Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 11th February 20 Content

காவிரி டெல்டா பிராந்திம்

  • காவிரி டெல்டா பிராந்தியத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு விவசாய மண்டலமாக அறிவிக்க தமிழக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இதை பிப்ரவரி 9, 2020 அன்று மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

‘கபிந்த்ரா’

  • பூமிக்கு திரும்பும் ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க ‘கபிந்த்ரா’ என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி-யை சேர்ந்த பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • சமீபத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் DRDO) நடத்திய புதுமையான கண்டுபிடிப்பு தொடர்பான போட்டியில் கபிந்த்ரா தொழில்நுட்பம் முதல் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது

  • சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் என்ற தென் கொரிய படம் வென்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
  • சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
  • சிறந்த இயக்குநா்: போங் ஜுன் ஹோ, பாராசைட்
  • சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ், ஜோக்கா்
  • சிறந்த நடிகை: ரென்னிஜெஸ்வேகா், ஜூடி
  • சிறந்த குறும்படம்: த நெய்பா்ஸ் விண்டோ
  • சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4
  • சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்

நீர் மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி!

  • 'கேர் எர்த் டிரஸ்ட்' மற்றும் அமெரிக்காவில் உள்ள 'ஸ்மித்ஸோனியன்' பயண கண்காட்சி சேவை அமைப்புடன் இணைந்து நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சியை அமெரிக்க துணை தூதரகம் சென்னையில் நடத்துகிறது.
  • இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடந்தது.
  • இதனை அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ், தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • இதையடுத்து நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

  • பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் போயிங்-747 ரக பயணிகள் விமானம் சனிக்கிழமையன்று இரவு நியூயார்க்கில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது.
  • மணிக்கு 800 மைலுக்கும் அதிகமான வேகத்தில் பயணித்த இந்த விமானம், 4 மணி நேரம் 56 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது.
  • வழக்கமாக நியூயார்க்கில் இருந்து லண்டன் வருவதற்கு 6 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும்.
  • பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்திற்குள் கடந்தது புதிய சாதனை ஆகும்.
  • அதுவும் அதிவேகமாக காற்று வீசிய நிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு 2018ல் நார்வே விமானம் 5 மணி 13 நிமிடங்களில் அட்லாண்டிக் கடலை கடந்ததே சாதனையாக இருந்தது.
Share with Friends