்களின் படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்தபோதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும்.
  • இந்த கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல பிரபலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் துறந்தனர்.
  • ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது.

  • ஜாலியன் வாலாபாக் படுகொலைக் குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தார்.
  • 1919 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) அனுப்பிய எதிர்ப்புக் கடிதத்தில் தாகூர் இவ்வாறு எழுதினார்.

  • கால்சா ஆதரவற்றோர்காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின்பருவ இளைஞரான உதம் சிங் இந்த நிகழ்வை தனது கண்களால் கண்டார்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை களுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30இல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம் சிங் படுகொலை செய்தார்.
  • லண்டனின் பெண்டோன்வில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்.

  • மௌலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி என்ற சகோதரர்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.

ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம்

  • கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப் பின்னர் இந்தப் போராட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • மொழிசார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
  • காங்கிரஸின் அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாகப் பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று 4 அணா (25 பைசா) என்கிற குறைவான கட்டணத்தில் கிராமத்தினரைக் காங்கிரஸில் சேர்க்கவேண்டும்.

காந்தியடிகளின் தலைமைஏற்படுத்தியத் தாக்கம்

  • இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்ைத வன்முறையற்ற வகையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுத்தருவதாக காந்தியடிகள் உறுதி கூறினார்.
  • சிராலா-பெராலாப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்துக் கூட்டம் கூட்டமாக நகரங்களைக் காலி செய்து வெளியேறினர்.
  • சி. இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது.
  • அரசு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மீட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பர்தோலியில் வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப்போவதாக காந்தியடிகள் பிப்ரவரி 1922இல் அறிவித்தார்.

சௌரி சௌரா சம்பவம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுதல்

  • கரையோர ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்.
  • மலபாரில் முஸ்லிம் (மாப்பிள்ளை) விவசாயிகள் ஆயுதமேந்தி உயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
  • 1922 பிப்ரவரி 5இல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அைத எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர்.
  • காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
  • கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற காந்தியடிகள் பற்றி ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படியாக ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.
  • துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம் தேவையற்றுப் போனது.

சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள்

  • சித்தரஞ்சன் தாஸ் (C.R தாஸ்), மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர்.
  • தீவிர அரசியலுக்குத் திரும்பவேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
  • சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார்.
  • இந்தக் குழுவுக்கு இராஜாஜி, வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர்.
  • இவர்கள் மாற்றம் விரும்பாதோர் (No-changers) என்று அழைக்கப்பட்டனர்.
  • மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரஸின் ஒரு பகுதியாகத் தொடங்கினார்கள்.
  • மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ய கட்சி சிறப்பாகப் பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது.
  • மதவாதப் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
9293.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ்
ஜாலியன் வாலாபாக்துயரம் - ஹண்டர் கமிட்டி
சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
மதுவிலக்கு - வ.உ. சிதம்பரனார்

இடதுசாரி இயக்கம்

  • காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் உள்நாட் டில் முதலாளிகள் நடத்திய சுரண்டல் இரண்டுக்கும் எதிராகச் சண்டையிடவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
  • நவஜவான் பாரத் சபை, இந்துஸ்தான் குடியரசு அமைப்பு ஆகியன தொடங்கப்பட்டன.
  • ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், வேறு 17 பேருக்கு நீண்டகால சிறைத் தண்டனையும் காக்கோரி சதித்திட்டவழக்கில் வழங்கப்பட்டன.
  • பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு ஆகியோர் லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டது மற்றும் காவல்துறை அராஜகத்தை எதிர்த்து, பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை கொன்றுவிட்டனர்.
  • மத்திய சட்டப்பேரவை அரங்குக்குள் 1929 ஏப்ரல் 8இல் பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்தும் வெடிகுண்டு ஒன்றை எறிந்தனர்.
  • 1929இல் மீரட்சதித்திட்டவழக்கு பதியப்பட்டு மூன்று டஜன் கம்யூனிச தலைவர்கள் நீண்ட கால சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்.

