Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 13th August 19 Content

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

  • ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது.
  • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.
  • ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார்.
  • இதனால் முதல் செட்டை 6 – 2 என எளிதில் கைப்பற்றினார்.இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார்.
  • ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
  • இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
  • இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

REGN-EB3 & mAb114

  • REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள், 'எபோலா' வைரஸ் வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை நடுநிலையாக்குகின்றன.
  • இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், 'எபோலா' விரைவில் "தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய" நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு , ’எபோலாவு’விற்கு எதிரான போராட்டத்தில் இது "மிகவும் நல்ல செய்தி" என அறிவித்துள்ளது.
  • ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில் குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால் விலக்கப்பட்டுள்ளன.

கல்கத்தா - ‘மம்மி’

  • எகிப்து நாட்டில் பண்டைய காலங்களில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்கள் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்துள்ளனர்.
  • அவைகளை ‘மம்மி’ என்று அழைக்கிறோம்.
  • கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • அந்த ‘மம்மி’யை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் செப்டம்பர் 14, 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது.
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ்; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதி.

கிரீன்லாந்து சுறா

  • டக்கு அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் மீனவர்கள் சமீபத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
  • குழுவாக சென்ற 28 கிரீன்லாந்து சுறாக்களில் ஒன்று அவர்கள் வலையில் பிடிபட்டது.
  • ஆய்வு செய்ததில் அதன் வயது 512 என தெரிய வந்தது. கிரீன்லாந்து சுறாக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. அளவே வளரும்.
  • இவை பல நூறு ஆண்டுகள் வரை வளரும் தன்மை கொண்டவை. நிபுணர்கள் ஆய்வு செய்ததில் இதன் நீளம் 18 அடி என கண்டறியப்பட்டு உள்ளது.
  • இதனடிப்படையிலும், ரேடியோ கார்பன் முறைப்படியும் இதன் வயது 272 முதல் 512 வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இந்த சுறா பூமியில் மிக வயது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினம் ஆகும்.
  • இதனால் அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டது, நெப்போலியன் போர்கள் மற்றும் டைட்டானிக் கப்பல் மூழ்கியது உள்ளிட்ட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தபொழுது இந்த சுறா கடலில் சுற்றி வந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • இந்தியாவில் அக்பர் வாழ்ந்த காலத்திற்கும் முந்தைய காலத்தில் இருந்து இந்த கிரீன்லாந்து சுறா வாழ்ந்து வந்துள்ளது.
Share with Friends