Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) குஷாணப் பேரரசு (Cushion Empire) Notes

குஷாணப் பேரரசு

  • இந்தியாவில் மௌரியர்களுக்குப்பின் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு குஷானப் பேரரசு ஆகும்.
  • இனம் - யூச்சி
  • ஊட்பிரிவு - குஷாணர்கள்

முதலாம் காட்பிஸஸ்

  • குஷாண அரசை நிறுவியவர்
  • ஆண்டு - கி.பி.முதல் நூற்றாண்டு

இரண்டாம் காட்பிஸஸ் (கி.பி. 65-75)

  • பஞ்சாபையும், கங்கைச் சமவெளியையும் கைப்பற்றினார்.
  • இவர் இரந்த பின் கனிஷ்கர் (கி.பி.78 -101 ) குஷான அரியணையைக் கைப்பற்றினார்.

கனிஷ்கர் (கி.பி. 78-101)

  • குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னர்.
  • சாகசத்திரபர்களை அடிபணிய வைத்தார்.
  • படையெடுப்பு - சீனா (2 முறை)
  • சீனத் தளபதி பஞ்சொ என்பவனிடம் தோல்வியுற்றார் (முதல் போர்)
  • இரண்டாவது போர் வெற்றி - யார்க்கண்ட், கோடான் இணைப்பு
  • புருஷபுரம் என்ற பெஷாவரை தலைநகராக ஆக்கினார்.
  • நான்காவது பௌத்த மாநாட்டைக் காஷ்மீரில் கூட்டினார்.
  • பௌத்த அறிஞர்களான வசுபந்து, அசுவகோயூர், நாகார்ஜூனர் போன்றோர் பங்கேற்றனர்.
  • மகாயான பௌத்த மதப்பிரிவு தோன்றியது.
  • இந்திய கிரேக்க நுட்பங்கள் இணைந்த காந்தாரக் கலையினால் புத்தர், பௌத்தத்துடன் தொடர்புடையோரின் புதிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
  • பௌத்த மதத்தைப் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சியாள் "இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார்.
  • கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் சகசகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.

Share with Friends