Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 10th December 19 Content

மனித உரிமை தினம்

  • கருப்பொருள் = “Stand Up For Human Rights” (“மனித உரிமைகளுக்காக நிற்கவும்” ).
  • ஐக்கிய நாடுகள் உலக மக்கள்அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது.
  • 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10-நாள் மனித உரிமைப் பேரறிக்கை ஐ.நா வெளியிட்டது.
  • ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 71 வது ஆண்டுவிழாவாகும்.

ராணுவ அதிகாரி - உளவு அமைப்பின் தலைவர்

  • இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவு இயக்குநராக பொறுப்பு வகித்த சுரேஷ் சலே, அந்த நாட்டின் உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்புக்கு ராணுவ அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பஞ்சகச்சம்

  • இந்தியாவின், முதல் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர், மேற்கு வங்க கவர்னர், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றிய, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை, ராஜாஜி என்றும், சி.ஆர்., என்றும் சுருக்கமாக அழைப்பர் அவருக்கு பஞ்சகச்சம் கட்டுவது தான் அவருடைய பழக்கம்.
  • அமெரிக்க நாட்டுக்கு பயணம் மெற்கொள்ளும் போது பஞ்சகச்சம் கட்டி தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.
  • பஞ்சகச்சத்தை உருவாக்கும்போது, பருத்தி துணியின் உள்பக்கமாக கம்பளி வைத்து ஒரு டெய்லரை வைத்து தைக்கச் சொல்லலாம் என்று சதாசிவத்திடம் கருத்து தெரிவித்தார்.
  • பஞ்சகச்சத்தை ரெடிமேடாக தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை முதன் முதலில் விதைத்தவர் அவர் தான்.

நோபெல் பரிசு

  • நோபெல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
  • அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு.
  • இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.
  • முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.
  • மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர்.
  • இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.

இளம் வயது பிரதமா்

  • சன்னா மரீன் - ஃபின்லாந்தில் 2015 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
  • தற்போது அவர் வடக்கு ஐரோப்பிய நாடான ஃபின்லாந்தின் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
  • இவா்தான், உலகின் தற்போதைய பிரதமா்களிலேயே மிகவும் இளைய வயதுடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித மேம்பாட்டு குறியீடு - 2019

  • நீண்ட நாள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு, எளிதில் தகவல்கள் கிடைப்பது, வாழ்வதற்கான வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் மனித வள மேம்பாட்டு குறியீடு கணக்கிடப்படுகிறது.
  • ஐ.நா. அமைப்பின் பிரிவான ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்து மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
  • ஐ.நா. மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசையில் இந்தியா ஓரிடம் முன்னேறி 130-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

‘Iron Union 12’

  • ‘Iron Union 12’ - என்பது UAE மற்றும் US-ன் தரைப்படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
  • போர் மற்றும் திட்டமிட்ட திறன்களை மேம்படுத்த இரு தரப்பினரும் கூட்டு இராணுவ ஒத்துழைப்பில் பங்கேற்பதை ‘இரும்பு யூனியன் 12’ கண்கானிக்கும்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

  • மக்களவையில் கடும் அமளிக்கிடையே 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது.
  • பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் நேற்று செய்தார்.
  • அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.
  • காங்கிரஸ், மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்த மசோதா தேவைப்பட்டிருக்காது என்றும் அமித்ஷா கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பிற்கு எதிரானது என கூறி, மசோதாவை அறிமுகப்படுத்த காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் மஜ்லீஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • நிறைவில் நள்ளிரவு 12 மணி அளவில் 311 ஆதரவு வாக்குகள் மற்றும் 80 எதிர்ப்பு வாக்குகளுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அழகாக விளக்கி, நிறைவேற்றியதற்கு அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார்.
  • மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு பாஜக-வுக்கு போதிய பலம் இல்லாததால் அதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உதவியை பாஜக நாடியுள்ளது.
Share with Friends