Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்)-(carnatic Wars b/w French and British) Notes

ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்)

  • இந்தியாவில் ஆங்கிலேயே, பிரெஞ்சு ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
  • இந்தியாவில் யார் அதிகாரம் செய்வது என இருவருக்குமிடையே 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே போட்டிகள் ஏற்பட்டிருந்தன.
  • கி.பி. 1740 முதல் கி.பி.1763 வரை இருவருக்கும் இடையே கர்நாடகாவில் மூன்று போர்கள் நடைபெற்றன. இதுவே கர்நாடகப் போர் எனப்பட்டது.

  • முதல் கர்நாடகப் போர் (1746 - 1748)

    • முதல் கர்நாடகப் போர் ஆஸ்திரிய வாரிசுரிமை போரின் பிரதிபலிப்பு ஆகும்.
    • பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே மற்றும் மொரிசியஸ் கவர்னர் லா போர்டனாய்ஸ் என்பவருடன் இணைந்து சென்னையைக் கைப்பற்ற முயன்றனர். இதுவே முதல் கர்நாடகப் போர் ஏற்பட வழி வகுத்தது.
    • கர்நாடக நவாப் அன்வருதீன் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாபூஸ்கான் தலைமையில் அனுப்பிய படையை பிரெஞ்சுக்காரர்கள் சென்னைக்கு அருகே அடையாறு (அடையாற்றுப் போர்) என்னுமிடத்தில் வீழ்த்தினர்.
    • பின்னர் பிரெஞ்சுப்படைத் தளபதி டியூப்ளே தலைமையில் கடலூரில் உள்ள டேவிட் டியூப்ளே கோட்டையைக் கைப்பற்ற முயன்றனர்.
    • இப்போர் கி.பி. 1748 ல் 'அய்லா ஷாப்பேல்' உடன்படிக்கையின் படி முடிவுற்றது.
    • அய்லா ஷாப்பேல் உடன்படிக்கை ஆஸ்திரிய வாரிசுரிமைப் போருக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
    • இந்த உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்களுக்கு சென்னை மீண்டும் கிடைத்தது.

    இரண்டாம் கர்நாடகப் போர் (1748-1754)

    • கர்நாடக நபாப் தோஸ்த் அலி இறந்த பின் பதவிக்கு அவரது மகன் அன்வாருதீன் மற்றும் மருமகன் சந்தாசாகிப் போட்டியிட்டனர்.
    • ஆகாஷ் அதே சமயம் ஹைதராபாத் நிஜாம் அசஃப்ஜா இறந்தார். பதவிக்கு மகன் நாசிர் ஜங்கும், பேரன் முஷபர் ஜங்கும்போட்டியிட்டனர்.
    • பிரெஞ்சுகாரர்கள் சந்தா சாகிப்பையும், முஷபர் ஜங்கையும் ஆதரித்தனர். ஆங்கிலேயர்கள் அன்வாரூதீனையும், நாசிர் ஜங்கையும் ஆதரித்தனர்.
    • முடிவில் அன்வாரூதீன் கொல்லப்பட்டு சந்தா சாகிப் ஆட்சியைப் படித்தார். அன்வாரூதீன் மகன் முகமது அலி திருச்சி மலைக்கோட்டைக்கு தப்பியோடினார்.
    • இதன் காரணமாக சந்தா சாகிப் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழுதானூர், வில்லியனூர் மற்றும் பாகூர் ஆகிய இடங்களை வழங்கினார்.
    • நாசிர் ஜங் - முஷபர் ஜங் இருவரும் கொல்லப்பட்டதால் பிரெஞ்சு படைத்தளபதி புஸ்ஸி, சலாஃபத் ஜங் என்பவரை ஹைதராபா நிஜமாக அறிவித்தார்.
    • ஆங்கிலேயர் வலிமை இழந்து காணப்பட்ட சமயத்தில் ஆங்கில கவர்னராக ராபர்ட் கிளைவ்' பொறுப்பேற்றார்.
    • கி.பி. 1751 ல் இராபர்ட் கிளைவ் கர்நாடக நவாப் சந்தா சாகிப்பை ஆர்காடு என்னும் பகுதியில் தோற்கடித்து முகமது அலியை நவாப் ஆக்கினார்.
    • ஆற்காடு என்பது அப்போதைய கர்நாடக தலைநகர் ஆகும். எனவே ராபர்ட் கிளைவ் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டார்.
    • இந்தத் தோல்வியால் கி.பி.1754 ல் பிரெஞ்சுத் தளபதி டியூப்ளே பதவியிறக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக கோத்யூ என்பவர் தளபதியாக பதவியேற்றார்.
    • பின்னர் இப்போர் கி.பி.1755 ல் பாண்டிச்சேரி உடன்படிக்கை மூலம் முடிவுற்றது.
    • இந்த உடன்படிக்கையின் படி பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியாவில் இந்திய அரசர்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • முகமது அலி என்பவரையே ஆற்காடு நவாபாக ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் அங்கீகரித்தனர்.

