Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Notes

பண்பாடு

  • "பண்பாடு" என்னும் சொல் "பண்படு" என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தே தோன்றியது.
  • பண்படுத்துதல் என்பதற்கு செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல் என்பது பொருள்.
  • ‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்குச் சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி (In conditions suitable for growth) என்று பொருள்.
  • இச்சொல்லின் திரிபே ‘Culture‘ என ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1937இல் ‘Culture‘ என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு‘ என்னும் தமிழ்ச் சொல்லை டி. கே. சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் பேராசிரியர் எஸ். வையாபுரியார் குறிப்பிடுகிறார்.
  • பண்பாடு என்பது, மனிதனின் அகம். அதை, வெளிப்படுத்தினால் நாகரிகம்.
  • நாகரிகம் மாறுதலுக்கு உள்ளாகும். பண்பாடு, நிலைத்து நிற்கும்.
  • “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்“ - கலித்தொகை
  • “பண்புடையார்ப் பட்டுண்டு உலகு“ - வள்ளுவர்

பண்பாடு பற்றிய அறிஞர்களின் வரையறை

வரையறை-அறிஞர்கள்
“பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது“.-விவேகானந்தர்
பண்படுவது பண்பாடு. பண்படுதல் என்பது சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்.“-தேவநேயப் பாவாணர்
“பண்பாடு என்பது, பொதுவாக நாகரிகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப் பெயர் பெறுகின்றது“.-செ. வைத்தியலிங்கம்
“மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன். இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு“.-ஈ. பி. டெய்லர்
மக்களின் சிந்தனையும், செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும்.-ரூத் பெனிடிக்ட்
“அவரவர் அன்றாடப் பணிகளை நேர்மையான மனநிலையுடனும், நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது“.-வால்டேர்
“பண்பாடு என்பது, இயற்கையின்மீதும் தன்மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மிகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது“.-எல்வுட் மற்றும் பிரௌன்
“மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு“.-சி. சி. நார்தத்
“ஒருவர் தம் குணநலன்களை நிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும், பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்“.-மேத்யூ ஆர்னால்டு
பண்பாடு என்பது, மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக்கொண்டே மக்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்“.-மாலினோசுக்க
“பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது; உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது“.-ஆடம்சன் ஓபல்
“பண்பாடு என்பது, சீரிய வாழ்வுமுறை. இவ்வாழ்வுமுறை, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால் ஊக்குவிக்கப்படுகிறது“.-கே. எம். முன்ஷ
தனிச் சிறப்புக்கூறுகள் நிறைந்த தனி இனச் சமுதாயத்தினரின் பண்புகளே பண்பாடு எனக் குறிப்பிடத்தக்கனவாகும்“.-அமெரிக்க மானிடவியலாளர்கள்

இந்தியப் பண்பாட்டை அறிய உதவும் தொன்மைச் சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

  • வேதங்கள், இதிகாசங்கள், தரும சாத்திரங்கள் நூல்கள்,பௌத்த சமய இலக்கியங்கள, சமண நூல்கள், தனி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள்

1. வேதங்கள்:

    1. ரிக்
    2. யஜூர்
    3. சாமம்
    4. அதர்வணம்.
  • இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை வேதங்கள்.
  • அக்காலத்தில் பின்பற்றப்பட்ட சடங்கு, வானநூல், மருத்துவம், மொழிநூல், வேள்விகளின் வகைகள் , இல்லற, துறவறத்தாரின் வாழ்க்கை நெறிமுறைகமுறைகளை விளக்கியுள்ளன.

2. இதிகாசங்கள்

    • இராமாயணம்
    • மகாபாரதம்
  • அக்கால அரசியல், சமுதாயப் போராட்டங்கள், நகர வாழ்க்கை, வரிகள், தண்டனைகள், பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றையும் அறியமுடிகிறது.

