ஆஸ்கர் விருது
- உலக சினிமாக்களில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர்.
- 90 ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- 24 பிரிவுகளின் கீழ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு போன்ற பல்வேறு பிரிவினருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பெண் விண்வெளி வீராங்கனை
- மொக்பெலி - இவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான, ௧௫0 தாக்குதல்களில், ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் பைலட்டாக மொக்பெலி பணியாற்றி உள்ளார்.
- ஈரான் வம்சாவளியை சேர்ந்த முதல் விண் வெளி வீராங்கனையாகவும் தேர்வு பெற்றுள்ளார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான, ௧௫0 தாக்குதல்களில், ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் பைலட்டாக மொக்பெலி பணியாற்றி உள்ளார்.
- தற்போது அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாவும் தேர்வாகி உள்ளார்.
இந்திய கடலோர காவல் படை
- கடந்த 1978-ம் ஆண்டு ஆகஸ்டில் கடலோர காவல் படை தொடங்கப்பட்டது.
- இதில் 15,714 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- 175 கப்பல்கள், ரோந்து படகுகளும் 44 கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்களும் உள்ளன.
- தற்போது இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Popocatepetl எரிமலை
- போபோகேட்பெடல் ((Popocatepetl)) மெக்சிகோ நாட்டிலுள்ள ட்லாமாகாஸ் (TLAMACAS) பகுதியிலிருக்கும் எரிமலையாகும்.
- இது மெக்சிகோவிலிருக்கும் எரிமலைகளில் 2ஆவது மிகப்பெரிய எரிமலை.
- அந்த எரிமலை வெடித்து சிதறி வருகிறது.
- அதிலிருந்து வானத்தை நோக்கி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாம்பல், நெருப்பு குழம்பு, பாறைகள் உள்ளிட்டவை வீசப்பட்டு வருகின்றன.
சூசாக் விழா
- கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
"எசிகோ" ரோந்து கப்பல்
- இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, 2006ல், கையெழுத்தான ஒப்பந்தப்படி, இரு நாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள், ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- இந்தாண்டு, 19வது முறையாக, கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான, எசிகோ என்ற ரோந்து கப்பல், கேப்டன் கியோஷி ஹரடா தலைமையில், 60 வீரர்களுடன், நேற்று சென்னை துறைமுகம் வந்தது.
- ஐந்து நாள் பயணமாக வந்துள்ள கப்பலை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள், இருநாட்டு கொடிகளை அசைத்தபடி வரவேற்றனர்.
Sea Guardians
- சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு அரேபியக் கடல் பகுதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் ஒரு கடற்படைப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
- இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு "கடல் பாதுகாவலர்கள்" (Sea Guardians) என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து வித வானிலை சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் உத்திசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எரிசக்தி திறன் குறியீடு 2019
- மத்திய சக்தி மற்றும் புதிய மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல் திறன் மேம்பாட்டு & தொழில் முனைவு அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங் மாநில எரிசக்தி திறன் குறியீடு 2019 டெல்லியில் வெளியிட்டார்.
- 97 குறிகள் அடிப்படையாக கொண்டு 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் எரிசக்தி திறன் முயற்சிகளின் முன்னேற்றத்தை இந்த குறியீடு கண்காணிக்கிறது.
- சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் ஹரியானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சலபிரதேசகம், உத்தரகாண்ட், பாண்டிச்சேரி மற்றும் சண்டீகர்.