திராவிட இயக்கத்தின் எழுச்சி
- 1911 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்று அதிகமாயும் பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை 90 விழுக்காடெனவும் காட்டியது.
- இத்தகைய சூழலில் திராவிட இயக்கம் பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக பிராமணரல்லாதவர்களை பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது.
- 1909 இல் பிராமணரல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1912இல் டாக்டர் சி.நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐகிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது.
- திருவல்லிக்கேணியில்(சென்னை ) ஜூலை 1916இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவினார்.
- 1916 நவம்பர் 20 இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணரல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமை சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.
- இதேசமயம் 1916 டிசம்பரில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது.
- இவ்வமைப்பு கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்வதற்காக தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டது.
- மாகாண அரசுகளில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1920இல் முதல் தேர்தல் நடைபெற்றது.
- நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது.A.சுப்புராயலு சென்னை மாகாணத்தின் முதலமைக்கர் ஆனார்.
- நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது.A.சுப்புராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.
- மேலும் நீதிக்கட்சி(1920-1923) மற்றும் (1923- 1926)ஆகிய ஆண்டுகளில் அரசு அமைத்தது. காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தை புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி 1937ல் தேர்தல் நடைபெறும் வரை ஆட்சி தொடர்ந்து நீடித்தது.
- 1937 தேர்தல்களில் முதன் முதலாக பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.
- நீதிக்கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் 1923ல் உருவாக்கப்பட்டன.
- நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம் தான் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை 1921இல் அங்கீகரித்தது.
- இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926ல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.
- நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கீட்டு கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது.
- இம்முறையை பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.
- நீதிக்கட்சி 1926ல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
- சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப்பொருளாக இருந்தது இனம் ஆகும்.
- இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்தம் முன்முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென பெரியார் கூறினார்.
- பெரியார் ஈ.வெ.ராமசாமி(1879 -1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
- இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறிய பெரியார் பலமாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார்.
- ஈரோட்டில் நகரசபை தலைவர் பதவி (1918- 1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.
- 1917 க்குப் பின்னர் பிராமணரல்லாத நீதிக்கட்சியின் எழுச்சிக்குப் பின்னர் சி.இராஜாஜியின் முன்முயற்சியினால் பெரியார் மற்றும் பி. வரதராஜுலு போன்ற பிராமணரல்லாத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
- ஒத்துழையாமை இயக்கத்திற்கு(1920- 1922) ஆதரவாகத் தான் வசித்து வந்த அனைத்து அரசு பொறுப்புகளையும் அவர் ராஜினாமா செய்தார்.
- பெரியார் 1925ல் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.பின் 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
- குடியரசு 1925, ரிவோல்ட் 1928, புரட்சி 1933, பகுத்தறிவு 1934, விடுதலை 1935, போன்ற பல செய்தித்தாள்களையும், இதழ்களையும் பெரியார் தொடங்கினார்.
- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குடியரசு ஆகும். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் கட்டுரைகளை எழுதினார்.
- பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
- பி.ஆர்.அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு எனும் நூலை அந்நூல் வெளிவந்தவுடன் 1936ல் தமிழில் பதிப்பித்தார்.
- 1937இல் ராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராக பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
- நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து. அதற்கு 1944ல் திராவிட கழகம் எனப் புதுப்பெயர் சூட்டப் பெற்றது.
- பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள் என்பதாகும்.
- 1989 இல் தமிழக அரசு, மாற்றங்களை விரும்பிய சீர்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
- தாத்தா என பரவலாக அறியப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் 1859 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
- அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் 1926, ராவ்பகதூர் 1930, திவான்பகதூர் 1936 ஆகிய படங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.
- அவரது சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் 1839 இல் வெளியிடப்பட்டது.இந்நூல் முதன்முதலாக எழுதப்பட்ட சுயசரிதை நூல்களில் ஒன்றாகும். 190. 1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்.
- தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளை சந்தித்த இரட்டைமலை சீனிவாசன் அவருடன் நெருக்கமானார்.
- 1923 இல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான அவர் நீதிக்கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்த மக்களின்உரிமைகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.
- 1932ல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவர்களுள் இவரும் ஒருவராவார்.
- மக்களால் எம்.சி.ராஜா என அழைக்கப்பட்ட மயிலை சின்னத்தம்பி ராஜா ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார்.
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார்(19201926).சென்னை சட்டசபையில் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டார்.
- 1928 இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார்.
- சென்னை மாகாணத்தில் பி.பி.வாடியா, ம.சிங்காரவேலர், திரு.வி.கல்யாண சுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர்.
- 1918 இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
- அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் பம்பாயில் நடைபெற்றது.
