Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 12th January 20 Content

‘மகா மேளா’

  • உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறக்கப்பட்டுள்ளது.
  • ராம நாம சேவா சன்ஸ்தான் என்ற அமைப்பு, ராம பக்தர்களுக்காக ‘ராம நாம’ வங்கியை நடத்தி வருகிறது. இது, மற்ற வங்கிகளைப் போல், ஏ.டி.எம்.கள், காசோலைகள் கொண்டது அல்ல. ராமர் பெயர்தான், அதன் ஒரே பணம்.
  • ஒரு நோட்டில் ராமர் பெயரை எத்தனை தடவை எழுதிக் கொடுக்கிறார்களோ, அத்தனை ராமர் பெயர்கள், அவர்களது வங்கிக்கணக்கில் சேரும்.
  • இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சங்கம் பகுதியில் புகழ்பெற்ற ‘மகா மேளா’ தொடங்கி உள்ளது. அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‘ராம நாம’ வங்கியின் தற்காலிக கிளை தொடங்கப்பட்டுள்ளது.
  • சிவராத்திரியுடன் மகா மேளா முடிவடையும்போது, தற்காலிக வங்கியும் மூடப்பட்டு விடும் என்று ராமநாம சேவா சன்ஸ்தான் தலைவர் அசுதோஷ் வர்ஷ்னே தெரிவித்தார்.

சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்

  • கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
  • கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

நாசா

  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2017-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக ஒரு தேர்வை நடத்தியது.
  • இதில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்வு செய்து கடந்த 2 வருடமாக நாசா பயிற்சி அளித்து வந்தது.
  • அந்த பயிற்சியில் மொத்தம் 11 பேர் வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர்.
  • இந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர்.
  • இவரது தந்தை நிவாஸ் சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
  • ஹைதராபாதில் இன்ஜினீயரிங் படித்து முடித்த அவர் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்.

தேசிய இளைஞர் நாள்

  • சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • 1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ICC-T20 பேட்ஸ்மேன்கள் பட்டியல்

  • ஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய தொடக்க வீரா் லோகேஷ் ராகுல் 6-ஆவது இடத்தில் உள்ளாா். அதே நேரம் கோலி 9-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.
  • பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாக். வீரா் பாபா் ஆஸம் முதலிடத்தில் உள்ளாா்.
  • அவருக்கு ஆடுத்து ஆஸி. வீரா் ஆரோன் பின்ச், இங்கிலாந்து டேவிட் மலான், நியூஸி. காலின் மன்றோ, ஆஸி. வீரா் மேக்ஸ்வெல் ஆகியோா் உள்ளனா். 6-ஆவது இடத்தில் லோகேஷ் ராகுல் உள்ளாா்.

தேசிய சீனியர் ஹாக்கி

  • 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டி சென்னையில் நடைபெற்றுவருகிறது.
  • இந்த போட்டியில் தமிழக அணி 13க்கு 1 என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தியது.
  • தமிழக அணி வரும் 13ஆம் தேதி புதுச்சேரியை எதிர்கொள்கிறது.

தமிழ்நாடு - ஹாக்கி

  • ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேணுகா லட்சுமி, தொழிலதிபர்கள் ஆரோக்கியசாமி (அன்னை எண்டர்பிரைசஸ்), வி.முருகன் (வினாயகா மைன்ஸ் நிறுவனம்) ஆகியோர் பரிசளித்தனர்.
Share with Friends