மரக்கோதுமை
- மரக்கோதுமை பற்றிய நான்கு நாள் நடைபெறக் கூடிய சர்வதேசக் கருத்தரங்கானது மேகாலயாவில் நடத்தப்பட்டது.
- இக்கருத்தரங்கின் கருப்பொருள் "உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்துப் பாதுகாப்பிற்கான உணவு முறைகளை பல்வகைப்படுத்துதல்" என்பதாகும்.
- மரக்கோதுமை ஒரு குறைந்த உள்ளீட்டுப் பயிராகும். இது குறைசத்து கொண்ட மண்ணில் (தரம் குறைந்த மண்ணில்) கூட அதிக மகசூலைத் தருகின்றது.
- இது மண்ணிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை சேர்க்கின்றது. எனவே இது ஒரு நல்ல நிலவளங் காப்புப் பயிர் அல்லது சுழற்சிப் பயிராக இருக்கின்றது.
- இது பெரும்பாலான தானிய வகை நிலவளங் காப்புப் பயிர்களை விட சிறந்த முறையில் மண்ணிலிருந்துப் பாஸ்பரஸைப் பிரித்தெடுக்கின்றது.
“சிறந்த தூய்மையான இடம்”
- மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவின் இரண்டாவது “சிறந்த தூய்மையான இடமாக” (சுத்தமான இடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி ஆணையரான எஸ்.விசாகன் சமீபத்தில் புது டில்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத்திடமிருந்து இதற்கான விருதைப் பெற்றார்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட “சிறந்த தூய்மையான இடங்கள்” என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசால் பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர் உச்சி மாநாடு - 2019
- உத்தர காண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிடிரோம் என்ற இடத்தில் நாட்டின் முதலாவது ஹெலிகாப்டர் உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
- இந்த உச்சி மாநாடானது “ஹெலிகாப்டர்கள் மூலம் இணைப்பை விரிவுபடுத்துதல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் பட்டது.
- மேலும் இந்த உச்சி மாநாட்டில் (Indian Air Force - IAF) ‘மெடேவக்கில் (தேசிய அளவில் மருத்துவ முகாம்) இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களின் பங்கு’ குறித்து பேசுவதற்காக இந்திய விமானப் படையும் அழைக்கப்பட்டது.
உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெண் தலைவர்
- நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்த உலகின் பிரபல பெண் தலைவர்கள் பற்றி ‘விக்கிலீக்ஸ்’ ஆய்வு மேற்கொண்டது. இதில் இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரை முந்தி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சாதனை படைத்துள்ளார்.
- ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் 2005-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்னும் பதவியில் நீடிக்கிறார்.
- இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 11 ஆண்டுகள் 208 நாட்கள் ஆட்சியில் இருந்தார். இந்திரா காந்தி பல்வேறு காலகட்டங்களில் மொத்தம் 15 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தார். சந்திரிகா குமாரதுங்கா இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளில் 11 வருடங்கள் 7 நாட்கள் இருந்துள்ளார்.
- ஷேக் ஹசீனா முதல் முறையாக 1996-2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிபெற்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக பதவி ஏற்றார்.
- ஏற்கனவே 15 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், இப்போது 4-வது ஆட்சியில் ஒரு ஆண்டை நெருங்கி, 16-வது ஆண்டில் உள்ளார்.
- செயின்ட் லூசியாவை கவர்னர் ஜெனரல் பியர்லெட் லூசி 20 ஆண்டுகள் 105 நாட்கள் ஆட்சி செய்து முதலிடத்தில் இருந்தாலும் அவர் உலகின் பிரபல தலைவராக இல்லை.
- ஐஸ்லாந்து தலைவர் விக்டிஸ் பின்போகாடோத்திர் (16 ஆண்டுகள்), டோமினிகா பிரதமர் உசெனின் (14 ஆண்டுகள் 328 நாட்கள்), அயர்லாந்து ஜனாதிபதி மேரி மெகாலீஸ் (14 ஆண்டுகள்) ஆகியோரும் பிரபல தலைவர்கள் பட்டியலில் இல்லை.
இமயமலை நாள்
- இமயமலை நாள் 2019 செப்டம்பர் 9 அன்று அனுசரிக்கப்பட்டது.
- இது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) ரூர்க்கியின் பயோடெக்னாலஜி துறையின் பயோடெக் ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது.
- இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
சரலா புராஸ்கர் விருது
- சரலா புராஸ்கர்: இந்த விருது 1979 ஆம் ஆண்டில் ஒடியா தொழிலதிபர் மறைந்த பன்சிதர் பாண்டா மற்றும் மறைந்த இலா பாண்டா ஆகியோரால் நிறுவப்பட்டது மற்றும் இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் (ஐஎம்எஃப்ஏ லிமிடெட்) இன் தொண்டு நிறுவனமான இந்தியன் மெட்டல்ஸ் பப்ளிக் நற்பணி மன்றம் (IMPACT) வழங்கியுள்ளது.
"நிதி ஆயோக்"
- நிதி ஆயோக் - தலைமையகம்- புது தில்லி. தலைவர்- நரேந்திர மோடி. தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) - அமிதாப் காந்த்.
- சமீபத்தில் ஜூன் 2019 இல், அமிதாப் காந்திற்கு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021 ஜூன் 30 வரை 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டது.