Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test Yourself

55693."யாதும் ஊரே யாவரும் கேளீர்" என கணியன் பூங்குன்றனார் வலியுறுத்துவது
எதை?
சமத்துவம்
சகோதரத்துவம்
A & B
ஏதுமில்லை
55694.அருளின் அடிப்படை எது?
அன்பு
உண்மை
பக்தி
கருணை
55695.தம்மிடம் பிறர் அன்புகாட்டவேண்டும் என்று எண்ணுவதுபோல், தாமும் பிறரிடத்து அன்புசெலுத்தவேண்டும் என்ற இரக்க உணர்வே - ற்கு அடிப்படையாகும்.
மனிதநேயத்திற்கு
பகுத்தறிவிற்கு
ஆன்மநேயத்திற்கு
தர்மநெறிக்கு
55696.சத்தியம் என்பது எம்மூன்றை உள்ளடக்கியது?
உண்மை, வாய்மை, மெய்மை
உண்மை , வாய்மை , தர்மம்
உண்மை , தர்மம், மெய்மை
தர்மம், வாய்மை, மெய்மை
55697.பின்வருவனவற்றுள் எதன் காலத்தையும், தன்மையையும் அளவிட முடியாது?
பண்பாடு
நாகரிகம்
இவையிரண்டும்
ஏதுமில்லை
55698.எச்சொல்லிலிருந்து மறுவி நாகரிகம் என்னும் சொல் உருவானது?
நகரியம்
நாகரியம்
நகரம்
ஊர்
55699.தவறான இணை எது?
1. தர்மம் - அறம் அல்லது ஈகை
2. அகிம்சை - கொல்லாமை
3. அகிம்சை - எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்குத் துன்பம் செய்யாமை.
4. கருணை - இரக்கம்
1 மட்டும்
2 மட்டும்
3 மட்டும்
ஏதுமில்லை
55700.பண்பாட்டுக்கல்வியின் பயன்களில் சேராதது எது?
வாழ்வின் உறுதிப் பொருள்களை அறியச்செய்தல்
வாழ்வியல் பொய்களை அறியச்செய்தல்
சரியான நெறிமுறைகளைப் பின்பற்றச்செய்தல்
இயற்கையோடு இணைந்து வாழச்செய்தல்
55701.“மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்" என்று கூறும் வேதம் எது?
யஜூர்
அதர்வண
சாமம்
ரிக்
Explanation:

வேதங்கள், உபநிடதங்கள், காவியங்கள், புராணங்கள், பகவத்கீதை போன்றதத்துவ மறைகள் மனிதப் பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.
55702.இந்தியப் பண்பாட்டின் இயல்புகளில் சேராதது எது?
நிலைக்காத தன்மை
நெகிழும் தன்மை
நடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல்
அனுபவ அறிவு
Share with Friends