அம்மா திருமண மண்டபங்கள்
- சென்னையில் மூன்று இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
- இது கொரட்டூர், வேளச்சேரி மற்றும் அயப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
- இது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
- வீட்டு வசதி மற்றும் நகாப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் – ராஜேஷ் லக்கானி
குதுப் சாஹி கல்லறை
- தெலங்கானாவில் உள்ள பாரம்பரியச் சின்னமான குதுப் சாஹி கல்லறை அமெரிக்கா சாா்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியில் புனரமைக்கப்பட்டது.
- தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் குதுப் சாஹி கல்லறை அமைந்துள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.
- இதில் புகழ்பெற்ற நடனக் கலைஞா்களான தாராமதி, பிரேமாமதி ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ளன. அவற்றைப் புனரமைப்பதற்காக அமெரிக்கா சாா்பில் ரூ.7.21 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
- துப் சாஹி கல்லறைப் பகுதியிலுள்ள நினைவுச் சின்னங்களை ஆவணப்படுத்தும் பணிக்காக ரூ.7.07 லட்சத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.
'சஹ்யாத்ரி மேகா' - சிவப்பு நெல் வகை
- நெல் சாகுபடி குறைவதைத் தடுக்கும் பொருட்டு, கர்நாடகாவின் சிவமொகாவில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக் கழகமானது (University of Agricultural and Horticultural Sciences - UAHS) 'சஹ்யாத்ரி மேகா' என்ற ஒரு புதிய சிவப்பு வகை நெல் வகையை உருவாக்கியுள்ளது.
- இந்த வகையானது வெடிப்பு நோயை எதிர்க்கும் தன்மை உடையதாகவும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது, இந்தப் புதிய வகையானது மாநில அளவிலான துணை விதைக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
- மேலும் இது வரும் காரீப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்கும். புதிய வகையை மேம்படுத்துவதற்கான மற்றொரு நோக்கம் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார ஆர்வமுள்ள நுகர்வோரால் நுகரப்படும் நார் மற்றும் புரதம் நிறைந்த சிவப்பு அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.
'கிஷோரி சக்தி காரியகிரம்'
- ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பதினான்கு பதின்ம வயதுப் பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தன்று 'கிஷோரி சக்தி காரியகிரம்' என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
- இது நகரின் சேரிப் பகுதிகளில் வாழும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
- இந்த ஆர்வலர்கள் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
- இந்தப் பிரச்சாரமானது இளம் பருவத்தினருக்கும் சமூகத்திற்கும் மாதவிடாய், திருமணத்திற்கான சரியான வயது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளில் இடைநின்ற பெண்களை மீண்டும் அவற்றைத் தொடர ஊக்குவித்தல், பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் இளம் பருவக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முகேஷ் அம்பானி இரண்டாம் இடம்
- உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
- ஒபெக் (OPEC) கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ரஷ்யா கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரித்து விலையை குறைக்க ரஷ்யா அறிவித்தது.
"தூய தமிழ்ப் பற்றாளர்'
- தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் "தூய தமிழ்ப் பற்றாளர்' விருதுக்கு மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
- நடைமுறையில் மக்களிடம் பொது பயன்பாட்டில் தூய தமிழை பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பரிசு திட்டம் ஒன்றை அறிவித்தது.
- அதன் அடிப்படையில், கோவையை சேர்ந்த கல்வியியல் பட்டதாரி சி.மணிகண்டன், அரசு பள்ளியில் இரவு காவலராக இருந்த இரா.அரிதாசு மற்றும் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் த.ஆரோக்கிய ஆலிவர் ராசா ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளது.