Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) டெல்லி சுல்தான்கள்  (Delhi Sultans) Notes

டெல்லி சுல்தான்கள்

  • இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது.
  • டெல்லி சுல்தானியர்களின் ஆட்சியானது கி.பி. 1206 முதல் 1526 ஆம் ஆண்டுவரை நீடித்தது.
  • ஐந்து வம்சங்களான: அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி ஆகியன டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன.
  • வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர்.
  • இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.

அடிமை வம்சம்

  • அடிமை மரபை தோற்றுவித்தவர் குத்புதின் ஐபக்
  • அடிமை என்பதன் பொருள் மம்லுக்
  • முகமது கோரியின் அடிமை குத்புதின் ஐபக் ஆவார்.
  • குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டி தொடங்கிய மசூதியின் பெயர் க்யூவாட் உல் இஸ்லாம்
  • குத்புதின் ஐபக் ‘லக்பாக்க்ஷா’ என அழைக்கப்பட்டார்
  • ”லக்பாக்க்ஷா” என்பதன் பொருள் லட்சங்களை அள்ளி தருபவர்
  • குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் குதுப்மினார்
  • குத்புதின் ஐபக் போலோ விளையாட்டின் போது தவறி விழுந்து இறந்து போனார்.
  • போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் சவ்கன்
  • குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் இல்துமிஷ்

இல்துமிஷ்

  • குத்புதின் ஐபக் பின் ஆட்சிக்கு வந்தவர் இல்துமிஷ்.
  • இல்துமிஷ் என்பவர் குத்புதின் ஐபக்கின் மருமகன் ஆவார்.
  • குத்புதின் ஐபாக் மருமகன் இல்துமிஷ்
  • குத்புதின் ஐபாக் மகன் அராம்
  • இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் டாங்கா
  • குதுப்மினாரை கட்டி முடித்தவர் -இல்துமிஷ்
  • இல்துமிஷ் மகளின் பெயர் இரசிய சுல்தான்
  • இல்துமிஷ் பின் ஆட்சிக்கு வந்தவர் இரசிய சுல்தான்
  • டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் இரசிய சுல்தான்
  • இரசிய சுல்தான் கணவர் பெயர் அல்துனியா
  • இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் நஸ்ருதீன் முகமது
  • இல்துமிஷ் கடைசி மகன் நஸ்ருதீன் முகமது
  • நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் கியாசுதின் பால்பன்
  • நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் கியாசுதின் பால்பன்
  • அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் கியாசுதின் பால்பன்
  • 40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் கியாசுதின் பால்பன்
  • கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் அமீர் குஸ்ரு
  • இந்தியக் கிளி என்று அழைக்கப்படுபவர் அமீர் குஸ்ரு
  • கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் கைகுபாத்
  • அடிமை மரபின் கடைசி அரசர் கைகுபாத்
9285.`இந்தியக் கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார்.
அல் பரூனி
கைகுபாத்
அமிர்குஸ்ரு
பால்பன்

கில்ஜி மரபு

  • கில்ஜி மரபை தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி
  • ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது 70
  • ஜலாலுதீன் கில்ஜிக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் அலாவுதீன் கில்ஜி
  • ஜலாலுதீன் கில்ஜி மருமகன் அலாவுத்தீன் கில்ஜி
  • ஜலாலுதீன் கில்ஜி, அலாவுத்தீன் கில்ஜியால் கொல்லப்பட்டார்
  • கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.
  • ஜலாலுதீன் கில்ஜி மருமகன் அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.
  • அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்த ஆண்டு கி.பி. 1297
  • குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி மாலிக்காபூர்
  • அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மேவர் அரசர் ராணபீம்சிங்
  • ராணபீம்சிங் மனைவி பெயர் ராணி பத்மினி
  • ராணி பத்மினி, ஜவகர் முறையில் தன் கணவரின் இறப்பிற்கு பின் உயிர் துறந்தார்.
  • ஜவகர் முறை என்பது தீக்குளித்து உயிர் விடும் முறையாகும்.
  • தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் வரை படையெடுத்து வந்த முதல் கில்ஜி படைதளபதி மாலிக்காபூர் ஆவார்.
  • அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் அலாவுத்தீன் கில்ஜி
  • குதிரைக்கு சூடு போடும் முறைக்கு தாக் முறை என்று பெயர்.
  • தாக் முறை அறிமுக படுத்தியவர் அலாவுத்தீன் கில்ஜி
  • அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் அமீர் குஸ்ரு
  • அமீர் குஸ்ரு எழுதிய நூல் லைலா மஜ்னு
  • அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி ஷெனாய்
  • அலாவுத்தீன் கில்ஜி இறப்பு கி.பி. 1316
  • அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் குத்புதின் முபாரக்
  • கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் குத்புதின் முபாரக்

துக்ளக் மரபு

  • துக்ளக் மரபு தோற்றுவித்தவர் கியாசுதின் துக்ளக்
  • கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு துருக்கி
  • கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு
  • கியாசுதின் துக்ளக் மகன் பெயர் முகமது பின் துக்ளக்
  • முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் பரணி
  • இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி தோவாப்
  • தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் முகம்மது பின் துக்ளக்
  • தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் தௌலதாபாத்
  • அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகம்மது பின் துக்ளக்
  • முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு 1. பாரசீக 2. குமோன்
  • முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் முகம்மது பின் துக்ளக்
  • முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் பெரோஸ் துக்ளக்
  • கியாசுதின் இளைய சகோதரர் பெரோஸ் துக்ளக்
  • துக்ளக் மரபில் சிறந்த அரசர் பெரோஸ் துக்ளக்
  • ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு முறையை அறிமுகம் படுத்தியவர் பெரோஸ் துக்ளக்
  • துக்ளக் மரபு சிதறுண்டு போக காரணம் தைமூர் படையெடுப்பு
  • துக்ளக் மரபு கடைசி அரசர் பெரோஸ் துக்ளக்

சையது மரபு

  • சையது மரபு தோற்றி வித்தவர் கிசிர்கான்
  • கிசிர்கான் தலைநகரம் டெல்லி
  • கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் முபாரக் ஷா
  • முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் முகம்மது ஷா
  • முகம்மது ஷா அமைச்சர் பஹ்லுல் லோடி
  • சையது மரபின் கடைசி அரசர் முகம்மது ஷா

லோடி மரபு

  • லோடி மரபு தோற்றுவித்தவர் பஹ்லுல் லோடி
  • பஹ்லுல் லோடி மகன் சிக்கந்தர் லோடி
  • லோடி வம்சத்தில் சிறந்த அரசர் சிக்கந்தர் லோடி
  • டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியவர் சிக்கந்தர் லோடி
  • சிக்கந்தர் லோடியின் மகன் இப்ராஹிம் லோடி
  • சிக்கந்தர் லோடி படைதளபதி தௌலத்கான் லோடி ஆவார்.
  • பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் தௌலத்கான் லோடி
  • பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் ஏற்பட்ட போர் முதலாம் பானிபட் போர் (1526)
  • லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு 75 ஆண்டுகள்.
9569.டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார் ?
இப்ராஹிம் லோடி
சிக்கந்தர் லோடி
இப்ராஹிம் அலி
தெளலத் கான் லோடி
Share with Friends