- காரல்மார்க்ஸ்,சார்லஸ் டார்வின்,ஹெர்பர்ட் ஸ்பென்சர்,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர் ம.சிங்காரவேலனார்.
- 1923 இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே. அவர் இந்திய பொதுவுடமைக்(கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
- தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காக தொழிலாளன் என்ற பத்திரிகையை வெளியிட்டார்.
- ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை வரலாற்றை முறையாக கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.
- 1912இல் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தமிழிசை இயக்கத்தின் கருவூலமானது.
- தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943 இல் முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
- இந்திய பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா,மார்க்ரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பட்டது.
- இதே சமயத்தில் இந்திய பெண்கள் சங்கம் பெண்கல்வி குறித்த பிரச்சினைகளை கையாள்வதற்காக 1927 இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.
- 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
- தேவதாசி முறையை ஒழிப்பதற்காக மதராஸ் தேவதாசி சட்டம் 1947 எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.
- இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளில் முன்னோடி ராஜாராம் மோகன்ராய் ஆவார்.
- 1709 இல் தரங்கம்பாடியில் சீகன்பால்கு ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
- குடியரசு சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ஆகும்.
- சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் பகுத்தறிவுவாதம் வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.
- 1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை இரட்டைமலை சீனிவாசன் நிறுவினார்.
- இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் 1918இல் உருவாக்கப்பட்டது.
- அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சியால் நிறுவப்பெற்றது.
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.சி.ராஜா (மயிலை சின்னத்தம்பி ராஜா).
- முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி தமிழாகும்.
- புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் F.W.எல்லிஸ் ஆவார்.
- மறைமலையடிகள் தமிழ் மொழியில் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
- தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது நீதிகட்சி ஆகும்.
- சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயர் பரிதிமாற் கலைஞர் என மாற்றம் பெற்றது.
- ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமி ஆவார்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்
- திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும்.
- இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன.
- சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர்.
- அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் டி. எம். நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
திராவிட இயக்கத்தின் தோற்றம் :
- திராவிட மகாஜன சபை என்பது திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவரான அயோத்தி தாசர் என்பவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது.
- அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார்.
- அவர்கள் யாரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.
- 1912 ஆம் ஆண்டில் திராவிடர் நலனை முன்வத்து இயக்கம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என மாற்றப்பட்டது.
திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்:
- இராஜாஜி அரசின் மொழிக் கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர்.
- 1940 களின் முதல் பாதியில் உருவான இக் கொள்கை 1944 ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது. பெரியார் தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றதும் இவ்வாண்டிலேயே.
- பல துடிப்புள்ள இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகம் வளர்ந்து வந்தது. திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சி. என். அண்ணாதுரை திகழ்ந்தார். திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தது. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்தினர். "சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றினார்
9579."சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
அரவிந்த் கோஷ்
பெரியார்
காமராசர்
அண்ணாதுரை
திராவிடமும் தமிழியமும் :
- திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான்.
- “திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்" என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. 'அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது' என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.
ஒத்துழையாமை இயக்கம் :
- ஒத்துழையாமை இயக்கம் என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும்.
- மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
- ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.
ஒத்துழையாமை இயக்கத்திற்கான திட்டங்கள் :
- பட்டங்களையும் சிறப்புத் தகுதிகளையும் துறத்தல், உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுதல், 1919 ஆம் ஆண்டு சட்டப்படி நடைபெறவிருந்த தேர்தல்களை புறக்கணித்தல்.
சுயமரியாதை இயக்கம் :
- சுயமரியாதை இயக்கம் சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் தொடங்கப்பட்டது.
- 1944 ம் ஆண்டு முதல் இவ்வியக்கம் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டு திராவிடர்களின் நலன்களில் அக்கறை கொண்ட கட்சியாகச் செயல்பட்டது.
இந்திய அரசியல் கட்சிகள் :
- அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும்.
- இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
கட்சிகளின் வகைகள்
- தேசியக் கட்சிகள்
- மாநிலக் கட்சிகள்
- பதிவு செய்யப்பட்ட கட்சிகள்
தேசியக் கட்சிகள்
- பகுஜன் சமாஜ் கட்சி
- பாரதீய ஜனதா கட்சி
- பி.ஜே. சமாஜ்வாதி கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும்.
- இக்கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது.
- இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாநிலக் கட்சிகள்
- இந்திய தேசிய லோக்தளம்
- இந்திய யூனியம் முசுலீம்லீக்
- சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி
திராவிட முன்னேற்றக் கழகம் :
- திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.
- தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா ந அண்ணாதுரையும் வேறு சில தலைவர்களும் - கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.
- அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது.
- அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி தி மு க வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் :
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது.
- எம் ஜி. அவர்களால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது.
- இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி, அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.
- நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:
- தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான எம். ஜி. இராமச்சந்திரனுக்கும் ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது.
- எம் ஜி ஆர். தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சி உருவானது.
- அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. - எம் ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
- இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
அரசியல் கட்சிகள்
- அரசியல் கட்சிகள் என்பது 200 ஆண்டுகட்குட்பட்ட ஒரு நவீன நிகழ்வாகும்.
- 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் முதன் முதலாக கட்சியும், கட்சி அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
- எட்மண்ட் பர்க் என்பவர் தங்களது கூட்டு முயற்சியால் குறிப்பிட்ட சில கொள்கைகளின் மீது தேசிய ஆர்வத்தை உருவாக்கி ஒத்த கருத்தை ஏற்படுத்தும் மக்கள் கூட்டமைப்பிற்கே அரசியல் கட்சி என குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்டீபன் லீகாக்-குடிமக்கள் ஒன்று திரண்டு அரசியல் பிரிவுகளை ஏற்படுத்தி ஒன்றாக செயல்படும் கூட்டமே அரசியல்கட்சி எனப்படுகிறது.
- கில் கிரைஸ்ட்-ஒத்த அரசியல் கருத்துக்களை செயல்படுத்தும் ஒரு மக்கள் கூட்டமைப்பு அரசியல் கட்சி எனப்படுகிறது.
- கட்சிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம் அவை பழமைவாதிகள், மிதவாதிகள், பிற்போக்குவாதிகள், தீவிரவாதிகள்.
- அரசியல் கட்சிகளில் ஒரு கட்சி, இரண்டு கட்சி மற்றும் பலகட்சிகள் முறை ஆதிக்கம் செலுத்துகின்றன.
- மௌரிஸ் துவேகர் என்பவர் தெரிவித்துள்ளார் நான்குமுனை கட்சி அமைப்பு கட்சியின் உட்குழு, உட்பிரிவு, அணு மற்றும் இராணுவம் என்பவையாகும்.
- மக்கள் கட்சி என்பது கிளை வகையைச் சேர்ந்தது. இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். இது மத்திய தலைமைக்கு உட்பட்டதாகும். இது நிரந்தரமான கட்சி.
- மக்கள் கட்சிக்கு உதாரணம் ஆங்கிலேயே தொழிலாளர் கட்சி, ஜெர்மனியின் சமூகக் குடியரசு கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி.
- இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இரஷ்ய புரட்சியே ஒற்றைக் கட்சி அமைப்பு உருவாவதற்கு அடிகோலியது. இதற்கு உதாரணம் கம்யூனிஸ்ட் சீனா.
- இரு கட்சி முறையில் இரு கட்சிகள் இருக்கும் அதில் ஒன்று ஆளும் கட்சி மற்றொன்று எதிர்க்கட்சி.
- இரு கட்சி முறைக்கு உதாரணம் இங்கிலாந்து- இங்கு பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் உள்ளன.
- ஐக்கிய அமெரிக்க நாடுகள்-ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி.
- சமுதாய அமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும், தேசிய அளவில் ஏற்பட்ட வேறுபாடுகளும் பலகட்சி முறை அமைப்பு உருவாவதற்கு காரணம். இதில் இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கும் இதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் உதாரணமாகும்.
- பேராசிரியர் ஃபைனர் என்பவர் தன்னார்வ அமைப்புகளை பெயரிடப்படாத பேரரசு எனவும் மற்றவர்கள் இதனை கண்ணுக்குப் புலப்படாத அரசாங்கம் எனவும் அங்கீகாரமற்ற அரசாங்கம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
- விஷால் ஹரியானை இயக்கம் தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையேயான தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையை தீர்க்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்.
- தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவர்களது பயணியும் பனிக்காலமும் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவது. இவர்கள் பணியில் இருக்கும்போது பணி விதிகளை மாற்ற இயலாது.
- 1954 இல் நடந்த லோக்சபாவிற்கான பொதுத் தேர்தலின் போது குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது 4 சதவீதத்திற்கு குறையாத வாக்குகள் பெற்ற சில கட்சிகளை தேசிய கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் எ.ஓ. ஹியூம். எப்போது அ.இ.அ.தி.மு கழகம் தோற்றுவிக்கப்பட்டது 1972.
- இந்தியா பல கட்சி முறையை பெற்றிருக்கிறது.
- தெலுங்குதேசம் என்பது மாநில கட்சியாகும்.
- தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை மக்களாட்சி.
- நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த நாடு கிரீஸ்.
- எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து காபினட் அமைச்சர்.
- தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வயது 18.
- மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு பாராளுமன்றம்.
- தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் கொண்டிருப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதி.
- மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமை தேர்தல் அதிகாரி. 260. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் புதுதில்லி.