ரெய்ஸினா டயலாக் 2020
- 13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு டெல்லியில் நாளை நடக்கிறது.
- இந்த மூன்று நாள் நிகழ்வில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
- மேலும் துணை வெளியுறவு அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், ராணுவத் தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பார்கள் என வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தலைமைத் தளபதி கரன்பீர் சிங் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் படைத் தளபதிகளும் பங்கேற்க உள்ளனர். image 1
"பசிபிக் நெருப்பு வளையம்" (Pacific Rings Of Fire)
- பூமியில் உள்ள எரிமலைகளில் 75% எரிமலைகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அமைந்திருக்கின்றது.
- இந்த பகுதியில் தான் 90% நிலநடுக்கங்களும் நிகழ்வதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- குதிரையின் லாட வடிவில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைப் பகுதியை "நெருப்பு வளையம்" (Rings Of Fire) என்று அழைக்கின்றனர்.
- Pacific Ring of Fire என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.
- இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.
H9N2
- இந்தியாவில் மனிதர்களுக்கு புதுவகையான எச்9என்2 வைரஸ் மூலம் புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- மஹாராஷ்டிரா மாநிலத்தில் H9N2 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . முதன்முதலாக இந்த அரிய வகை வைரஸ் இந்தியாவில் மனிதர்களில் கண்டறியப்பட்டுள்ளது.
- H9N2 என்னும் அரிய வகை வைரஸ் மூலம் பரவக்கூடும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது பறவைக் காய்ச்சல், மஹாராஷ்டிராவில் 17 மாத குழந்தையை தாக்கியுள்ளது. H9N2 என்னும் வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸின் துணை வகையாகும். இந்த வைரஸ் ஹியூமன் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பறவை காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.
பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி
- பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி கிழக்கு அண்டார்டிக்காவில் உள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பகுதி சுமார் 3.5 கிலோமீட்டர், அதாவது கடல்மட்டத்திலிருந்து 11,500 அடி ஆழத்தில் இந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. image 2
செரினா வில்லியம்ஸ்
- ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னீஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.