Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) இராசபுத்திர அரசுகள் (Rajputs) Notes

காலத்தின் அடிப்படையில் வரலாறு:

  • பண்டைய காலம்
  • இடைக்காலம்
  • நவீன காலம்

இடைக்கால வரலாறு

  • இடைக்காலம் - கி.பி.8 கி.பி. 18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும்.
  • முந்தைய இடைக்காலம் - கி.பி.8 - கி.பி.13 - ம் நூற்றாண்டு வரை
  • பிந்தைய இடைக்காலம் - கி.பி. 13 - 18 - ம் நூற்றாண்டு வரை

இராசபுத்திரர்கள் காலம் (கி.பி.647 - கி.பி.1200)

இராசபுத்திரர்களின் தோற்றம்:

1. இராமன் (சூரியகுலம்) அல்லது கிருஷ்ணன் (சந்திரகுலம்) அல்லது அக்கினிக் குலம்

2. பண்டைய சத்திரியக் குடும்பம்.

3. வெளிநாட்டு மரபு.


36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள்.

வலிமை பெற்ற இராசபுத்திரர்கள்

1. அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள்

2. வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்

3. ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள்

4. டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள்

5. கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள்

6. மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்

7. பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள்

8. மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள்

9. வங்காளத்தை ஆட்சி செய்த சேனர்கள்

10. குஜராத்தை ஆட்சி செய்த சோலங்கிகள்


பிரதிகாரர்கள் (கி.பி 8 -11 நூற்றாண்டுகள்)

  • இவர்கள் கூர்ஜர மரபினர்
  • காலம் - கி.பி 8 - கி.பி 11ஆம் நூற்றாண்டு
  • தொற்றுவித்தவர் - முதலாம் நாகப்பட்டர்
  • தலைநகரம் - கனோஜ்
  • பேரரசை வலிமையுரச்செய்தவர் - வத்சராசா, இரண்டாம் நாகப்பட்டர்
  • மிகவும் வலிமையானவர் - மிகிரபோசர்
  • மிகிரபோசர் - சிந்துவின் ஜூனட் முஸ்லிம்கலின் படையெடுப்பை தடுத்தார்

மகேந்திர பாலர் (கி.பி 885-908)

  • தந்தை - மிகிரபோசர்
  • ஆற்றல்மிக்க அரசர்களுள் ஒருவர்
  • மகதம் & வங்காளத்தினை வென்றார்

பிரதிகாரர்களின் வீழ்ச்சி

  • கடைசி மன்னர் - இராஜ்யபாலா
  • பேரர்சின் பரப்பளவு குறைந்த கனோஜ் வரை மட்டுமே இருந்தது
  • கி.பி.1080 ல் முகமது கஜினி போர் தொடுத்தார்
  • போருக்குப்பின் பிரதிகாரர்கள் வீழ்ச்சியடைந்தனர்

பாலர்கள் (கி.பி 8 - 12 நூற்றாண்டுகள்)

  • கோபாலர் (கி.பி 765 - 769)
  • பாலர் மரபைத் தொடங்கியவர் கோபாலர் .
  • மகன் - தருமபாலர்

தருமபாலர் (கி . பி.76 9 - 815)

  • கோபாலருக்குப்பின் மன்னரானார்
  • இவர் பிரதிகாரர்களை வென்று கனோஜ், வங்காளம் பீகார் ஆகியவற்றைக் கைப்பற்றினார்
  • பல பௌத்த மடங்களைக் கட்டினார்
  • விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தார்

தேவபாலர் (கி.பி.815-855)

  • தந்தை - தருமபாலர்
  • அஸ்ஸாம், ஒரிசா ஆகியவற்றைக் கைப்பற்றினார்
  • இவருக்குப்பின் ஆட்சி வலிமை குன்ற ஆரம்பித்தது

மகிபாலர் (கி.பி.998-1038)

  • நாடு மீண்டும் வலிமைபெறத் தொடங்கியது
  • இறப்பிற்குப் பிறகு பாலர்வம்சம் வலிமைக்குன்றியது பாலர் மரபின் கடைசி மன்னர் கோவிந்தபாலர் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாலர் மரபு வீழ்ச்சியடைந்தது

டெல்லியை ஆண்ட தோமர்கள்

  • கனோஜ் பகுதியில் இருந்த பிரதிகாரர்களிடம் திறை செலுத்திய அரசர்கள் தோமர்கள் ஆவர்
  • பின்னர் இவர்கள் தனியரசை ஏற்படுத்தி டெல்லி நகரை கி.பி.736 ல் நிறுவினார்கள்

டெல்லி & ஆஜ்மீர் பகுதியில் சௌகான்கள்

  • பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்கள் சௌகான்கள் (கனோஜ்) ஆவர்.

கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள் (கி.பி. 1090 - 1194)

  • பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் கனோஜ் பகுதியில் தெளிவற்ற சூழல் நிலவியது. இதனைப் பயன்படுத்தி ரத்தோர்கள் கனோஜ் அரசைக் கைப்பற்றினர்

பந்தல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த சந்தேலர்கள்

  • பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9 - ம் நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்
  • சந்தேலர்களின் கடைசி அரசர் பாரமால்
  • கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும்
  • கஜுராஹோவில் பல அழகிய கோயில்களை இவர்கள் கட்டினார்கள். இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் (கி.பி. 1050) புகழ் பெற்றதாகும்

மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்

  • சிசோதிய மரபினைத் தொடங்கியவர் பாபாரவால்

மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள்

  • பரமாரர்கள் கி.பி. 10 - ம் நூற்றாண்டில் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர்

கலை மற்றும் கட்டடக்கலை

  • கஜுராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலும், கோனார்க்கில் உள்ள சூரியக்கோயிலும், அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயில் கட்டிடக் கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்.
  • ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகளும், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும் இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்
Share with Friends