    மூன்றாம் கர்நாடகப் போர் (1756-63)

    • ஐரோப்பாவில் வெடித்த ஏழு ஆண்டுப் போர் மூன்றாம் கர்நாடகப் போருக்கு காரணமாக விளங்கியது.
    • இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளை நிர்வகிக்க தளபதி கவுண்டி - டி - லாலி என்பவரை பிரான்ஸ் நாட்டு அரசு அனுப்பியது.
    • பிரெஞ்சு கவர்னர் கவுண்டி - டி - லாலி முதலில் டேவிட் கோட்டையைக் கைப்பற்றினார்.
    • பின்னர் தளபதி புஸ்ஸி என்பவருடன் இணைந்து சென்னையை தாக்க முயன்றார்.
    • இருவரும் சென்னைக்கு வந்ததும் ஆங்கிலேயர்கள் ஹைதராபாத்தில் வடசர்கார் பகுதிகளைக் கைப்பற்றினர்.
    • சென்னையில் ஆங்கிலேயர் - பிரெஞ்சுக்காரர்கள் இடையே கடும் போர் மூண்டது.
    • 1760 ல் வந்தவாசிப் போரில் ஆங்கில தளபதி சர் அயர்கூட் என்பவர் கவுண்டிலாலியையும், தளபதி புஸ்ஸியையும் தோற்கடித்தார். எனவே சர் அயர்கூட் வந்தவாசி வீரர்' என அழைக்கப்பட்டார்.
    • கி.பி. 1761 ல் பாண்டிச்சேரியை கவுண் - டி - லாலி ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்.
    • இப்போர் கி.பி. 1763 ல் பாரீஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
    • இந்த உடன்படிக்கையின் படி பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், சந்திர நாகூர், மாஹி ஆகிய பகுதிகளை திரும்பப் பெற்றாலும், அங்கே கோட்டைகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை.
    • இதனால் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரிவடைந்து ஆங்கிலேயர்கள் மட்டும் இந்தியாவில் நிலைப்பெற்றனர். இ அதன் பின்னர் பிரெஞ்சு ஆதிக்கம் முற்றிலும் வலுவிழந்தது.

    இருட்டறை சம்பவம் (1756)

    • வங்காள நவாப் அலிவர்திகான் மரணம் அடைந்த பின் அவர் பேரன் சிராஜ் - உத் - தௌலா மன்னரானார்.
    • வங்கப்பகுதியில் ஆங்கிலேயர்கள் தாம் வாங்கிய பகுதிகளில் கோட்டைகளின் உயரத்தை ஆகாஷ் உயர்த்த தொடங்கினர்.
    • சிராஜ் - உத் - தெளலா வங்காளத்தில் கோட்டையை உயர்த்த தடை விதித்து ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார்.
    • ஆனால் அதனை ஆங்கிலேயப் படைகள் தடைகளை மீறினர்.
    • இதனால் கி.பி. 1756 ஜுன் 4ம் தேதி சிராஜ் - உத் - தௌலா ஆங்கிலேயர்களின் காசிம்பஜார் பண்டகச் சாலையைக் கைப்பற்றினர்.
    • பின்னர் கி.பி 1756 ஜீன் 20ல் சிராஜ் - உத் - தெளலா போர் தொடுத்து 146 ஆங்கிலேயரை பிடித்து ஒரு இருட்டறையில் அடைத்து வைத்தார்.
    • இதில் மூச்சுத் திணறி 123 பேர் இறந்தனர். இதுவே கொல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம்' (Black Hole Tragedy) எனப்படுகிறது.

