Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 12th December 19 Content

கிரிகோரியன் நாட்காட்டி

  • டிசம்பர் 12 என்பது கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆண்டின் 346 ஆவது நாள் ஆகும். ஆண்டின் இறுதிவரை 19 நாட்கள் எஞ்சி இருக்கும்.

டெல்லி - இந்தியாவின் தலைநகராக மாறியது

  • தேசியவாதிகளின் உணர்வை மதிக்கும் பொருட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் 1911 ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு பதிலாக டெல்லியை தலைநகரமாக மாற்ற முடிவு செய்தது.
  • அப்போது வைஸ்ராய் யாக இருந்த லார்ட் கர்சன், இந்த நடவடிக்கையை விமர்சித்தார் பின்னர் எட்வின் லுடென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் கட்டியெழுப்பப்பட்ட கட்டிடக்கலை மற்றும் திட்டமிடலுடன் புது டெல்லி தோன்றியது.
  • பிப்ரவரி 13, 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் புது தில்லியை இந்தியாவின் தலைநகரமாக அறிவித்தார்.
  • இந்நகரம் இன்று வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்து வருகிறது.

முதல் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன்

  • டிசம்பர் 12, 1901 இல், மார்கோனி முதல் முறையாக வயர்லஸ் டிரான்ஸ்மிஷனை அண்டார்டிக் பெருங்கடலில் 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்தின் கார்ன்வால் நகரிலிருந்து கனடாவின் நியூ பௌன்லாந்து வரை அனுப்பினார்.
  • இந்த டிரான்ஸ்மிஷன் Morse Code -குறியீட்டின் அடிப்படையில் செலுத்தப்பட்டது.
  • அதாவது அதில் S என்ற வார்த்தைக்கு மூன்று புள்ளிகளைக் கொண்டிருக்கும் கடிதம் என்பது பொருளாகும்.

யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம்

  • யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது மற்றும் இது உலக சுகாதார அமைப்பால் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு மலிவு, தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்று அழைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் ஒருமித்த தீர்மானத்தின் ஆண்டு நிறைவு டிசம்பர் 12 ஆகும்.

சர்வதேச நடுநிலைமை நாள்

  • டிசம்பர்12-ஆம் நாள் சர்வதேச நடுநிலைமை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது நாடுகளுக்கிடையே நடுநிலைமைத்தன்மை மற்றும் அனைத்து விதமான போர் பங்கேற்புகளையும் தவிர்த்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஐ. நா சபையால் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐ.நா பொதுச்சபையானது 2017 பிப்ரைரி 2 அன்று சர்வதேச நடுநிலைமை தினமாகச் டிசம்பர்12-ஐ அறிவித்தது.

பயோ ஏசியா 2020

  • பயோ ஏசியா 2020 இன் பங்குதாரராக சுவிட்சர்லாந்து 2019 பிப்ரவரி 17-19 தேதிகளில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
  • இந்நிகழ்ச்சியை ஆசிய பயோடெக் சங்கம் மற்றும் தெலுங்கானா அரசு கூட்டமைப்பு ஏற்பாடு செய்து வருகின்றன. பயோ ஏசியா 2020 இன் தீம் “இன்று நாளை”.

“காலநிலை ஸ்மார்ட் விவசாய முறைகள்”

  • புது தில்லியில் மூன்று நாள் “காலநிலை ஸ்மார்ட் விவசாய முறைகள் பற்றிய சர்வதேச கருத்தரங்கு” நடைபெறுகிறது. இது டிசம்பர் 11, 2019 அன்று திறக்கப்பட்டது. இந்த கருத்தரங்கை வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

சர்வதேச கூடைப்பந்து நடுவர்

  • சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்த துரைராஜ் ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021 வரை பணியாற்ற முடியும்.
  • 10வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் நடுவராக பணியாற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவில் இருந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு நடுவராக பணியாற்றினார்.

முதல் இந்திய பெண் நடுவா்

  • கிரிக்கெட் போட்டியில் நடுவராக பணிபுரியவுள்ள முதல் இந்திய பெண் நடுவா் என்ற சிறப்பை பெறுகிறாா் ஜி.எஸ்.லட்சுமி.
  • 2019 மே மாதம் சா்வதேட நடுவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்ட முதல் பெண் நடுவா் லட்சுமி, அக்டோபரில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நடுவா் ஆவாா். தற்போது முதன்முறையாக ஆடவா் ஒருநாள் சா்வதேச போட்டியின் முதல் இந்திய பெண் நடுவராக செயல்பட உள்ளாா்.

இந்தியா திறன் அறிக்கை

  • தொழில்முறை திறன் பெற்றவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள் என்று இந்தியா திறன் அறிக்கை கூறியுள்ளது.
  • இந்த அறிக்கையை வீபாக்ஸ், பீப்பிள் ஸ்ட்ராங், சிஐஐ வெளியிட்டுள்ளது. முன்னதாக, தொழில்முறை பட்டம் பெற்றவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் வேலையில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. திறமை விநியோகத்தில் ஒட்டுமொத்த நேர்மறையான போக்கு இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
  • கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 47% பேர் 2019 ஆம் ஆண்டில் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் அல்லது வேலைகளை எடுக்கத் தயாராக உள்ளனர். 2014 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு விகிதம் 33.9% மட்டுமே.
Share with Friends