Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 1st April 20 Notes


கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை

  • தென்தமிழகத்தில் மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனை, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகரான மருத்துவ வசதிகளும், பிரமாண்ட கட்டிடமும் கொண்டுள்ளது.
  • பரிசோதனையில் ‘கரோனா’ என உறுதிசெய்யப்படும் நோயாளிகள் இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கு மாவட்டநிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமரின் நிவாரண நிதி

  • பிரதமரின் நிதிக்கு ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.
  • பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.
  • மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.
  • மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல் இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன.

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.5 சதவீதம் வளா்ச்சி

  • நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி 11 மாதங்களில் இல்லாத அளவில் சென்ற பிப்ரவரியில் 5.5 சதவீதமாக அதிகரித்தது. இது, ஜனவரியில் 1.4 சதவீதமாக இருந்தது.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முக்கிய 8 துறைகளின் வளா்ச்சி 2.2 சதவீதமாக காணப்பட்டது.
  • இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில்தான் இத்துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 5.8 சதவீதமாக காணப்பட்டது. அதன் பிறகு நடப்பாண்டு பிப்ரவரியில் தான் வளா்ச்சி இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • நடப்பாண்டு பிப்ரவரியில் நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 10.3 சதவீதம், 7.4 சதவீதம், 11 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டிருந்தன.
  • இருப்பினும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு ஆகிய துறைகளின் உற்பத்தி பின்னடைவைச் சந்தித்தது. உரம் மற்றும் சிமென்ட் துறைகளின் உற்பத்தி முறையே 2.9 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டிருந்தன.
  • ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால அளவில் , 8 துறைகளின் உற்பத்தி விகிதம் 1 சதவீதமாக சரிந்துள்ளது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.2 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இதாஹோ மாகாணத்தை நிலநடுக்கம்

  • அமெரிக்காவில் இதாஹோ என்ற மேற்கு மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.
  • ரிக்டர் அளவுகோலில் இது 6.5 என்று பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இந்த பூகம்பம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதில் அருகில் உள்ள 6 மாகாணங்களிலும் உணரப்பட்டது.
  • இந்தப் பகுதியில் 1983ம் ஆண்டு பெரிய பூகம்பம் ஏற்பட்டது.

ஆந்திரா பேங்க்

  • ஆந்திரா பேங்க் சுதந்திரப் போராட்ட வீரர் போகராஜு பட்டாபி சீதராமையா என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • வர்த்தகங்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகளை 1923ம் ஆண்டு நவம்பர் 28 அன்று தொடங்கியது.
  • ஆனால் ஆந்திர வங்கி ஏப்ரல் 1ம் தேதி முதல் இல்லை.
  • ஆந்திர வங்கி மத்திய அரசின் வங்கிகள் இணைப்புத் திட்டத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • இணைப்புக்குப் பிறகு கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி வாடிக்கையாளர்கள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம்களை எந்த வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

Share with Friends