3. தரும சாத்திரங்கள் நூல்கள்

    i)தரும சாத்திர நூல்கள்

  • மனு , யஜ்ன வால்கியர் , விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதிய நூல்களையே தரும சாத்திர நூல்கள் என்கிறோம்.

ii) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.

iii) ‘திருக்குறள்,

  • ‘திருக்குறள், எக்காலத்துக்கும் உகந்த உலக மக்களின் வாழ்வியலுக்கான அறநெறிகளை எடுத்துரைக்கிறது.

iv) ‘நாலடியார்‘

  • ‘நாலடியார்‘ அறக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது

v) அறநெறிச்சாரம்

  • அறநெறிச்சாரம் பண்பாட்டுக் கருத்துகளைப் புலப்படுத்துகிறது.

vi) ஆத்திசூடி

  • ஆத்திசூடி மக்கள் பின்பற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை எளிய ஓரடிப் பாடலாக வெளிப்படுத்துகிறது.

4) பௌத்த சமய இலக்கியங்கள்

பௌத்த சமய நூல்கள் முப்பிரிவாக உள்ளன

    1. சுத்த பீடகம்
    2. விநய பீடகம்
    3. அபிதம்ம பீடகம்
  • தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்ததை மணிமேகலை காப்பியத்தின் வாயிலாக அறிலாம்.

5. சமண நூல்கள்

  • புத்தரின் அறிவுரைகளையும் கருத்துகளையும் எடுத்துரைப்பவை பெளத்த சமய இலக்கியங்களாகும். பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் இவை எழுதப்பட்டுள்ளன.
  • சமண நூல்கள், ஆகம சித்தாந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் காப்பியங்கள் சமணத்தின் தத்துவங்களை அறிய உதவுகின்றன.

6. தனி இலக்கியங்கள்

  • புறநானூற்றின் வாயிலாக வெளிப்படும் மேலும் சில பண்பாட்டுச் செய்திகள் பின்வருமாறு:
  • 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 67 வகை உணவுகள் பற்றிய குறிப்புகள்,
  • கடையேழு வள்ளல்களின் கொடைத்திறம், பாணர், விறலியர், கூத்தர் போன்றோரின் கலைத்திறம்
  • „
  • பாரதப்போரின்போது, உதியன் சேரலாதன் என்னும் மன்னன்,வீரர்களுக்கு உணவு கொடுத்தமை„
  • இறந்தவரைத் தாழியில் வைத்துப் புதைத்தல், நடுகல், கணவர் இறப்பிற்குப்பின் மங்கையர் அணிகலன்களைக் களைதல், கைம்மை நோன்பு நோற்றமை, உடன்கட்டை ஏறல்.
  • தமிழர் திருமண முறை - அகநானூறு
  • ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ - பொதுமை நோக்கம்
  • அன்பின் சிறப்பு - ஐங்குறுநூறு
  • இல்லற வாழ்வியல் (விருந்தோம்பும் பண்பு, பெரியோரை மதித்தல், வறுமையிலும் செம்மை ) - நற்றிணை
  • மார்கழி நோன்பு - கலித்தொகை

7. நாட்டுப்புற இலக்கியங்கள்

  • ஏட்டில் எழுதா இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்களாகும்.
  • ‘இலக்கியங்கள், காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியைக்காட்டும் காலக் கண்ணாடிகளாக விளங்குகின்றன‘ என்று கூறியவர் - பேராசிரியர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு நூல் )
  • நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folklore என்ற சொல்லை, 1846இல் வில்லியம் ஜான் தாமசு என்பவர் உருவாக்கினார்.
  • ‘பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) நாட்டுப்புறவியல்‘ என்பது அவரது கருத்தாகும்.

8. நாட்டுப்புறப் பாடல்கள்

  • தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத் தி‘என்பது பாமரர் பாடல்களைக் குறித்தது.
  • பழைமையான பாடல்களிலுள்ள பொருளையே தனக்குப் பாடுபொருளாகக்கொண்டு, பாட்டும் உரையும் போன்று செய்யப்படுவனவற்றைப் பண்ணத்தி என்றனர்.
  • பண் + நத்தி = பண்ணத்தி (பண்ணை விரும்புவது எனப் பொருள்படும். (பண்= பாடல்))

9. நாட்டுப்புறக் கதைகள்

  • ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்‘ - தொல்காப்பிய நூற்பா
  • காப்பியங்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவை - கதைப்பாடல்கள்
  • கதைப்பாடலுக்குத் தமிழில் ‘அம்மானை‘ என்றும் பெயருண்டு.
  • சிலப்பதிகாரத்தில் ‘அம்மானை‘ என்ற சொல் முதன்முதலாகக் கையாளப்பட்டுள்ளது.