    பிளாசிப் போர் (1757)

    • இருட்டறை சம்பவத்தின் விளைவாக ஆங்கில தளபதி வாட்சன் மற்றும் இராபர்ட் கிளைவ் கொல்கத்தாவில் முகாமிட்டு சிராஜ் - உத் - தெளலாவின் படைத்தளபதி மீர்ஜாபருடன் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்துக் கொண்டனர்.
    • பின்னர் கி.பி. 1757 ல் ஜுன் 23ம் நாள் கல்கத்தாவிற்கு அருகில் பிளாசி எனுமிடத்தில் பாகிரதி நதிக்கரையில் நடைபெற்றப் போரில் ஆங்கிலேயர்கள் சிராஜ்-உத்-தௌலாவை தோற்கடித்துக் கொன்றனர்.
    • சிராஜ் - உத் - தெளலாவை கொலை செய்ய உதவிய தளபதி மீர் ஜாபரை வங்காளத்தின் நவாப் ஆக்கியதுடன் 24 பர்காணாக்களை (மாவட்டம்) பரிசாக வழங்கினர் பின்னர் கி.பி.1760ல் மீர் ஜாபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது மருமகன் மீர் காசிம் நவாப் ஆக்கப்பட்டார்.
    • மீர் காசிம் இந்திய வியாபாரிகளுக்கு சுங்கவரியை ரத்து செய்தார். இதனை விரும்பாத ஆங்கிலேயர்கள் மீர் காசிம்மை கி.பி. 1764ல் போரிட்டு விரட்டியடித்தனர்.
    • மீர் காசிம் அயோத்தி நவாப் ஷுஜா - உத் - தெளலா என்பவரிடம் அடைக்கலமானார்.

    பக்ஸார் போர்: (1764)

    • முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அயோத்தி நவாப் ஷுஜா உத் தௌலா, மீர் காசிம் மூவரும் இணைந்து ஒரு கூட்டுப்படையை உருவாக்கினர்.
    • இந்த முக்கூட்டுப்படை கி.பி. 1764 ல் அக்டோபர் 22ம் நாள் பீகார் மாநிலத்தில் பாட்னாவிற்கு மேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பக்ஸார் என்னுமிடத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டனர்.
    • இந்தப் படையை ஆங்கிலத் தளபதி மேஜர் ஹெக்டர் மன்ரோ என்பவர் தோற்கடித்தார்.
    • கி.பி. 1765 ம் ஆண்டு அலாகாபாத் உடன்படிக்கையின் மூலம் பக்ஸார் முடிவுக்கு வந்தது.

    போரின் முடிவில்: உடன்படிக்கையின்படி

    • அயோத்தி நவாப் ஷூஜா உத் தௌலா 50 இலட்சம் போர் இழப்பீடாக செலுத்த வேண்டும் .
    • மேலும் காரா மற்றும் அலகாபாத் பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • முகலாய மன்னன் 2ம் ஷா ஆலமிற்கு ஆண்டுக்கு 26 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • வங்காளம், பீகார், ஒரிஸாவில் ஆங்கிலேயர் வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றனர்.
    • பக்ஸார் போரே ஆங்கிலேயரை ஒரு உயர் அதிகாரம் படைத்த நிறுவனமாக உயர்த்தியது.
    • போரின் முடிவில் வங்காள கவர்னராக ராபர்ட் கிளைவ்' நியமிக்கப்பட்டார். (1757 - 1760).

    Share with Friends