  • சைமன் குழு – நேரு அறிக்கை- லாகூர் காங்கிரஸ்

    • 1929-30ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது.
    • அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது.
    • 1927இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
    • இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது.
    • எனினும் டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும் வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை ஏற்கத் தவறின.

    சைமனே திரும்பிச் செல்

  • சைமனே திரும்பிப் போ முழக்கம் காதைப் பிளந்தது.
  • டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின்போது, இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் முயற்சியாக 1929இல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
  • 1928இல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த மோதிலால் நேருவைத் தொடர்ந்து அவரது மகன் ஜவஹர்லால் நேரு 1929இல் நடந்த காங்கிரஸ்மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

  • லாகூர் காங்கிரஸ் மாநாடு-பூரண சுயராஜ்ஜியம்

    • இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ்வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
    • முழுமையான சுதந்திரம் அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் அறிவித்தது. 1929 டிசம்பர் 31இல் லாகூரில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
    • சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    தண்டி யாத்திரை

    • காந்தியடிகளின்சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ளதண்டி வரை 375 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது.
    • அனைத்துப் பகுதிகளின் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25 ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6இல் சென்று அடைந்தார்.

    வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

    • தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.
    • திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது தான் இராஜாஜிதேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
    • 1930 ஏப்ரல் 13இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28இல் முடிவடைந்தது.நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெ.ஏ. தார்ன் எச்சரிக்கை விடுத்தார்.

    வட்ட மேசை மாநாடுகள்

    • 1931 மார்ச் 5இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இந்தியாவில் சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
    • சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார்.
    • இந்த இயக்கத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
    • காங்கிரஸின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்ட மேசைமாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.
    • காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) மறுத்துவிட்டார்.
    • இந்த இயக்கம் மெதுவாக மந்த நிலை அடைந்து மே 1933இல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டு பின்னர் மே 1934இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
    9964.கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
    (a) நேரு அறிக்கை 1940
    (b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 1928
    (c) தனிநபர் சத்யாகிரகம் 1946
    (d) அட்லி பிரபுவின் அறிவிப்பு 1931
    2 4 1 3
    4 2 1 3
    2 4 3 1
    3 2 1 4

    தாகூர்

    • சத்யேந்திரநாத் தாகூர் இந்தியாவின் முதல் ICS அதிகாரி ஆவார்.
    • இவர் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஆவார்.
    • கி.பி.1901-ல் ரபீந்திரநாத் தாகூரால் சாந்தி நிகேதன் பள்ளி துவங்கப்பட்டது .
    • பின்னாளில் 50 ஆண்டுகள் கழித்து விஸ்வபாரதிபல்கலைக்கழகம் ஆக மாறியது.
    • கி.பி. 1911 - கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஜன கன மன எனும் பாடல் முதன் முதலாக பாடப்பட்டது. இதன் ராகம் சங்கராபரணம் ஆகும்.
    • கி.பி.1912-ல் தத்துவபோதினி நூலில் முதன் முதலாக வெளியானது .
    • ஜன கன மன பாடல் தேசிய கீதமாக ஜனவரி 24, 1950 -ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது . "The Morning Song of India " என அழைக்கப்பட்டது.
    • ரபீந்திரநாத் தாகூர் "அமர் சோனார் பெங்கால்" எனும் வங்கத்தேசத்தின் தேசிய கீதம் மற்றும் இலங்கையின் தேசிய கீதம் உருவாவதற்கு காரணமாக இருந்தார்.
    • கி.பி.1913 -ல் கீதாஞ்சலி எனும் இலக்கிய படைப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
    • ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவராவார்.
    • "ஜீவன் ஸ்ம்ருதி" எனும் சுயசரிதை நூல் மற்றும் "கோரா ராஜா" , "ராணி ராஜரிஷி" ஆகிய படைப்புகள் தாகூரால் இயற்றப்பட்டது.
    • கி.பி.1915-ல் நைட்குட் பட்டம் தாகூருக்கு வழங்கப்பட்டது.
    57569.எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார் ?
    பஞ்சாப் படுகொலை
    முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
    சௌரி- சௌரா நிகழ்ச்சி
    காந்தியின் கைது

    Share with Friends