இந்திய நாட்டிய விழா
- தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சி, வரும் 21-ம் தேதி கடற்கரை கோயில் வளாகத்தில் தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
"பாரத ரத்னா"
- பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
- இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
- இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது.
- எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பலை அவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1998 ஆம் ஆண்டு கலை துரையில் படைத்த சாதனைக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவரான சி. சுப்பிரமணியம் அதே ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
தலைமை ராணுவ அதிகாரி - பி.என்.ராவ்
- தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
- இவா் இந்திய ராணுவ அகாதெமியின் பாராசூட் படை வகுப்பு அணியின் 5-ஆவது படைப்பிரிவில் டிசம்பா் 1982-இல் பணியில் சோ்ந்தாா். மரியாதை வாளுக்கான விருதையும், யுத்த சேவை பதக்கம் மற்றும் சேனா பதக்கத்தையும் பெற்றவா்.
- பல்வேறு படைப்பிரிவுகளில் அனுபவம் பெற்ற நாகேஷ் ராவ், ஆபரேஷன் புளு ஸ்டாா், ஆபரேஷன் விஜய் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவா் ஆவாா்.
ஊட்டி மரவியல் பூங்காவில் குறிஞ்சி மலர்
- நீலகிரி மலைச்சரிவுகளில், ஒன்று முதல் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மினியேச்சர் குறிஞ்சி முதல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி மலர் வரை, 38 வகையான குறிஞ்சி மலர்கள் மலர்கின்றன.
- இங்குள்ள, மூக்கூர்த்தி தேசிய பூங்காவில், கடந்த வாரம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.ஆனால் இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதி.
- இந்நிலையில், ஊட்டி மரவியல் பூங்காவில், முதன் முறையாக, குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
தெற்காசிய விளையாட்டுப் போட்டி
- பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
- இது முந்தைய 2016 போட்டிகளைக் காட்டிலும் 3 பதக்கங்கள் கூடுதலாகும்.
- 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
- இந்திய அணி தொடர்ந்து 13-ஆவது முறையாக தெற்காசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- சோனியா 57 கிலோ, பிங்கி ராணி 51 கிலோ, மஞ்சு 64 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவர் 69 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷண் தங்கம் வென்றார்.
- சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் 91 கிலோ நரீந்தர், 52 கிலோ பிரிவில் ஸ்பர்ஸ் குமார் தங்கம் வென்றனர். எனினும் 60 கிலோ பிரிவில் வரீந்தர் சிங் தோல்வியுற்று வெள்ளி வென்றார்.
பி.எஸ்.எல்.வி.சி.-48 ( pslv c48) ராக்கெட்
- ஶ்ரீஹரிகோட்டா: அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
- ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தும் 75-வது ராக்கெட்.
- பி.எஸ்.எல்.வி.சி-ன் 50-வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இஸ்ரோவின் ரிசார்ட்-2 பிஆர்-1 மற்றும் 9 வர்த்தக செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தது. இன்று பகல் 3.25 மணிக்கு விண்ணில் இது செலுத்தப்பட்டது.
- இஸ்ரோவின் ரிசார்ட்-2 பிஆர்-1 என்பது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். பூமியில் இருந்து 576-வது கி.மீட்டரில் இந்த செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மலை தினம்
- சர்வதேச மலை தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் டிசம்பர் 11 அன்று நடத்தப்படுகிறது.
- மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2022 ஆம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு இத்தினத்தை உருவாக்கியது.
- இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு அகில உலக மலைகள் ஆண்டு என்று ஐ.நா. சபை அறிவித்தது.
- அந்த ஆண்டை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு யுனஸ்கோ, டிசம்பர் 11 ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.
- அன்று முதல், டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செய்தி துளிகள் முதல் சர்வதேச நாள் முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- 2019 சர்வதேச மலை தினத்திற்கான தீம் “இளைஞர்களுக்கான மலைகள்” “Mountains Matter for Youth”
சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி
- சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882ம் ஆண்டில் பிறந்தார்.
- பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
- இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
- தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
- எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
- இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
- பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர்.
- இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
- செப்டம்பர் 11, 1921
இறப்பு
விசுவநாதன் ஆனந்த் பிறந்த தினம்
-
பிறப்பு:
விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11, 1969 ம் ஆண்டில் பிறந்தார். - விஸ்வநாதன் ஆனந்த் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார்.
- FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
- உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.