கதைப்பாடல்கள் 4 பகுதிகளை கொண்டுள்ளது

  • காப்பு அல்லது வழிபாடு - இறைவனை வழிபட்டுப் பாடலைத் தொடங்குவது .
  • குரு வணக்கம் - தனக்குப் பாடம் சொன்ன குருவுக்கு வணக்கம் செய்து பாடுவது.
  • வரலாறு - நடந்த நிகழ்வைக் கதைப்பாடலாகப் பாடுவது.
  • வாழி - கதை கேட்போரும், மற்றோரும் கடவுளர் அனைவரின் அருளும் பெற்று வாழ்க என வாழ்த்துவது .

10.பழமொழிகள்

  • ஒழுக்கம் உயர்வுதரும், ஒழுக்கம் உயர்குலத்தினும் உயர்வு‘ - நல்லொழுக்கம்
  • பழுத்தமரமும் செழித்தசெல்வமும் பசியாற்றவே‘ - நற்பண்பு
  • அன்போடு அளிக்கும் கஞ்சி, அறுசுவை உணவை மிஞ்சும் - விருந்தோம்பல்
  • ‘கெடுவான் கேடு நினைப்பான்‘, ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்‘, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்‘ - நல்லெண்ணம்.
  • சிறந்த கருத்தைச் சொல்வது பொன்மொழி.
  • உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பழமொழி.

11. புராணங்கள்

  • பண்டைய தொல்கதைகளையே புராணங்கள் என்கிறோம்.
  • ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர் உண்மையைக் கூற விழைகிறது - மாக்ஸ்முல்லர்
  • ‘புராணக் கதைகள், தங்களை உருவாக்கிய முன்னோர்கள் பற்றியும் பயன்படுத்துவோரைப் பற்றியும் கூறுகிறது‘ - ஈ. பி. டெய்லர்

12. இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்

  • பண்பாடு நெகிழ்வுத் தன்மையுடையதாய் விளங்குகிறது. தொன்மையானது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்லப்படுவது, பண்பாடேயாகும். பண்பாடு மாற்றத்திற்கு உட்படாது மற்றும் தன் அடையாளத்தை விட்டுச்செல்லும் .
    1. நிலைத்தன்மை
    2. நெகிழுந் தன்மை
    3. நடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல்
    4. முழுவளர்ச்சிக்கு உதவுதல்
    5. அனுபவ அறிவு

13. ஆன்மிக அடிப்படை

  • இந்தியப்பண்பாட்டின் ஆணிவேராக ஆன்மிகம் விளங்குகிறது.

14தத்துவக்கோட்பாடுகள்

  • “மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்“ - ‘ரிக் வேதம்

15. அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலை

  • அன்பு : ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பாசமே அன்பு எனப்படும்.
  • இது இரக்கம்,பரிவு, கருணை போன்ற பல சொற்களால் அழைக்கப்படுகின்றது.
  • அருளின் அடிப்படையே அன்பாகும்
  • சத்தியம் : சத்தியம் என்பது உண்மை எனப்படுகிறது.
  • உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை ,உடலால் வருவது மெய்மை. இம்மூன்றையும் உள்ளடக்கிய சொல் சத்தியமாகும்.
  • தர்மம் : தர்மம் என்பது அறம், ஈகை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
  • அகிம்சை : கொல்லாமை என்பதே அகிம்சையாகும்.
  • சாந்தம் : மன நிம்மதியே சாந்தமாகும்.
  • சகோதரத்துவம் : மனித சமூகத்தில் அனைவரும் சகோதரரே.
  • கருணை : அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் ‘இரக்கமே‘ கருணையாகும்.

16. பண்பாடும் நாகரிகமும்

  • நாகரிகம் என்ற சொல் நகர் என்னும் சொல்லடியாகப் பிறந்தது.
  • நகர் + அகம் – நகரம் – நகரிகம் –நாகரிகம்.
  • நாகரிகம் என்பது புறவளர்ச்சியைக் கூறுகின்றது.
  • பண்பாடு என்பது அகவளர்ச்சியாகிய ஆன்மிக உயர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.

17.வாழ்வின் உறுதிப்பொருள்

  • ஆறாம்
  • பொருள்
  • இன்பம்
  • வீடு

Share with Friends