Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) அரேபியர்கள்-துருக்கியர்கள் (Arabs-Turks) Notes

அரேபியர்கள்

  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் - முகமது நபி (கி.பி. 570-632)
  • முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் அரேபியர்கள்
  • இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில் நிலைநிறுத்தியவர்கள்

அரேபியர்கள் சிந்து, முல்தான் படையெடுப்பு : கி.பி. 712

  • அரேபிய படையெடுப்புக்கு முன் இந்தியாவில் முஸ்லீம்கள் கேரளக் கடற்கரையோரம் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தனர்.
  • சிந்து மன்னர் -தாகீர் - முஸ்லீம் வணிகத்தை தடுத்தார்.
  • இதனால் ஈராக் ஆளுநர் அல்ஷாஜாஜ், கலீபா வாலத் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிமை சிந்து மீது படையெடுக்க அனுப்பினார்.

ரேவார் போர்

  • சிந்துவின் மன்னர் தாகீர் - முகமது பின் காசிமிடையே நடைபெற்றது.
  • முகமது பின் காசிம் வெற்றி பெற்றார். முல்தான் நகரமும் கைப்பற்றப்பட்டது.
  • முல்தானை "தங்கநகரம்" என அழைத்தார்.

நிர்வாகம்

  • சிந்து , முல்தான் மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களால் பிரிக்கப்பட்டது.
  • முஸ்லிம் அல்லாதோர் மீது ஜிசியா வரி விதிக்கப்பட்டது.

விளைவுகள்

  • பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலானது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • அரேபிய நுால்களில் இந்திய அறிவியலாளர்களான பஹலா, மானகா, சிந்துபாத் ஆகியோர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • பாக்தாத் நகரின் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக தாணா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

துருக்கியர் படையெடுப்பு

  • முகமது கஜினி காஸ்னா நகரில் பிறந்தவர்.
  • தந்தை - சபக்டிஜின் - அடிமை இராணுவ வீரர் - பின்னர் கஜினியின் மன்னரானார்.
  • சபக்டிஜினிக்கு பிறகு இஸ்மாயில் என்பவர் ஆட்சி புரிந்தார்.
  • இஸ்மாயிலை அரசப்பதவியிலிருந்து நீக்கி அப்பதவியில் அமர்ந்தார்.
  • கலீபா இவரது ஆட்சியை அங்கீகரித்து "யாமின் உத்தௌலா” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
  • ஆகவே, முகமது கஜினியும் அவரது வாரிசுகளும் "யாமினிகள்” எனவும் "யாமினி வம்சம்" எனவும் அழைக்கப்படுகிறது.
  • 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார்.
  • முக்கிய படையெடுப்பு - 1025 ல் நடந்த சோமநாதபுரம் (கத்தியவார் தீபகற்பத்தில் உள்ளது) படையெடுப்பாகும்.
  • அப்பகுதியை ஆண்ட மன்னன் - இராஜ பீம தேவன்.
  • கஜினியுடன் இந்தியாவிற்கு வந்த புகழ்பெற்ற கவிஞர் அல்பெருனி எழுதிய புத்தகம் "தகிக்-இ-இந்த்"

முகம்மது கோரி (1178)

  • துருக்கியின் கோரி ஹிரட்டுக்கும், கஜினிக்கும் இடையேயான மலைப்பகுதி.
  • முதல் படையெடுப்பில் கி.பி.1176 ல் முல்தான் கைப்பற்றினார்.
  • கி.பி.1182 ல் சிந்துவை கைப்பற்றினார்
  • கி.பி.1185 ல் பஞ்சாப்பை வென்று சிபில் கோட்டை கைப்பற்றினார்.
  • கி.பி.1186 ல் லாகூர் கைப்பற்றப்பட்டது.

முதல் தரையன் போர்

  • கோரிக்கும், பிருத்திவிராஜ் சவுகான்-க்கும் இடையில் நடைபெற்றது. இதில் சவுகான் வெற்றி பெற்றார்.

இரண்டாம் தரையன் போர்:கி.பி. 1192

  • கோரிக்கும் பிருத்திவிராஜ் சவுகான்-க்கும் இடையில் நடைபெற்றது. இதில் கோரி வெற்றியடைந்தார். காரணம் மற்ற மன்னர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. சவுகான், சம்யுக்தா என்ற இளவரசியை சுயம்வரத்தின் போது கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
  • இதனால் ஜெயச்சந்திரன் என்ற இந்திய மன்னர் கோரிக்கு உதவி செய்தார்.
  • சந்த் பர்தாய் என்பவர் பிருத்திவிராஜ் சவுகானின் அவைப்புலவர்.
  • 1197-ல் சந்தேவார் போர் - கோரிக்கும், இராஜபுத்திர அரசர் ஜெயசந்திரனுக்கும் இடையில் நடைபெற்றது.
  • ஜெயசந்திரன் கொல்லப்பட்டார். ஜெயசந்திரன் சவுகானின் மாமனார் ஆகும்.

வங்காளம் பீகார் படையெடுப்பு :

  • கோரியின் தளபதி முகம்மது பின் பக்தியார் கில்ஜி. வங்காளத்தின் மீது படையெடுத்தார். (கி.பி.1202-1203) படையெடுப்பின் போது விக்கிரமசீலா நாளந்தா பல்லைகழகத்தை தாக்கி அழித்தார்.
  • வங்காளத்தில் நபியா பகுதி மற்றும் பீகாரை கைப்பற்றினார்.
  • இந்தியாவில் முஸ்லீம்கள் குடியேற அடித்தளமிட்டவர் முகம்மது கோரி.
  • ஆப்கானில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க கோரி ஆப்கன் திரும்பும்போது 25-03-1206 பஞ்சாபில் ”கொக்கார்” என்ற பழங்குழயினத்தவரால் கொல்லப்பட்டார்.
  • கோரி ஆப்கன் திரும்பும்போது தனது இந்திய ஆட்சிப் பகுதியை நிர்வாகம் செய்ய தனது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை நியமித்தார். இவரே அடிமை வம்சத்தை நிறுவியர்.

Share with Friends