Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 10th April 20 Notes


அமேசான் மழைக்காடுகளுக்குள் புகுந்த Covid-19

  • அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளான்.
  • பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில் வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
  • தற்போது அந்தச் சிறுவன் Roraima மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரம்

  • கெயிர்சைன், உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இதன் குளிர்காலத் தலைநகரம் டேராடூன் ஆகும்.
  • நவம்பர் 9, 2000 அன்று, உத்தரகாண்ட் மாநிலமானது, இந்தியக் குடியரசின் 27வது மாநிலமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது.
  • இது பெரும்பாலும் "தேவபூமி" என்று குறிப்பிடப் படுகிறது.

உள்ளடக்கிய இணையக் குறியீடு 2020

  • பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட உள்ளடக்கிய இணையக் குறியீடு 2020 (Inclusive Internet Index) என்ற குறியீட்டில் இந்தியா 46வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • இந்தப் பட்டியல் உலகின் 100 நாடுகளைக் கொண்டு உள்ளது.
  • இந்தக் குறியீட்டில், ஸ்வீடன் முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • மிக மோசமான நிலையில், புருண்டி (100), லைபீரியா (99), மடகாஸ்கர் (98), மலாவி (97), புர்கினா பாசோ (96) ஆகிய நாடுகள் உள்ளன.

பரிசில் பதிவான வெப்பம் புதிய சாதனையாக அடையாளம்

  • 9th ஏப்ரல் 20 - நேற்றைய தினம் பரிசில் 27.1 ° C வெப்பம் பதிவானது. ஏப்ரல் மாதம் ஒன்றின் முதல் பகுதியில் பதிவாகியுள்ள அதிகூடிய வெப்பம் இதுவாகும்.
  • இதுவரை ஏப்ரல் 11 ஆம் தேதியின் பின்னரே 28°C எனும் வெப்ப எல்லை பதிவாகியிருந்தது. ஆனால் இம்முறை இரு நாட்கள் முன்பாக ஏப்ரல் 9 ஆம் தேதி 27.1°C எனும் வெப்ப எல்லையினை தொட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய சாதனையாக, 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 9 ஆம் தேதி 26.5°C வெப்பம் நிலவியிருந்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனை நேற்றைய தினம் முறியடிக்கப்பட்டுள்ளது.
  • பிரெஞ்சு வானிலை ஆராய்ச்சி மையமான Météo-France இத்தவலை வெளியிட்டுள்ளது.
  • பரிசில் இதுவரை ஏப்ரல் மாதம் ஒன்றில் நிலவிய அதிகூடிய வெப்பம் 30.2 ° C ஆகும். இந்த வெப்பம் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிவானது.,

வாட்ஸ் அப் எண் அறிவிப்பு: தேசிய மகளிர் ஆணையம்

  • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து 7217735372 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு

  • நாட்டிலேயே முதல் முறையாக, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக், ஊரடங்கை, ஏப்., 30 வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
  • ஊரடங்கை நீட்டிக்காவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, ஒடிசா மாநிலத்தில், ஏப்., 30 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதுவரை, ஒடிசாவுக்கோ, ஒடிசா மாநிலம் வழியாகவோ, ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரி களும், 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நிதி - சன் டிவி ரூ.10 கோடி

  • உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
  • இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் டி.வி. குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் பேரின் ஒருநாள் ஊதியம் ரூ.10 கோடி கொரோனா நிதிக்கு அளிக்கப்பட்டது.

ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்கள்

  • சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரம் செலவில் ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்து வருவதாக எஸ்.ஆர்.எம்.யு. நிர்வாகி கண்ணையா விளக்கம் அளித்துள்ளார்.
  • ஏற்கனவே 10,000 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் கிட்

  • "தமிழக அரசு 2,500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share with Friends