‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’
- நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2020) ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
விவசாயிகள் நிதியுதவி திட்டம்
- ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.
- சிறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
- அதன்படி நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியது. டெல்லியில் இந்த பணியை மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று தொடங்கிவைத்தார்.
- மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள 12.5 கோடி விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தது. பின்னர் இந்த திட்டம் நில அளவுகோல் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
சூப்பர் புயல்
- சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் ‘லெகிமா’ இன்று அதிகாலை 1.45 மணியளவில் சீனாவின் வென்லிங் நகரத்தில் கரையைக் கடந்தது.
உலகின் மிக உயரமான ஏரி
- நேபாளத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரி, உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெற உள்ளது.
- நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள இமயமலை பகுதியில் திலிச்சோ ஏரி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி 4 கிமீ நீளம், 1.2 கிமீ அகலம் மற்றும் சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. இதுதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி ஆகும்.
- இந்நிலையில், அதே மனாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலையேற்ற குழுவினரால் கஜின் சாரா ஏரி கண்டறியப்பட்டது.
பழுப்பு நிறப் பறவை
- எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.
காஷ்மீரின் அலுவல் மொழி
- காஷ்மீரின் அலுவல் மொழி உருது ஆகும்.ஆனால் இங்கு முக்கியமான மொழி காஷ்மீரி ஆகும்.பெரும்பாலானோர் பேசும் மொழியாக இந்தியும் இருக்கிறது.
நவாப்பூர் - ரயில்நிலையம்
- நவாப்பூர் ரயில் நிலையம், இரண்டு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளது.
- இந்த ரயில் நிலையத்தின் ஒரு பகுதி குஜராத்துக்கும் மற்றொரு பகுதி மகராஷ்டிராவுக்கும் சொந்தம்.
- அதை குறிக்கும் வகையில், நடைமேடையின் நடுவில் ஒரு வெள்ளைக்கோடு போடப்பட்டிருக்கும்.
- கோட்டின் நடுவில் இரும்பிலான ஒரு இருக்கை போடப்பட்டு, அதில் ஒரு பக்கம் குஜராத் என்றும் மறுபக்கம் மகராஷ்டிரா என்றும் அம்புக்குறி வரையப்பட்டிருக்கும்.